இவரை எப்படி,எப்பொழுது படித்தேன் என்று ஞாபகமில்லை.ஆனால் இவரை படித்தபோதில் எனக்கு ஆன்மீகத்திலும் பெரிதாக நாட்டமில்லை..ஆனால் இன்று நிறைய உண்டு.
அந்த சமயத்தில எனக்கு இருந்த ஒரே ஒரு தீவிரமான செயல் வாசிப்பு.கையில எது கிடைச்சாலும் படிக்கிறது. என்ன ஒரே ஒரு நிபந்தனை,படிக்கிற விசயங்களில் ஒரு தொடர்ச்சி(flow) இருக்கவேண்டும்.
அந்த மாதிரி எப்பவோ ஒரு நாள் எதேச்சையாக கிடைத்த புத்தகம் தான் ஒஷோவின் புத்தகம். நிறையப் பேர் சொன்ன விஷயம் புரியுதோ, இல்லையோ ஆனா படிக்கிறதுக்கு நல்லா இருக்குது அப்படீன்னாங்கா...
சரி கழுதைய, அப்படி என்னதா அதுல இருக்குதுன்னு பார்க்கலாமுன்னு படிச்சேன். முதல்ல எடுத்தவுடனேயே அந்த புத்தகம் எனக்கு பிடிக்க காரணம் அது ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் மாதிரி இல்லாம தமிழில் எழுதுனா புத்தகம் மாதிரியே இருந்தது. அப்புறம் எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப போட்டு குழப்பாம அப்படியே சாதரணமா சொல்றது.
இதெல்லாத்தையும் விட அப்பப்போ நடுநடுவுல ஒஷோ சொல்ற ஜோக்ஸ்.
நிஜமா அந்த மாதிரி ஜோக்ஸ்ஐ நான் எங்கியும் கேட்டதில்ல. ரொம்ப புதுசா இருந்தது.அதுவுமில்லாமல் நாம எதையெல்லாம் புனிதமுன்னு கட்டமைச்சிருக்கோமோ அதையெல்லாம் அவருடைய ஜோக்ல ரொம்ப சாதரணமா உடைச்சிட்டுப் போயிட்டேயிருப்பார்.இன்னொன்னு அந்த ஜோக்கை எப்ப நினைச்சாலும் என்னையுமறியாமல் மொழிபடத்துல பிரகாஸ்ராஜ்ம்,பிரித்திவ்ராஜ்ம் லிப்டில் சிரிக்கிற மாதிரி சிரிச்சிக்குவேன்.
பொதுவா எனக்கு சிரிப்பதற்கான வாய்க்கும் தருணங்களை தவறவிடவே மாட்டேன்.சில புத்தகங்கள் படிக்கிறப்ப திடீர்னு வாய்விட்டு, கண்ணுல தன்னிவர்ரவரைக்கும் சிரிச்சதைப் பார்த்துட்டு அக்க பக்கம் இருக்கறவங்க பயந்த கதையெல்லாம் நடந்ததுண்டு.
அந்த மாதிரி எழுத்தாளர்கள் திரு.சு.ரா,ஜெ.மோ,யுவன் சந்திரசேகர், நாஞ்சில் நாடன் மற்றும் ஒஷோ மட்டுமே.
இவர்களெல்லோருமே ஒரு நுண்னுணர்வான,அதே சமயம் வாழ்க்கையின் மிகப்பெரிய சோகங்களை மற்றும் தத்துவங்களை ஒரு அற்புதமான எள்ளல் நகைச்சுவயாக மாற்றுபவர்கள்.
உதாரணத்துக்கு ஜெ.மோ வோட “ ஊமைச்செந்நாய்”ங்கிற தொகுப்பில் வரும் ஒரு கதையில் திரு.காளிச்சரன் அப்படிங்கிற மேற்கிந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒரு கோவிலை சுற்றிப் பார்ப்பதற்கு வர்ரப்ப ‘துரியம்’ அப்படிங்கிறதுக்கு அங்கிருக்கும் போத்தி சொல்ற விளக்கத்தைப் படிச்சிட்டு நான் கண்ணில் நீர் வர்ரவரைக்கும் சிரிச்சிருக்கேன்.அது நிச்சயமா வாழ்கையைப் பற்றின ஒரு அற்புதமான எள்ளல்.
மிகப்பெரிய தத்துவங்களுக்கு நாம் வாழ்க்கைச்சார்ந்து ஒரு அர்த்தம் கொடுக்கிறப்ப அது ஒரு நல்ல எள்ளளாக மாறுவதற்கு வாய்ப்புண்டு.
பொதுவா கம்யூனிசத்தைப் பற்றி சொல்றப்ப இப்படி சொல்வார்கள்:
”ஒருத்தன் 20 வயசுல கம்யூனிஸ்டா இல்லைன்னா அவனுக்கு இதயம் இருக்கான்னு பார்க்கனும்.அவனே 40 வயசுலையும் கம்யூனிஸ்டா இருந்தா அவனுக்கு மூளையிருக்கான்னு பார்க்கனும்.”
இது நிச்சயம் இன்றைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த ஒரு மிகப்பெரிய எள்ளல்தான். இதுக்குப் பின்னாடி இருக்கற சோகத்தை எந்த சொற்களிலும் சொல்லிட முடியாது. இது மாதிரி நமக்கு முன்னாடி எத்தனையோ பேர் வாழ்திட்டிருக்கிறார்கள்.
இந்த இடத்துல நான் கேள்விப்பட்ட ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லியாக வேண்டும்.
திரு.A.K.அந்தோனி கேரள முதலமைச்சராக இருந்தபோது அவருடைய மகனுக்குக்கான பொறியியல் கலந்தாய்விற்கு அவருடைய மனைவி வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்.யரோ ஒரு சிலர் அவரை அடையாளம் கண்டுகொண்டு முன்னே செல்ல அனுமதித்தபோதும் அதை அவர் மறுத்துவிட்டார்.மேலும் அந்த கலந்தாய்வில் அவருடைய மகனுக்கு அவர் கேட்ட துறைக் கிடைக்கவில்லை.அவருடைய மதிப்பென்னிற்கேற்ப அவருக்கு வழங்கப்பட்ட துறையே தேர்வு செய்தார்.
அவருடைய மகன் இந்த துறையில் சிறந்து விளங்கினால் திரு.அந்தோணியின் நேர்மை மெச்சப்படும்.தவறினால் அவர் பிழைக்கத் தெரியாத மனிதர் என்றழைக்கப்படுவார்.
கமலுடைய படமான “மும்பை எக்ஸ்பிரஸ்” கூட ஒரு மிகப்பெரிய எள்ளல் தன்மை வாய்ந்ததுதான் அப்படிங்கிறது என்னோட கருத்து.ஒரு சீன்ல மனிசா கொய்ராலா : “வெப்பாட்டிங்கிறவ AC ரூம்ல இருக்கிற FAN மாதிரி” வெப்பாட்டிங்கிற சொல்லுக்கு இன்றைய நடைமுறை சார்ந்து சொல்ற ஒரு உதாரணம்.இதை கமல் விரிவு செய்வதே இதன் அர்த்தத்தை நமக்குணர்த்த வேண்டுமென்றுதான்.
சரி நான் ஒஸோவோட ஜோக்குகளுக்கு வர்றேன்.
1.கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..
“ ஏய் சனியனே! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு”
’ஏம்மா’
”கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்”
”அப்பா மட்டும் விளையாடுறார்”
”அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்”
2.பிரிவுத்துயரில் வாடும் தன் காதலிக்கு காதலன் எழுதும் கடிதம்.
அன்பே பிரிவைப் பற்றி கவலைகொள்ளாதே.இது தற்காலிகமானது.இந்த உலகமே நம்மை எதிர்த்தாலும் சரி. அந்த வானமே இடிந்து விழுந்தாலும் சரி.அந்த கடலைகளே கரைதாண்டி வந்தாலும் சரி,நீயும் நானும் இணைவதை யாராலும் தடுக்க இயலாது.எவ்வளவு இடரையும் எதிர்த்து உன்னைக் கரம் பிடிப்பேன்.இது நம் தூய்மையான உறுதியான காதலின் மீது ஆணை.
இப்படிக்கு ஆயிரம் முத்தங்களுடன் உன் அன்புக்காதலன்.
பின் குறிப்பு : வரும் வெள்ளியன்று இடி,மின்னல்,மழை வராமல் இருந்தால் நிச்சயம் உன்னைச்சந்திக்கிறேன்.
3. பாதிரியார்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆசிரியர் :
”மாணவர்களே சுவர்க்கத்தைப் பற்றி நீங்கள் பிரசங்கிக்கும்போது உங்கள் முகம் பிரகாசமாக இருக்கட்டும்.உங்கள் கண்களானது நிறைந்த ஒளி கொள்ளட்டும்.உங்கள் குரல் மென்மையாக தெளிவாக ஒலிக்கட்டும். உங்களின் வார்த்தைகள் இனிக்கட்டும்.உங்கள் புன்னகைகள் மலர்ந்து மனம் வீசட்டும்.”
அப்போது திடீரென்று ஒரு மாணவன் எழுந்து “ நரகத்தைப் பற்றி பேசும்போது, என்ன செய்வது?”
ஆசிரியர், ”நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.இப்படியே உங்கள் முகம் சாதாரணமாகயிருந்தால் போதுமானது”.
4. ஒரு காட்டு வழியில் இரு கன்னியாஸ்திரிகள் வந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது அவ்வழியே தீடீரெனத் இரு முரடர்கள் தோன்றி அவர்கள் இருவரையும் புதருக்கு மறைவில் தூக்கிச்சென்றுவிடுகிறார்கள்.
முதல் புதலிருந்து சத்தம் வருகிறது:
”கடவுளே இவன் என்ன செய்கிறான் என்று அறியாமல் செய்கிறான். இவனை மன்னிப்பீராக”
இப்போது இரண்டாவது புதரிலிருந்து :
“அய்யோ கடவுளே இவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே”.
ஒஷோவிடமிருந்து நான் தெரிந்து கொள்வது என்பது புன்னகையோடு எதிர்கொள்ளப்படும் ஒரு மரணமென்பது நம் அறுபதாண்டுகால வாழ்க்கையைவிட அர்த்தச்செறிவுள்ளது.
2 கருத்துகள்:
அன்பின் சிவா
//ஒருத்தன் 20 வயசுல கம்யூனிஸ்டா இல்லைன்னா அவனுக்கு இதயம் இருக்கான்னு பார்க்கனும்.அவனே 40 வயசுலையும் கம்யூனிஸ்டா இருந்தா அவனுக்கு மூளையிருக்கான்னு //
இது ஏற்கனவே இன்னொரு இடுகையிலும் வாசித்ததாக நினைவு
ஓஷோவின் புத்தகம் ஒன்று என்னிடம் உள்ளது - இன்னும் படிக்க வில்லை - படிக்க வேண்டும். அவரது ஜோக்குகள் அத்தனையும் அருமை சிவா
நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா
ஒஷோவை ஒரு எழுத்தாளனாக பார்ப்பது நம் அறியாமை அவனின் அளுமை மனித இனத்தை புதிய பாிணாமத்திற்க்கு அலைத்துசெல்லும் தேடல்
கருத்துரையிடுக