திங்கள், 31 மே, 2010

சில மின்னல்கள்...

அருவி நீர் போல் வாழ்வின் கணங்கள் அத்தனை வேகமாக கடந்து போகிறது. விழும் ஒவ்வொரும் நீரும் புதிது.அருவிக் குளியலின் அனுபவத்தை என்னால் நிமிடத்துளிகளாக வர்ணிக்க இயலாது. மொத்த துளிகளையும்  மணிநேரமாக தொகுத்து கூறவே இயலும்.


ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நினைவு கூறப்படும் வாழ்வும் அங்கனமே உள்ளுமோ.


பதிவுகள் மட்டுமே வாழ்க்கையாகும் காலம் வரும். நினைவூஞ்சலாடி பின்னுக்குப் பதிவில் போய், முன்னுக்கு நிகழ்வில் போய், எங்கு நிறுத்த என்று அறியாமல் அரிக்கும் நரையின் கரை சேராதவர்களின் மரணம் இனிதே....




கவிதையும்,வாழ்வும் எவ்வளவு சிறியாக உள்ளதோ அவ்வளவு அழகாக இருக்கும். சான்றுகளுண்டு நிறைய...இருப்பினும் ஒப்புக்கொள்ளாது மனம்..எனக்கு அது வாய்க்கும்வரையில்...


வானவில் போல வந்து வண்ணங்களாகி நிறையும் மனிதர்களை,என் ஞாபகக் கூட்டிற்குள் பொத்திவைத்தல் என்பது தவிர்க்க இயலாத வழக்கமாகிவிட்டது எனக்கு.


ஆசானின் வார்த்தையைப் போல் சரியையும்,உண்மையையும் சொல்வதல்ல என் எழுத்து,நான் சரியென நம்புவதையும்,உண்மையென எனக்குப்படுவதையும் கூறுவதே.


அதே போல் எனக்குப் பிடித்தவைகளைப் பகிர்வதிலேயே எனக்கு மகிழ்ச்சி.


கண்களினால் சிரிப்பவர்களின் முகங்களை மறப்பதோ அல்லது அவர்களின் பிரியங்களைத் தவிர்ப்பதோ அத்தனை எளிதான காரியமல்ல..


அத்தகைய ஒரு மனிதர்தான் திரு.ரகுவரன். ”இது ஒரு மனிதனின் கதை” என்ற அவருடைய தூர்தர்ஷன் தொடர் முதல் சமீபத்தில் கடைசியாக அவர் நடித்த அல்லது நான் கடைசியாகப் பார்த்த “யாரடி நீ மோகினி” வரையில் நான் அவரைத் தொடர்ந்திருக்கிறேன்.


 ஒரு கதாபாத்திரமாக வெளித்தெரியாமல், அந்த கதாபத்திரமாகவே தன்னை  மாற்றிக்கொள்கிறவனே  நல்ல நடிகன்.


அதுபோல எந்த கள்ள கபடமுமின்றி தொடங்கும் வாழ்க்கை காற்றின் திசைக்கேற்ப அலைகழிக்கப்படும் பாய்மர படகென சூழ்நிலை அலைகழிப்புகளால் மாற்றம் பெறும் வாழ்கைதான் “ இது ஒரு மனிதனின் கதை”.


அந்த தொடரில் அவருடைய குடிகார வேடம்   புகைப்படகருவியை  அவருடைய வீட்டில் ஒளித்துவைத்து படம் பிடித்தது போன்று   இயல்பாகயிருந்தது.


அந்தத் தொடரிலிருந்துதான் நான் அவரின் அபிமானியானேன்.


சுமார் 13 பக்களவிலான வசனத்தை வெறும் ஒற்றை ஆங்கிலச் சொல்லாக(I KNOW-புரியாத புதிர்) மாற்றி,  ஏற்ற இறக்கங்களோடு (modulation??) வெவ்வேறு முகபாவங்களோடு, உண்மையான உளவியல் கோளாறு உள்ளவனின் சிரிப்போடு அந்த பாத்திரத்தை நம் கண் படைத்துக்காட்டிய அந்த கலைஞனை அவ்வளவு சுலபமாக மறப்பதற்கியலுமா..


எந்த ஒரு சிறிய பாத்திரமெனினும் முதல் படத்தைப் போன்ற சிரத்தை அவருடைய தனிக்குணாம்சம்.


யாருடைய தழுவலையும் போலன்றி, தனக்கு வழங்கப்படும் எந்த ஒரு பாத்திரத்தையும் தன்னிலிருந்து மலரச்செய்யும் இவருடைய உழைப்பு வியப்பிற்குரிய ஒன்று.இன்று எல்லாராலும் அனிச்சைசெயல் போல் உச்சரிக்கப்படும் “ஹோம் ஒர்க்” என்ற சொல்லை இவர் மூலமே நான் முதலில கேட்டறிந்தேன்.சிவாஜியிடம் நான் கேட்ட  சொல்  கூட ஒத்திகையென்பதே.அது அவருடைய மரபு வழித் தொடர்ச்சி.


படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முதல் நாளும்,படப்பிடிப்பின் அதிகாலை-யிலும்  கடற்கரைக்குச் சென்று தன் மனவார்ப்பை ஒரு முறை பரிசோதித்துக்கொள்ளல் என்பது இவருடைய வழக்கம் என்று நேர்காணலில் ஒருமுறை குறிப்பிட்டார்....


தனக்கு முன் தடம்பதித்தவர்களை விட்டு விலகி மற்றாருடைய பாதிப்புமின்றி தனக்கென ஒரு தடம் வகுத்துக்கொள்ளல் அத்தனை எளிதான காரியமல்ல...உலகநாயகனிடத்தில் கூட பாலச்சந்தர்,நாகேஷ் மற்றும் நடிகர்திலகத்தின் சாயல் ஏதேனும் ஒரு மூலையில் வெளிப்படவே செய்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.


என் சிற்றறிவுக்கெட்டிய வரையில் இவருடைய நடிப்பில் நான் யாருடைய பாதிப்பையும் கண்ணுற்றதில்லை.


இவருடைய புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் நளினம் பார்த்து இன்னும் அந்த பழக்கம் என்க்கு ஒட்டிக்கொள்ளாதது வியப்பே.செயல் தவறெனினும் செய்நேர்த்தி சில சம்யம் நம்மை நெக்குருக வைத்துவிடுகிறது.


பெரிய மற்றும் வித்தியாசமான ஒப்பனைகள்,பேச்சு வழக்கில் மாற்றம் ஏதுமின்றி வெறும் உடல்மொழியாலேயே தன்னுடைய கதாபாத்திரங்களை துலங்கச் செய்திடுவதில் அவருக்கு நிகர் அவரே.


புரியாத புதிர்,பூவிழி வாசலிலே,என் பொம்முக்குட்டியம்மாவுக்கு, அஞ்சலி, சம்சாரம் அது மின்சாரம், ஆஹா,கூட்டுப்புழுக்கள்,முதல்வன்,துள்ளித்திரிந்த காலம்,கன்னுக்குள் நிலவு,முதல் உதயம்,காதலும் கற்று மற   முதலானவகள் என் ஞாபகவெளியில் இப்போதைக்குத் தெறிக்கும் சில படங்களாகும்.


பொதுவாகவே மம்முட்டியைப் போலவே தன்னுடைய ஆளுமையை கம்பீரமாகவே நிறுவிக்கொண்டவர்.


அவருடைய அந்தக் கம்பீரமான நடிப்பிற்காகவே பிடித்து சில,பிடிக்காமல் பல படங்கள் பார்த்திருக்கிறேன்.


“BROKEN AERROW" என்ற படத்தில் ஜான் டிரவோல்டா (JHON TRAVOLATA) ஒரு ஸ்டைலிஷ் ஆன வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அவ்வளவு ஸ்டைலிஷ் ஆன  நடிகர் தமிழில்  யாரென்று யோசித்தால் என் கண்முன்னே உடனே நிழலாடுவது இவருடைய முகமே. அவ்வளவு அருமையான நடிகர்.


