திங்கள், 17 மே, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

எட்டாத வானில்

கிட்டாத நிலா

அழகுடன் அவளும்.....

*************************

நீ காண நான் (மறைய)

நான் காண நீ (மறைய)

நாம் காண எல்லாம்....

********************************

ஒரு மழையீரக் காற்றாய்

நீயென்னை கடக்கும் போதிலெல்லாம்

இரயில் கடக்கும் தண்டவாளமாய் நான்...

************************************************

பார்வையைப் பிடுங்கி

வேறு பக்கம் நட்டு

நகங்கடிக்கத் தவறி

விரல் கடித்து

பெண்டுலம் போல் சலிக்காமல் நடந்து

இயல்பாயிருப்பதை விட கடினம்

அதற்காக முயற்சிப்பது

பரஸ்பரம் பார்த்துக்கொண்ட பிறகும்......

1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சிவா

நல்லாவே இருக்கு அக்காலக் காதல் கவிதைகள் -
எட்டாத வான் - கிட்டாத நிலா - அருமை

நீ காணும் போது நான் இல்லை
நான் காணூம் போது நீ இல்லை
இருவரும் காணும் போது ஒன்றுமே இல்லை - என்ன சிந்தனை!! அருமை.

இஅயல்பாய் இருப்பதை விடக் கொடுமை அதற்காக முயற்சிப்பது - உண்மை இயல்பு நிலை இதுதான் சிவா

நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா