வெள்ளி, 21 மே, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

இன்னும் சில தினங்கள்

நிகழ்வுகள் எல்லாம் நினைவுகளாகிவிடும்.

அவரவர்க்கென்று தனித் தனி உலகங்கள்

எதிர்படும்போதில் அறிந்துகொண்டால்

புன்னகைக்கலாம்

சலனமின்றியும் கடந்துகொள்ளலாம்

அவ்வளவே மூன்றாண்டுகளின்

கனம்.

பரஸ்பர நல விசாரிப்புகளென்பது

அன்றாட அவஸ்தைகளுக்கிடையில்

 வானம் பார்ப்பது போலத்தான்...

***************************************************

வாடிய

வாடும் ரோஜாக்கள்

நிறமிழக்க ஆரம்பித்திருக்கும்

வாழ்த்து அட்டைகள்

தூசு குந்தியிருக்கும்

 சேகரித்த புத்தகங்கள்

புரட்ட நினைவூட்டும்

கவிதைக் குறிப்புகளென

எப்படியோ நிரம்பிவிடுகிறது

நமக்கிடையேயான எல்லாமும்

குறிப்பு : இதற்கு நீ பதிலி என்று பெயரிட்டுக்கொள்ளலாம்.

4 கருத்துகள்:

தாரணி பிரியா சொன்னது…

ஆட்டோகிராப் கவிதைகளா:) நல்லா இருக்குங்க‌

சு.சிவக்குமார். சொன்னது…

ஆமாம் தாரணி ப்ரியா..படிக்கிற காலத்தில எழுதினது.சும்மா அப்படியே பதிவிட்டு வைந்திருந்தால் இன்னொரு நாளைக்கு ஒரு நல்ல கவிதையை எழுதறப்போ(அப்படீன்னு நாமளே நினைக்கிறப்போ) எவ்வளவு தூரம் நாம தள்ளி வந்திருக்கோம்னு தெரிஞ்சுக்கலாம் இல்லையா,அதான்.

cheena (சீனா) சொன்னது…

பழையன படித்து, மகிழ்ந்து, அசை போட்டு, ஆனந்தித்து, எத்தரௌணத்தில் எழுதியதோ - அத்தருணத்தை நினைத்து .............

நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.சீனாவிற்கு : நன்றி,நன்றி,நன்றி...