என்னை அதிகம் கவர்ந்தது அவருடைய அந்த உயரமும், அற்புமான அந்த சிரிப்பும்.வில்லத்தனத்திறக்கென்று ஒரு சிரிப்பும், வில்லங்கமில்லாதனத்-திற்கு என்று  ஒரு சிரிப்பும் என நிறபேதங்களுடன் கூடியது அவ்ருடைய சிரிப்பு.


”என் சுவாசக் காற்றே” என்ற படத்தில் ரகுவரனுக்கும், பிரகாஷ் ராஜ்க்கு-மிடையேயான காட்சிகளின் சுவராஷ்யம் அத்தனை அலாதியானது. விழியில் நீர் வர யோசித்து யோசித்து நானும் என் நன்பனும் நகைத்த காட்சிகள் நிறைய உண்டு.


ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட ஒரு சாதரன மனிதன் என்ற நிலையிலும் எனக்கவர் மிகுந்த விருப்பத்திற்கும், நேசத்திற்குரிய- வருமாகவே இருக்கிறார்.


அவருக்குள்ளும் ஒரு காதல் சோகமுண்டு. காதலைப் பற்றி அவருடைய சில வரிகள் என்னைக் கவர்ந்தது...அவை:


’மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை ஆரதிக்கிறதுக்குப் பேர்தான் லவ்.நம்மை மாதிரி பசங்களுக்குத் தேவையான ஆறுதல்,ஆதரவு,அன்பு எல்லாமே ஒரே ஒரு பொன்னுகிட்டே கிடைச்சடறது (அ) கிடைச்சதா நாம பீல் பன்றதுதான் லவ்.


இருபது வயசுப் பையன் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தைப் பற்றி யோசிக்கிறதவிட இன்னிக்கு என்ன பூ பூக்குன்னுதான் பார்ப்பான். எனக்கப்போ இருபது வயசு.


அவளை நேர்ல பார்க்கும்போது எதுனா கிறுக்கிட்டு இருக்கப் பிடிக்கும்.ஆனா ஒரு நாள் பார்க்கலைனாக் கூட கிறுக்குப் பிடிக்கும்’


கடைசியா தன்னோட காதல் தோல்வியை பதிவு செய்யற விதம் :


நான் ஒரு பறவையை நேசிச்சேன்.எனக்கு அது உயிர் மாதிரி.அதுக்காக அதை ஒரு கூண்டுக்குள்ள அடச்சுவச்சுப் பார்க்கிறதுல அதுக்கே சம்மதமில்லை.நான் அதை நேசிச்சேன்.எங்கோ வானத்துல அது சிறகடிச்சுப் பறக்குதுங்கற நினைப்பே போதும்.பறவயை நேசிக்கிறவன் அதுதான் செய்வான்.”


இதற்கப்புறம்தான் இவருடைய திரைப்பட பிரவேசமே நடந்தது.


ரோகினியை காதல் மனைவியாக கைப்பிடித்தார்.அன்பின் நிறைவாய் ஒரு மகன். ரகுவரன் தீவிர சாய்பாபா பக்தனாகவும் இருந்திருக்கிறார்.


சில விசயங்களுக்கு காரணம் சொல்ல முடியாததுபோல அல்லது சில விஷயங்களின் அடர்த்தியை அளவிட நமது வாழ்பனுவம் போதாது போல்
அவர் தன் காதல் மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.

அவர் அடிக்கடி தனிமைப் படும்போதெல்லாம் அவரை ஒரு சிலர் (விஜ்ய் கூட) மீட்டிடுக்கிறார்கள்.

அவருடைய தளர்ச்சியை நான் க்ண்கூடாக கண்டது “யாரடி நீ மோகினி” படத்தில்தான்.நிச்சயமாக அது வழக்கமான ரகுவரனில்லை. அதில் எந்த இடத்திலும் அவருடைய கண் சிரிக்கவேயில்லை.தனகுகு மட்டும் பில் கிளிண்டனுடைய சிரிப்பு மட்டுமிருந்தால் போதும் இந்த உலகையே வென்று காட்டுவேன் என்று ஒரு நேர்காணலில் அவர் சொன்னது இன்றுமெனக்கு நினைவிலிருக்கிறது.

பெருமழைகள் ஒயும்போது உண்டாகும்  அமைதியை  வெறும்  வார்த்தை-களைக் கொண்டு நிரப்பிட முடியாது. திரு.ரகுவரனுடைய மரணமும் அப்படித்தான்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு.ரோகினி சொல்லியிருக்கிறார் “ "எல்லாவற்றிற்கும் மேலாக.. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்... ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது. இதை இங்கே அமர்ந்துள்ள என் மகன் முன்பு கூறுகிறேன்" ஆகவே ஒரு நல்ல கணவனாகவும்,கலைஞனாகவும்,மனிதனாகவும் அவர் ஒரு நிறை வாழ்க்கை வாழ்திருக்கிறார் என்றே கொள்கிறேன்.

சனி, 29 மே, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

அன்னார்ந்து பார்க்கையில்
மலைப்பாயிருக்கும்,
துவக்கத்தை போலல்லாமல் சீரற்று இருக்கும்,
கரடுமுரடாய் கால் கிழிக்கும்,மறைந்தும் கிடக்கும்
மூச்சுவாங்கும்,துவழும்
வியர்வை ஊற்றெடுக்கும்
சறுக்கலாம்,காரணிகள் மட்டுப்படுத்தலாம்
ஒதுங்க விழைந்தால் குழு பிரியும்

நீரோடைக்கருகில் நா வரண்டால்
கடவுள் பிழைப்பார்...
மூச்சுமுட்டிக்கொண்டோலா ஐயத்திற்கு
ஆட்படுவார்....

வழித்துணைகள் உண்டென்றாலும்
இறுதிவரையென்பது அறுதியில்லை...

முக்கிமுனகி தவழ்ந்து ஏகினால்..
சுற்றியுள்ளவைகளை சிறிதாக்கி
அழகாக்கும்...
குளிர்மேகம் முகத்திலறையும்....
முக்தி இதுவென்று மனம் துள்ளும்..
இன்னுமிருப்பவைகளை அறியாது...

--------------------------------------------------------

கடந்தகாலம் கல்வெட்டு...

சான்றென நீ...

-------------------------------------------------------

நிலவில் சப்தம்

உனக்கென் காதல்..

------------------------------------------------------------

மறக்க முடியாத சில குரல்கள்...

நாம் பெரிதாக பெரிதாக நம்முடைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்குதோன்னு தோனுது.

நாலா வகுப்பும் அஞ்சா வகுப்பு படிக்கிறப்ப நம்மையாராவது நீ பெரிசான என்ன ஆவன்னு கேட்பாங்க...

உடனே நாமளும் டாக்டர்,இன்ஞினியர் அப்படீன்னு சொல்வோம்..

அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரிசானதும் வக்கீல்,கலைக்டர் இல்லைன்னா ஸ்போர்ட்ஸ் மேன் அப்படீன்னு சொல்வோம்...

அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரிசானுதும் கரெக்டா சில படிப்புகளின் பெயரைச்சொல்லி IPS,IAS,IFS,MBA,IT,MA,Msc,P.HD..இப்படீன்னு சொல்லுவோம்..

இதில் எத்தனை பேர் தான் நினைத்தைச் சாதித்திருக்கிறார்கள் என்பது எண்ணிக்கையில் அடங்கிவிடும்.

எதாவது ஒரு சூழலியியல் காரணங்களுக்காக தங்கள் கனவை பலிகொடுத்தவர்கள் அனேகம் பேர்.

வாழ்கையில் இவர்கள் இருவர் சந்திக்கும் புள்ளியில் நிச்சயம் ஒருவர் மற்றவரின் முடிவே புத்திசாலித்தான முடிவு என்று கூறுவதும் உண்டு.

கல்லுரியில் ஆசிரியர் கேட்கும்போது விளையாட்டாக ” நாங்க என்னாவோம்னு எங்களுக்கே தெரியாது” என்று கூறுவதுமுண்டு.  அது உண்மையும் கூட.  வாழ்க்கை ஆதாரத்திற்காக பிடிக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டியுள்ளது.அவ்வளவே..

நமக்கான பெரும்பாலானவைகள் இந்த வேலைக்கு வெளியேதான் உள்ளது.அவற்றின் உயிரோட்டமே இந்த வேலைகளில் நம்மை நீடிக்கச்செய்கிறது....

மேலே சொன்னவைகள் எதற்கு எனில்  எல்லோருமே அவரவர்களின் பாலியத்தையும் பதின்மத்தையுமே பெரிதாகச் சொல்லுகிறார்கள். அது எவ்வளவு கசப்பெனினும்.....

ஏனெனில் வடுக்கள் ஏந்தாத உடலைப்போலனாது,அவரவர்களின் பதின்மமும் பாலியமும். வடுக்கள் விழ ஆரம்பித்துமே நமக்குள்ளான அழகியலும் மனிதமும் தொலைய ஆரம்பித்துவிடுகிறது. கணக்குகூட்டல்களும் எதிர்கால திட்டங்களுமென இல்லாத ஒரு காலத்தில் வாழ பழகுகிறோம்....

தனுஸ்கோடி தொடங்கி,குஜராத்,சுனாமி என வாழ்வின் அபத்தங்களையும்,நிலையாமையையும் இயற்கை எவ்வளவுதான் எடுத்து இயம்பினாலும் செக்கு மாட்டு வாழ்க்கையை விட முடிவதில்லை..

எனவே ஆசுவாசிக்கவும்,சிறிது தலைசாய்க்கவும் எல்லோரும் திரும்புவது பதின்மத்திற்கும்,பாலியத்திற்குமே....

பதினமத்தின் ஆழப்பதிவே ஒரு மனிதனின் முழுவாழ்க்கையுமே ஆக்கிரமிக்கிறது. எனவே பதின்ம நினைவுகள் எல்லோருக்குமே முக்கியமானதுதான்....

என் பதின்மங்களில் எங்களுரில் ஒரு விசேச பழக்கமுண்டு. மின்மினிப் பூச்சியைப் ( உங்கள் புரிதலுக்காக- வழங்கல் பெயர்-பொன்னாம்பூச்சி)  பிடித்து சாமண்டரி பாக்ஸில் வைத்துக்கொள்வோம். அந்த பாக்ஸின் உள்ளே அதற்கான உணவாக இலைகளை இட்டு நிரப்புவோம்.தினமும் அது முட்டையிடுகிறதா...எத்தனை முட்டைகள்..எப்போது குஞ்சு பொறிக்கும் என ஆவலாகப்பார்போம்.காலையில் கண் திறக்கும்போதே அந்த பாக்ஸ் கையிலிருக்கும். இரவு படுக்கப் போகும்போதே காலையைப் பற்றிய நினைப்பிலேயே படுப்போம்...

இன்றும் அது போலவே என் பதின்ம,பாலிய நினைவுகளை என் மனப்பெட்டியில் இட்டு பத்திரப்படுத்தியிருக்கிறேன்..இபோது அது முட்டைகளை ஈனுகிறது..இன்னும் சில நாட்களில் முட்டைகள் சினையாகும்,பிறகு அது பொறியும்.உள்ளிருந்து வரும் குஞ்சுகள் பறக்குமென்றே நம்புகிறேன்..

என் பதின்மத்தில் கேட்ட சில குரல்கள் என் மனக்குளத்தில் கூழாக்கற்களைப் போல இன்றளவும் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.

1. முதல் குரல் - ஆகாசவானி..மாநில செய்திகள் வாசிப்பது சரோஜ் நாரயண சுவாமி. என்ன குரல்..சத்தியமாக சாகிறவரைக்கும் மறக்காது அந்தக்குரல்..இந்த குரல்தான் அடையாளம்..இந்த குரலை கேட்டதுக்கப்புறமும் படுக்கையிலே படுத்துட்டுருந்தா அடிதான் கிடைக்கும்.எனவே இந்தக் குரலைக் கேட்டவுடன் படுக்கையைவிட்டு எந்திரிச்சரனும்.

இந்தக்குரல் எங்களுக்கு ஒரு ஆதர்சம்.இந்த குரல் +  ஒரு டம்மி செய்தியறிக்கை +  ஒரு அப்பு கமல் வேசம். இந்த மூனையும் வச்சுதான் PRS ல் நடந்த NCC பயிற்சி வகுப்பு கலைநிகழ்ச்சிகளில் முதல் பரிசை நவிட்டினோம்.

டம்மி செய்தியறிக்கை இப்படித் தொடங்கும் : ஆகாசாவனி..ஆத்தா வழிக்கும் சானி..செய்திகள் வாசிப்பது அடாமூக்கன் தம்பி கொடாமூக்கன்..

2. திரு.வரதராஜனுடைய குரல் : வயலும் வாழ்வும் மற்றும் செய்திகள் இது ரெண்டுமே தடைசெய்யப்பட்டிருந்த என் காதுகளில் இவருடைய குரலைக் கேட்ட பிறகே செய்திகள் மட்டும் நுழைய அனுமதித்தேன்.

 இன்னைக்கு செய்திகள் யாரு வரதராஜனா? அப்படீன்னு சப்தத்தை வைத்தே தின்னையில் இருக்கும் பெரிசுகள் சொல்லிவிடும்.தேவையான இடத்தில் அழுத்தங்கள்,தேவையான முகபாவங்களுடன் ( இன்னைக்கு மாதிரி விமான விபத்தைப் பற்றி பேசும்போது பெப்சோடன்ட் விளம்பரம் மாதிரி சிரித்துக்கொண்டல்ல)  கொடுத்து வாசிப்பதில் இவருக்கு நிகர் இவரே.

இவர் K.பாலச்சந்தரோட சீரியல்களில் கூட கொஞ்ச நாள் தலைகாட்டினார்.

இதே வகையில் செய்திகளுக்காவே என் மனதில் இடம்பிடித்தவர்கள் என்று ஷோபனா ரவி,நிஜந்தன்,பாத்திமா போன்றோர்களைக்கூறலாம்.

3. சூலூர் கணேஷ் : அப்படியே அவருடைய குரலிலேயே நம்மைத் தூக்கி தன்னோட கையில் பொத்தி வச்சுக்குவார். சனிக்கிழமை காலைகளில் 8.30க்கு கோயமுத்தூர் வானொலி நிலையத்தில் வாரம் ஒரு நாடகம் ஒலிபரப்புவார்கள். அதில் பெரும்பாலும் ஒரு குரலாக அல்லது குறைந்தளவான எண்ணிக்கையுள்ள குரல்களே இடம்பெறும்.இந்த ஒரு குரல் மற்றும் குறைந்தளவு எண்ணிகையுள்ள குரல்களில் இரண்டு மூன்று குரல்களை சூலூர் கணேசே பேசுவார். அந்த குரலில் முழு நாடகத்தையும் அவர் வாசிக்கும் விதத்தை நாள் பூராவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அதுவும் சில சமயங்களில் ஒரு சில வசனங்களுக்கிடையில் இளையராஜாவோட புல்லாங்குழலிசையை பயன்படுத்துவார்கள். மோர் சாதத்திற்கு கடிச்சுக்கிட்ட பச்சமிளகாய் மாதிரி அவ்வளவு பொருத்தமாக இருக்கும். அதெல்லாம் நம்ம சின்ன வயசு போட்டாவை பார்க்கிறமாதிரி அத்தனை பரவசமானது.

4. தென்கச்சி கோ.சுவாமிநாதன் : இவரைப் பற்றி நான் பெரிசா சொல்ல வேண்டியதில்லை.அனேக பேருக்கு பாட்டிமார்கள் இல்லையென்ற குறையை நீக்கியவர்.அவ்வளவு கதைகள் சொல்பவர். சிரிக்காமல் இவர் சொல்லும் கதையைக்கேட்டு நம்மால் சிரிக்காமல் இருக்கவே முடியாது.

இவருடைய குரல் பழம்பெரும் நடிகர் திரு.தங்கவேல்(பேருக்கு முன்னாடி டமால் னோ டனார் னோ வரும்) அவர்களின் குரல் போலவே இருக்கும். திரு.தங்கவேல் இறந்த சமயத்தில் அவர் நடித்த படத்தில் “டப்பிங்” வேலை மட்டும் பாக்கியிருந்தது. அப்போது திரு.தென்கச்சியை வைத்துத்தான் அதை முடித்தார்கள்.

5. திரு. நாகூர் ஹணிபா : மிக கனமான குரல் அது.அதை உச்சஸ்தாயில் செவிக்கினிமையாக கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே.

சில குரல்களை என்னால் பெயரளவில் அல்லாமல் பாட்டளவில் மட்டுமே நினைவில் இருத்த முடிந்தது. அவை:

தட்டுங்கள் திறக்கப்படும்;கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கிடைக்குமென்றார். ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார்..எனக்குப் பொதுவாக கிறிஸ்துவ பாடல்கள் பிடிப்பதில்லை. சிறப்புக் காரணம் ஏதுமில்லை.ஆனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் பாடியவரின் குரலே. இந்தக் குரலை என்னால் very unique voice என்று மட்டுமே வர்ணிக்க இயலும்.

6.சீர்காழி சிவசிதம்பரம் : ஒரு அழுத்தமான எளிதில் கடந்து செல்ல இயலாமல் கட்டிப்போடும் குரல்.

தாமரை மலர்கள் ஆறு; அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆறு இந்தப் பாட்டை இவர் பாடினாரா இல்லை சீர்காழியா என்று அடிக்கடி குழப்பம் வரும்.

7. கிருபானந்த வாரியார் : இவரைப் பற்றி நான் என்ன சொல்றது.அதியெல்லாம் கேக்கிறதுக்கு கொடுத்து வெச்சிருக்கனும். சின்ன வயசில் நான் இமிடேட் பன்னிய ஒரே குரல் இவருடையதுதான். யார் வேனா ரொம்ப சுலபமா இவருடைய குரலை இமிடேட் பன்னலாம்.ஆனால் அவருடைய சொற்பொழிவுகள்,கருத்துகள்??.


8.ஷாகுல் அமீது ( ஹமீது ) : இந்த பெயரில் மொத்தம் ரெண்டுபேர்.

ஒருத்தர் சிலோன் ரேடியா மூலமா பிரபலமானவர்.எனக்கு இவர் சன் தொலைக்காட்சியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு மூலமே அறிமுகம். எளிதில் மறக்கமுடியாத குரல்.

இன்னொருவர் அதே சன் தொலைக்காட்சியில் வரும் “சென்ற வார உலகம்” என்ற நிகழ்ச்சியில் வருபவர்.ரொம்பவும் மென்மையான குரல். பூகம்பே வந்தாலும் இவர் சொல்ற விதத்தில் அது பூமாதிரி ஆகிற அளவுக்கு மென்மையான குரல்.

9. மு.க.முத்து : இவர் பாடின ஒரு பாட்டு ”எல்லோரும் கொண்டாடுவோம்”
 என்ற பாட்டு.இந்த குரலை அடையாளம் சொன்னவர் என் தந்தை. நல்ல வளமான குரல்.இவருடைய தந்தையின் சாயலில்லாத குரல். இவர் தமிழ் நாட்டின் அரசியல் உள்ளமட்டும் மறக்க முடியாதவரின் மகன்.

 மேலே சொன்னவையல்லாம் நான் பதின்மத்தில் கேட்ட குரல்கள். இப்போது சொல்வதெனில் இன்னும் இன்னுமென்று நிறைய உள்ளது.

வியாழன், 27 மே, 2010

பாடல் வரிகள்

இன்னிக்கு எதேச்சையா நர்சிம் அவர்களோட பதிவில் அவருடைய பழைய பதிவான சினிமா பாடல்கள் பற்றியும், பாடல் ஆசிரியர்களைப் பற்றியும் பற்றிப் படித்துக்கொண்டிருந்த போது திடீரென்று எனக்கு சில வரிகளும்,சம்பவங்களும் ஞாபகத்திற்கு வந்தது.

சில வருடங்களுக்கு முன்பாக, காங்கிரஸ் ஆட்சிதான் என்று நினைக்கிறேன். வெங்காய விலை திடீர்னு கட்டுக்கு அடங்காமல் அதிகமாகி ஆட்சியே கவிழுகிற சூழல் வந்தது.

அதே மாதிரி அந்த சமயத்துல வயாகரா’வைப் பற்றிய பேச்சும் அதிகமா அடிபட்டது.

இந்த ரெண்டு விசயத்தையும் இணைச்சு திரு.வாலி அவர்கள் ஒரு பாட்டாக எழுதினார்.

இப்போ நான் சொல்லப்போற படப்பெயரை வைத்து இது எந்த வருடம்னு நீங்களே ஊகிச்சிங்கோங்க...

படம் : என் சுவாசக் காற்றே...

இசை : ஏ.ஆர்.

பாடல் : வாலி.


தத்தியாடுதே...தாவியாடுதே...எனத்தொடங்கும் அப்பாடலில் வரும்

 ”ஜில் லல்லவா ஜில் லல்லவா...காதல் நயகரா...

உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா....என்றும்

அந்த வெங்காய விலையை எங்கு வைத்தாரென்றால்...

”உன் மீது எனக்குண்டான அன்பு அந்த வெங்காய விலைபோலே இறங்காதது” என்று பாடலின் இடையில் வரும்.


இதைத்தான் "Presence of mind " அப்படீங்கிறாங்களோ.....

------------------------------------------------------------------------------------------------

அதே மாதிரி ஒரு இரண்டே இரண்டு வரிகள் சாதரணமா என்னோட மனசில் நுழைஞ்சு இன்னைக்கு ”சதா ரணமா” மாறிருச்சு.

அழகான கவிதை மாதிரியான கேட்டதும் மனசில ட்க்குனு பதிஞ்ச அந்த இரண்டு வரிகள் இன்னைக்கு கேக்கிறப்பல்லாம் இரண்டு பேருடைய அகால மரணத்தியே ஞாபகப்படுத்திட்டு இருக்கு.

படம் : பார்வை ஒன்றே போதுமே

இசை : பரணி

பாடல் : யார்னு ஞாபகமில்லை..

“ திரும்ப திரும்ப பார்த்து பார்த்து “ எனத்தொடங்கும் பாடலின்

ஒரிடத்தில்

”கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்

மேசை விளக்குப் போல நீ தலைகுனிந்து போகிறாய்”

இந்த வரிகளுக்கு அர்த்தம் தேவையில்லை. அப்படியும் மீறி கேட்டீங்கனா கிட்டத்தட்ட ஒவ்வொரு வரிக்கும் அரைப் பக்க அளவில் விளக்கம் சொல்லுவேன்.

இந்த பாடல் மற்றும் படத்தில் நடித்தவர்கள் குணால்,மோனல்.

------------------------------------------------------------------------------------------------

படம் வட்டாரம் என்று நினைக்கிறேன்.பாடலின் துவக்கம் ஞாபகத்தில் இல்லை.ஆனால் படத்தில் இப்பாடல் கோவா கடற்கைரையில் பாடுவது போல வரும்.

பெண் பாடும் பாடலின் ஒரு வரியில்

“ அட  மழை வெள்ளம் வேண்டாம்;

சிறு தூறல் போடு  என் உடம்பெங்கும் நனையட்டுமே”

இந்த வரியில் இருக்கும் காமம் சொல்லில் அடங்காது....            

புதன், 26 மே, 2010

ஓஷோவும் சிரிப்பும்

இவரை எப்படி,எப்பொழுது படித்தேன் என்று ஞாபகமில்லை.ஆனால் இவரை படித்தபோதில்  எனக்கு ஆன்மீகத்திலும் பெரிதாக நாட்டமில்லை..ஆனால் இன்று நிறைய உண்டு.

அந்த சமயத்தில எனக்கு இருந்த ஒரே ஒரு தீவிரமான செயல் வாசிப்பு.கையில எது கிடைச்சாலும் படிக்கிறது. என்ன ஒரே ஒரு நிபந்தனை,படிக்கிற விசயங்களில் ஒரு தொடர்ச்சி(flow) இருக்கவேண்டும்.

அந்த மாதிரி எப்பவோ ஒரு நாள் எதேச்சையாக கிடைத்த புத்தகம் தான் ஒஷோவின் புத்தகம். நிறையப் பேர் சொன்ன விஷயம் புரியுதோ, இல்லையோ ஆனா படிக்கிறதுக்கு நல்லா இருக்குது அப்படீன்னாங்கா...

சரி கழுதைய, அப்படி என்னதா அதுல இருக்குதுன்னு பார்க்கலாமுன்னு படிச்சேன். முதல்ல எடுத்தவுடனேயே  அந்த புத்தகம் எனக்கு பிடிக்க காரணம் அது ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் மாதிரி இல்லாம தமிழில் எழுதுனா புத்தகம் மாதிரியே இருந்தது. அப்புறம் எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப போட்டு குழப்பாம அப்படியே  சாதரணமா சொல்றது.

இதெல்லாத்தையும் விட அப்பப்போ நடுநடுவுல ஒஷோ சொல்ற ஜோக்ஸ்.

நிஜமா அந்த மாதிரி ஜோக்ஸ்ஐ நான் எங்கியும் கேட்டதில்ல. ரொம்ப புதுசா இருந்தது.அதுவுமில்லாமல் நாம எதையெல்லாம் புனிதமுன்னு கட்டமைச்சிருக்கோமோ அதையெல்லாம் அவருடைய ஜோக்ல ரொம்ப சாதரணமா உடைச்சிட்டுப் போயிட்டேயிருப்பார்.இன்னொன்னு அந்த ஜோக்கை எப்ப நினைச்சாலும் என்னையுமறியாமல் மொழிபடத்துல பிரகாஸ்ராஜ்ம்,பிரித்திவ்ராஜ்ம் லிப்டில் சிரிக்கிற மாதிரி சிரிச்சிக்குவேன்.

பொதுவா எனக்கு சிரிப்பதற்கான வாய்க்கும் தருணங்களை தவறவிடவே மாட்டேன்.சில புத்தகங்கள் படிக்கிறப்ப திடீர்னு வாய்விட்டு, கண்ணுல தன்னிவர்ரவரைக்கும் சிரிச்சதைப் பார்த்துட்டு அக்க பக்கம் இருக்கறவங்க பயந்த கதையெல்லாம் நடந்ததுண்டு.

அந்த மாதிரி எழுத்தாளர்கள் திரு.சு.ரா,ஜெ.மோ,யுவன் சந்திரசேகர், நாஞ்சில் நாடன் மற்றும் ஒஷோ மட்டுமே.

இவர்களெல்லோருமே ஒரு நுண்னுணர்வான,அதே சமயம் வாழ்க்கையின் மிகப்பெரிய சோகங்களை மற்றும் தத்துவங்களை ஒரு அற்புதமான எள்ளல் நகைச்சுவயாக மாற்றுபவர்கள்.

உதாரணத்துக்கு ஜெ.மோ வோட “ ஊமைச்செந்நாய்”ங்கிற தொகுப்பில் வரும் ஒரு கதையில் திரு.காளிச்சரன் அப்படிங்கிற மேற்கிந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒரு கோவிலை சுற்றிப் பார்ப்பதற்கு வர்ரப்ப ‘துரியம்’ அப்படிங்கிறதுக்கு அங்கிருக்கும் போத்தி சொல்ற விளக்கத்தைப் படிச்சிட்டு நான் கண்ணில் நீர் வர்ரவரைக்கும் சிரிச்சிருக்கேன்.அது நிச்சயமா வாழ்கையைப் பற்றின ஒரு அற்புதமான எள்ளல்.

மிகப்பெரிய தத்துவங்களுக்கு நாம் வாழ்க்கைச்சார்ந்து ஒரு அர்த்தம் கொடுக்கிறப்ப அது ஒரு நல்ல எள்ளளாக மாறுவதற்கு வாய்ப்புண்டு.

பொதுவா கம்யூனிசத்தைப் பற்றி சொல்றப்ப இப்படி சொல்வார்கள்:

”ஒருத்தன் 20 வயசுல கம்யூனிஸ்டா இல்லைன்னா அவனுக்கு இதயம் இருக்கான்னு பார்க்கனும்.அவனே 40 வயசுலையும் கம்யூனிஸ்டா இருந்தா அவனுக்கு மூளையிருக்கான்னு பார்க்கனும்.”

இது நிச்சயம் இன்றைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த ஒரு மிகப்பெரிய எள்ளல்தான். இதுக்குப் பின்னாடி இருக்கற சோகத்தை எந்த சொற்களிலும் சொல்லிட முடியாது. இது மாதிரி நமக்கு முன்னாடி எத்தனையோ பேர் வாழ்திட்டிருக்கிறார்கள்.

இந்த இடத்துல நான் கேள்விப்பட்ட ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லியாக வேண்டும்.

திரு.A.K.அந்தோனி கேரள முதலமைச்சராக இருந்தபோது அவருடைய மகனுக்குக்கான பொறியியல் கலந்தாய்விற்கு அவருடைய மனைவி வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்.யரோ ஒரு சிலர் அவரை அடையாளம் கண்டுகொண்டு முன்னே செல்ல அனுமதித்தபோதும் அதை அவர் மறுத்துவிட்டார்.மேலும் அந்த கலந்தாய்வில் அவருடைய மகனுக்கு அவர் கேட்ட துறைக் கிடைக்கவில்லை.அவருடைய மதிப்பென்னிற்கேற்ப அவருக்கு வழங்கப்பட்ட துறையே தேர்வு செய்தார்.

அவருடைய மகன் இந்த துறையில் சிறந்து விளங்கினால் திரு.அந்தோணியின் நேர்மை மெச்சப்படும்.தவறினால் அவர் பிழைக்கத் தெரியாத மனிதர் என்றழைக்கப்படுவார்.


கமலுடைய படமான “மும்பை எக்ஸ்பிரஸ்” கூட ஒரு மிகப்பெரிய எள்ளல் தன்மை வாய்ந்ததுதான் அப்படிங்கிறது என்னோட கருத்து.ஒரு சீன்ல மனிசா கொய்ராலா :  “வெப்பாட்டிங்கிறவ AC ரூம்ல இருக்கிற FAN மாதிரி” வெப்பாட்டிங்கிற சொல்லுக்கு இன்றைய நடைமுறை சார்ந்து சொல்ற ஒரு உதாரணம்.இதை கமல் விரிவு செய்வதே இதன் அர்த்தத்தை நமக்குணர்த்த வேண்டுமென்றுதான்.


சரி நான் ஒஸோவோட ஜோக்குகளுக்கு வர்றேன்.

1.கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..

“ ஏய் சனியனே! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு”

’ஏம்மா’

”கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்”

”அப்பா மட்டும் விளையாடுறார்”

”அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்”


2.பிரிவுத்துயரில் வாடும் தன் காதலிக்கு காதலன் எழுதும் கடிதம்.

அன்பே பிரிவைப் பற்றி கவலைகொள்ளாதே.இது தற்காலிகமானது.இந்த உலகமே நம்மை எதிர்த்தாலும் சரி. அந்த வானமே இடிந்து விழுந்தாலும் சரி.அந்த கடலைகளே கரைதாண்டி வந்தாலும் சரி,நீயும் நானும் இணைவதை யாராலும் தடுக்க இயலாது.எவ்வளவு இடரையும் எதிர்த்து உன்னைக் கரம் பிடிப்பேன்.இது நம் தூய்மையான உறுதியான காதலின் மீது ஆணை.

இப்படிக்கு ஆயிரம் முத்தங்களுடன் உன் அன்புக்காதலன்.

பின் குறிப்பு : வரும் வெள்ளியன்று இடி,மின்னல்,மழை வராமல் இருந்தால் நிச்சயம் உன்னைச்சந்திக்கிறேன்.

3. பாதிரியார்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆசிரியர் :

”மாணவர்களே சுவர்க்கத்தைப் பற்றி நீங்கள் பிரசங்கிக்கும்போது உங்கள் முகம் பிரகாசமாக இருக்கட்டும்.உங்கள் கண்களானது நிறைந்த ஒளி கொள்ளட்டும்.உங்கள் குரல் மென்மையாக தெளிவாக ஒலிக்கட்டும். உங்களின் வார்த்தைகள் இனிக்கட்டும்.உங்கள் புன்னகைகள் மலர்ந்து மனம் வீசட்டும்.”

அப்போது திடீரென்று ஒரு மாணவன் எழுந்து “ நரகத்தைப் பற்றி பேசும்போது, என்ன செய்வது?”

ஆசிரியர், ”நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.இப்படியே உங்கள் முகம் சாதாரணமாகயிருந்தால் போதுமானது”.

4. ஒரு காட்டு வழியில் இரு கன்னியாஸ்திரிகள் வந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது அவ்வழியே தீடீரெனத் இரு முரடர்கள் தோன்றி அவர்கள் இருவரையும் புதருக்கு மறைவில் தூக்கிச்சென்றுவிடுகிறார்கள்.

முதல் புதலிருந்து சத்தம் வருகிறது:

”கடவுளே இவன் என்ன செய்கிறான் என்று அறியாமல் செய்கிறான். இவனை மன்னிப்பீராக”

இப்போது இரண்டாவது புதரிலிருந்து :

“அய்யோ கடவுளே இவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே”.

ஒஷோவிடமிருந்து நான் தெரிந்து கொள்வது என்பது புன்னகையோடு எதிர்கொள்ளப்படும் ஒரு மரணமென்பது நம் அறுபதாண்டுகால வாழ்க்கையைவிட அர்த்தச்செறிவுள்ளது.

பரிந்துரை...

திரு.ராம் அவர்களின் ( கற்றது தமிழ் பட இயக்குனர்) வலைத்தளத்தளமான “காட்சி” யில் வரும் யமுனா ராகவேந்திரனின் - அற்றவைகளால் நிரம்பியவள்- என்ற   தொடர்.

 அற்புதமான,தனக்கென்று பிரத்தியேகமான நடையில் கதை சொல்லும்  யமுனா ராகவன் அவர்கள் ஒரு மருத்துவர்.மருத்துவருக்கு தனது துறை சார்ந்த விஷயங்களை படிப்பதற்கே போதுமான நேரம் இல்லாத போது இது போன்ற ஒரு தொடர்கதை எழுதுபவரை பார்க்கையில் மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. இவருடைய கதைகளுக்கிடையில் வரும் தகவல்களைக் கண்ணுறும்போது நிச்சயம் இவர் ஒரு தீவிரமான வாசிப்புத்தளத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை.

கதை சொல்லியின் நடை ,உத்தி மற்றும் கதைகளுக்கிடையில் அவர் எடுத்தாளும் விஷயங்களின் கனம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் , இவர் சாதரன கதைசொல்லியாகயில்லாமல் ஒரு தேர்ந்த படைப்பாளி -யென்றே நான் கருதுகிறேன்.

ஒரு புனைவை உண்மையென நம்பும்படியாகவும்,ஒரு உண்மையை புனைவென நம்பும்படியாகவும் எழுதும் வெகு சில எழுத்தாளர்களில் ( நாஞ்சில் நாடன்,யுவன் சந்திரசேகர்) நான் யமுனா ராகவேந்திரனையும் இணைத்துக்கொள்கிறேன்.

ஜெயமோகனைப் போல இவருடைய கதைகளும் தகவல்களால் நிரம்பியது (informations). பயனுள்ள தகவல்களே. மருத்துவ துறையைப் பற்றிய இவருடைய தகவல்கள் ஒரு சமயம் அதிர்ச்சிக்குரியதாகவும், ஆச்சரியத்-திற்குரியதாகவும் சில சமயங்களில் வேதனைக்குரியதாகவும் உள்ளது.

ஒரு சாதாரன மனிதனாகவும்,ஒரு மருத்துவராகவும்,ஒரு பெண்ணாகவும் மான மனநிலைகளை அவர் பதிவுசெய்யுமிடத்திலும் சரி,அந்த தோற்றங்கள், ஒவ்வொருப் பிரச்சனையை எதிர்கொள்ளும் போது எவ்வாறு மாற்றம் பெறுகிறது என்று பதிவு செய்யுமிடத்திலும் சரி அவருடைய எழுத்து முற்றிலும் ஒரு புதிய கோணம் பெறுகிறது.

நல்ல வாசிப்பிற்கான தேடல் உள்ளவர்கள் தவறவிடக்கூடாத எழுத்தாளர் இவர்.


இவருடைய தொடரைப் படிக்க  http://kaattchi.blogspot.com/2010/05/12.html



 

வெள்ளி, 21 மே, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

இன்னும் சில தினங்கள்

நிகழ்வுகள் எல்லாம் நினைவுகளாகிவிடும்.

அவரவர்க்கென்று தனித் தனி உலகங்கள்

எதிர்படும்போதில் அறிந்துகொண்டால்

புன்னகைக்கலாம்

சலனமின்றியும் கடந்துகொள்ளலாம்

அவ்வளவே மூன்றாண்டுகளின்

கனம்.

பரஸ்பர நல விசாரிப்புகளென்பது

அன்றாட அவஸ்தைகளுக்கிடையில்

 வானம் பார்ப்பது போலத்தான்...

***************************************************

வாடிய

வாடும் ரோஜாக்கள்

நிறமிழக்க ஆரம்பித்திருக்கும்

வாழ்த்து அட்டைகள்

தூசு குந்தியிருக்கும்

 சேகரித்த புத்தகங்கள்

புரட்ட நினைவூட்டும்

கவிதைக் குறிப்புகளென

எப்படியோ நிரம்பிவிடுகிறது

நமக்கிடையேயான எல்லாமும்

குறிப்பு : இதற்கு நீ பதிலி என்று பெயரிட்டுக்கொள்ளலாம்.

ஏய் டண்னக்கா! டண்னக்கா!

கீழ்வரும் பாடல்களைக் கேட்கும்போதிலெல்லாம் இவரைப் பற்றி என்னுடைய கோணத்தில சில தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டுமென நினைத்துக்கொள்வேன். இதுவரை இந்த பாடல்களைக் கூறி இவரைப் பற்றி யாரும் எழுதியதாக என் கவனத்திற்கு வரவில்லை...

இனி பாடல்களைப் பார்ப்போம்.....

’தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில்

தடுமாறித் தாமரைப் பூ மீது விழுந்தனவோ

இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும்

மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ

சந்தணக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம் அரங்கேற

அதுதானே உன் கன்னம்...

மேகத்தை மணந்திட வானத்தில் சுயவரம் நடத்திடும்

வானவில் உன் வண்ணம்....

இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்

கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாய்...’

மைதிலி என்னைக் காதலி என்னும் படத்தில் ஒரு பொன்மானே எனத் தொடங்கும் ஒரு அருமையான பாடல்.

**********************************************************************

வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்

புது முகமான மலர்களே நீங்கள்

நதிகளில் ஆடி கவி பல பாடி அசைந்து அசைந்து ஆடுங்கள்...

கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில்

சலனம் அம்மம்மா....

உன் மைவிழிக்குளத்தினில் தவழ்வது மீனினமோ

கவி கண்டிட மனத்தினில் கமழ்வது தமிழ் மனமோ

செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன்

காந்த விழிகள் புது ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட

ஏதோ ஏதோ குயில்கள்

மலையில் நெளியும் மேகக் குழல்கள்

தாகம் தீர்த்திடுமோ பூவில் மோத

பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ

மாதுளை இதழாழ்  மாங்கனி நிறத்தால்

மாதவி எழிழால் அம்மம்மா....

சுருள் வாழையின் மென்மையை

மேனியில் கொண்டவளே இருள் காடென்னும்

கூந்தலை இடைவரக் கண்டவளே

நூல்தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க

நெளிகின்ற வடிவம் மத் தாளத்தைப் போலே

தேகத்தையாக்கி குழல்கத்தை ஜாலம்

இது ரயில் பயணங்களில் வரும் பாடல்.

******************************************************************

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாள்ம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்...

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைந்தது

உறவுறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது

உயிரிளந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது..

ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது.

****************************************************************

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்

கலையிழந்த மாடத்திலே முகாரி ராகம்

முந்தானை பார்த்து முன்னூறு கவிதை

எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி

முன்னாடி அறியா பெண் மணதைக் கேட்டு

அன்புண்டு வாழும் காளையர் கோடி...

ஒரு தலை ராகம் எந்த வகையினைச் சாரும்

அவள் இறக்கத்தை தேடும் என் மனம் பாடும்.

********************************************

நினைவு வெள்ளம் பெருகிவர நெருப்பெனவே சுடுகிறது

பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை

நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை

படுக்கை விரித்துப்போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு..

மேற்ச்சொன்ன பாடல்கள் ”ஒரு தலைராகம்” என்ற படத்தில் இடம்பெற்றவை.

*************************************************************************

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி..

உன் பிரிவினில் ஏதடி சாந்தி உன் உறவினில்தானடி சாந்தி..

எனத்தொடங்கும் இப்பாடலின் எல்லா வரிகளும் சாந்தி என்றே முடியும் இப்பாடல் இடம் பெற்றத் திரைப்படம் “ இரயில் பயணங்களில்”.

*************************************************************************

உயிரே வா உறவே வா...அழிவதில்லைக் காதல்

அதுவே என் பாடல் அன்பே வந்துவிடுவா....


சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள் சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள்

சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள் நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்...

இது ”மோனிஷா என் மோனலிசா” என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்.






மேற்க்கண்ட பாடல்கள் யாவும் திரு.T.ராஜேந்திரர் படங்களில் அவரே இசையமைத்து,அவரே பாடல்கள் எழுதி, அவரே படமாக்கிய சிறந்த பாடல்கள் ஆகும்..

*******************************************************************
அதே போல ”வைகைகரைக் காற்றே நில்லு”  எனத் தொடங்கும் பாடலில்( படப்பெயர் தெரியவில்லை)

மாக்கோலம் போடுவதற்கு வரவில்லையே

அவள்கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே


காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கன்னிவிடும்..

மேலே சொன்ன வரிகளில் கோலம் என்ற ஒரே சொல் இடம்பெறும் இடத்தை பொறுத்து இரு பொருள் தருகிறது.இதே போலத்தான் கன்னி என்ற சொல்லும்.


இளையராஜா கோலச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த பாடல்களைக் கொண்டு வந்தே,T.R.அன்றைய கல்லூரி இளைஞர்களின் மனதினில் இடம் பிடித்தார்.

மேலும் யாருடைய பாணியையும் பின்பற்றாமல் தனக்கென்று ஒரு தனி வழியைக் கையாண்டு மிக வெற்றிகரமாகவே வளர்ந்து வந்தார்..

எந்த ஒரு பின்பலமுமின்றி முற்றிலும் தனக்கு அவவளவாக பரிச்சையமில்லாத துறையில் ஒருவருடைய கவனித்தக்க முன்னேற்றமானது சாதனையென்றே கருதத்தக்கதாகும்.

அவ்வாறாக இளையாராஜாவினுடைய காலகட்டத்திலேயே தன்னுடைய இசைக்கும் ஒரு முகவரியை பெற்றுக்கொண்டவர் இவர்.

இவரும் எங்கும் இதுவரைக்கும் முறைப்படி இசைக்கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டதேயில்லை...

இவரைப் பற்றி நான் அறிந்த சில தகவல்கள் :-

* திரைப்படத்துறையில் இவருடைய ரசிகர்கள் இவரை ”அஷ்டவதானி T.ராஜேந்திரர்” என்றே குறிப்பிடுகிறார்கள்.( அஷ்டம் = எட்டு என்று பொருள்படும்)

கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,இசை,பாடல்கள்,ஒளிப்பதிவு, எட்டாவது நடிப்பா,பாடகரா (அ) கலை இயக்குனர் பணியா என்று சரியாகத்தெரியவில்லை.

* மேலும் அந்த காலகட்டத்திலேயே மிகுந்த அளவில் “செட்” போட்டு படமெடுத்தவர். காட்சிகள் படமாக்கப்பட்டவுடனே அந்த ” செட்டை” அப்படியே மற்ற மொழிக்காரர்ளுக்கு விற்றுவிடுவார்.அந்த அளவிற்கு இவருடைய “செட்” பிரபலம். ஒருவகையில் இவர் சங்கருக்கு  முன்னோடி என்று கூட கூறலாம்.

* இவருடைய முதல் திரைப்படம் ‘ஒரு தலை ராகம்’( கிட்டத்தட்ட ஒரு வரும் ஒடிய திரைப்படமென்பது செவி வழிச் செய்தி.) இதிலுள்ள பாடல்கள் எல்லாமுமே ஆண் குரலாகவே இருக்கும். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றிக்கும் பரவலான கவனத்திற்கும் உள்ளானவர்.

*தென்னிந்திய திரைப்படத்துறையில் தனி ஒருவர் கிட்டத்தட்ட எட்டுத் துறைகளைக் கைகயாள்பவர் இவர் மட்டுமே என்பது  என்வரையிலான கருத்து.

* இவர் 40 குரல்களில் பேசும் வல்லமுடையவர்.அதற்காக தங்கப்பதக்கமும் வாங்கியவர் என்பது இவருடையப் பேட்டியில் கூறிய செய்தியாகும்.சில குரல்களை பேசிக்காண்பித்தார்.

* மேல்நிலை வரலாற்று பாடத்தில் (MA HISTRY) சிறந்த மதிப்பெண்களுக்காக தங்கப் பதக்கம் வாங்கியவர்.

*இவருடைய காதல் மனைவியின் பெயர் உஷா. இவரை நீங்கள் ”இரயில் பயனங்களில்” என்ற படத்தில் நாயகியின் தோழியாக பார்திருக்க வாய்ப்புண்டு. “உயிருள்ளவரை உஷா என்று என் மனைவியைக் கைப்பிடித்தேன்.இன்று வரையிலும் அப்படியே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்பது இவருடைய கருத்து. வெற்றிகரமான காதல் வாழ்க்கைப் பற்றிய கணக்கெடுப்பில் நிச்சயம் இவரை இணைத்துக்கொள்ளலாம்.

*சிறந்த மேடைப் பேச்சாளர்.உஷா என்ற வார நூலின் ஆசிரியர்.

*தனிக்கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

* பூங்காவனத தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவுமிருந்துள்ளார்.

* பொதுவாக பூங்காவனம் பகுதியில் இவருக்கு நல்ல செல்வாக்குண்டு என்பது செய்தித்தாள் செய்தி.

* ஒரு முறை மீன் பாடி வண்டியை காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருந்தற்காக இரண்டு மணிநேரம் காவல் நிலைய ஆனையரிடம் வாதாடி அதை அந்த ஏழைக்கு மீட்டுத்தந்தவர்.

* பொதுவாக நடிகர் சங்கச் செயல்பாடுகளிலோ (அ) திரைப்பட விழாக்களிலோ சில ஆண்டுகள் முன்புவரை அதிகம் பங்கேறகாதவர்.

*எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்.

* முதல்படத்திலிருந்து இன்று வரை அதே தலைமுடியுடனும்,தாடியுடனும் இருப்பவர்.

இவருடைய தன்னம்பிக்கை,உழைப்பு மற்றும் வெளிப்டையானத்  தன்மை ஆகியவற்றின் காரணமாக இவர் மேல் எப்போதுமே எனக்கு ஒரு சஃப்ட் கார்னர் உண்டு.

திங்கள், 17 மே, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

எட்டாத வானில்

கிட்டாத நிலா

அழகுடன் அவளும்.....

*************************

நீ காண நான் (மறைய)

நான் காண நீ (மறைய)

நாம் காண எல்லாம்....

********************************

ஒரு மழையீரக் காற்றாய்

நீயென்னை கடக்கும் போதிலெல்லாம்

இரயில் கடக்கும் தண்டவாளமாய் நான்...

************************************************

பார்வையைப் பிடுங்கி

வேறு பக்கம் நட்டு

நகங்கடிக்கத் தவறி

விரல் கடித்து

பெண்டுலம் போல் சலிக்காமல் நடந்து

இயல்பாயிருப்பதை விட கடினம்

அதற்காக முயற்சிப்பது

பரஸ்பரம் பார்த்துக்கொண்ட பிறகும்......

சனி, 15 மே, 2010

நான் நேசிக்கும் எழுத்தாளர்கள்

' என்னுடைய தனித்தன்மை என்பது எல்லாவற்றுக்காகவும் திறந்த மனநிலையுடன்இருப்பது. ஒரு கவிஞனுக்கு இது முக்கியம். இது ஒரு மனநிலையல்ல. இயல்பு. (not a mood an attidue). ’
 
கையில் அள்ளிய நீர்
அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய 
 நீர் நதிக்கு அன்னியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கைநீரக் கவிழ்த்தேன் போகும்
நதியில் எது என் நீர்?

*************************************************
 
 உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டுநீர் ஒசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு......
 
***************************************************
 
காற்று ஏற்றிய துகளில்
கண் கரைந்து நீராச்சு பின்
எதிரில் வந்தவர்க்கு தலைக்குப்
பதிலாய் பச்சைச் சூரியன்
 
**************************************
 
கண்ணை ஆரோக்கியமாக வத்துக்கொள் 
கண்ணே சகல நோய்க்கும் காரணம்
 
***************************************************
 
ஒரு நல்ல படைப்பை போல் அறிமுகமும்,அடயாளமும் வேறெதுவுமில்லை ஒரு படைப்பாளிக்கு. 
 
ஆம்! கவிதையைப் பற்றி பேசும்போதிலெல்லாம்  திரு.ஜெயமோகன் அவர்கள்  தவறாமல் எடுத்தாளும் கவிதையே மேற்ச்சொன்ன கையில் அள்ளிய நீர் கவிதை.கவிதைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும், இலக்கியத்திற்கும் கூட  இந்த கவிதை மிகச்சரியாகவே பொருந்தும்.
 
கவிதையின் பூடக்ததன்மை மற்றும் புரியாத்தன்மை ஆகியவை இவருடைய கவிதையில் இல்லை.அவர் கூறியது போலவே திறந்த மனநிலையுடன் அணுகும் எந்த வாசகருக்கும் கவிதையனுபவம் நிச்சயம்.
 
ஆனால் அவர் கூறும் திறந்த மனநிலை வேறு.நான் கூற விரும்பும் திறந்த மனநிலை வேறு. நான் கூற விரும்பும் திறந்த மனநிலையென்பது உங்கள் மனம் ஒரு நல்ல வாசிப்பின் மூலம் திறந்ததாய் இருக்கவேண்டும்.
 
வாசிப்பும், வாழ்க்கையனுபவம் மட்டுமே எந்த படைப்பையும் புரிந்துகொள்வதற்கு முக்கியமான அடிப்படை. 
 
மேற்ச்சொன்னதைத் தவிர, ஒரு படைப்பை புரிந்துகொள்வதற்கென்று குறுக்குவழியெதுவுமில்லை...
 
படைப்பாளிகளை நேரடியாக அனுகினால் என்ன? என்று உங்களுக்குத்தோன்றினால்,ஒரு நல்ல படைப்பானது படைப்பாளியை தாண்டி பயணிக்க கூடியது.சில சமயங்களில் ஒரு நல்ல வாசகன் தன் வாழ்கையனுபவத்தின்படி சென்றடைந்த இடத்தை அந்த படைப்பாளியால் உத்தேசித்திருக்ககூட இயலாமல் போகலாம். ஒரு படைப்பை புரிந்து கொள்ள சில சமயங்களில் நமக்கும் அந்த படைப்பிற்கும் குறைந்தளவில் ஒரு இடைவெளிகூட தேவைப்படலாம்.இதைப் பற்றி திரு.சுரா.அவர்கள் ஜே.ஜே.சில குறிப்புகள் என்ற நூலின் ஒரிடத்தில் சம்பத் என்ற கதாபாத்திரத்தின் மூலம்  மிக அருமையாக விளக்கியிருப்பார்.
 
 எனவே மேற்சொன்ன கவிதைகள் திரு.சுகுமாரன் என்பவரால் எழுதப்பட்ட கவிதைத் தொகுதியிலிருந்து  எடுத்தாளப்பட்டவையாகும். 
 
சுகுமாரனைப் பற்றி அவ்வப்போது திரு.சுரா.,நாஞ்சில்,ஜெ.மோ அ உயிர்மை,காலச்சுவடு,உயிரெழுத்து போன்ற இதழ்களில் படித்ததோடு சரி.
பெரிய அளவில் அவரோடோ (அ) அவருடைய படைப்போடோ நேரடித் தொடர்பு என்று எதுவுமில்லை.
 
மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு புத்தக கண்காட்சியில் இவருடைய மொத்தக்கவிதைகளின் தொகுதியாக வெளிவந்த “ பூமியை வாசிக்கும் சிறுமி” தான் நான் படித்த இவருடைய முதல் புத்தகம்.
 
பொதுவாக எந்த ஒரு எழுத்தாளரின் மொத்த தொகுதியை வாங்குவது அவ்வளவு உகந்ததல்ல, ஒரு அயர்ச்சையையும்,சோர்வையுமே தருமென்பது திரு.ஜெ.மோ. அவர்களின் கூற்று. ஆனாலும் அதிலும் விதி விலக்குகள் உண்டு.அதற்கு உதாரணம் இந்தத்தொகுதியே.
 
இந்த தொகுதியில் மொத்தம் 109கவிதைகள் உள்ளது.என்னைப் பொறுத்தவரையில் இதிலுள்ள எல்லா கவிதைகளுமே எனக்கு முக்கிய-மாகப்படுகிறது. ஒரு உச்சகட்ட கவிதையனுபவத்தைத் தரும் பல நல்ல கவிதைகள் இந்தத்தொகுதியில் உள்ளது.
 
இந்த கவிதைத்தொகுதியைத்தொடர்ந்து நான் வாங்கிய புத்தகங்கள் 1. தனிமையின் வழி 2. இழந்த பின்னும் இருக்கும் உலகம். இரண்டுமே பத்தியெழுத்துக்கள் மற்றும் கட்டுரைகளை கொண்ட தொகுதியாகும்.
என்வாசிப்பு மற்றும் வாழ்க்கையனுபவம் சார்ந்து எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
 
ஒரு நல்ல இலக்கிய வாசகன் அவசியம் படிக்கப் பட வேண்டிய எழுத்தாளர்களில் இவர் முக்கியானவர். நவீன கவிதையில் இவருடைய இடம் மிக வலுவானதும் அசைக்கமுடியாதும் ஆகும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
 
 தனக்குப்பிடித்தமான ஒரு மராட்டிய கவிஞரின் ஒரு கவிதையை அவர் நினவுகூறும் விதம் அவருடைய வார்த்தைகளிலேயே பின்வருமாறு... 
 
’நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலை நேரம் . திருவனந்தபுரத்தில் நான் அப்போது வசித்து வந்த வீடு பத்மநாப சுவாமி ஆலயத்துக்கருகில் இருந்தது. கோவிலின் பின் வாசலையொட்டிய வழியில்தான் பெருமபாலும் என் பயணம். சமயங்களில் ஆல்யத்துக்கு முன்னாலிருக்கும் பத்மதீர்த்தக் குளத்தையொட்டிய வழியில் போக நேரும். அப்போதெல்லாம் ஒரு மூதாட்டி வழியை மறிப்பார். ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதாக மற்ற சுற்றுலாப் பயணிகளிடம் இறைஞ்சுவதுபோலவே என்னிடமும் கெஞ்சுவார். மறுத்து நடக்கும் போதெல்லாம் கையைப் பற்றிக் கொள்வார். இப்படி ஓரிரு முறைகள் நடந்திருக்கின்றன. அந்த மூதாட்டி கையை பற்றும்போதெல்லாம் அந்தத் தொடுகை பழக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இதற்கு முன்னரும் இதே போல ஆலய முற்றத்தில் யாரோ பற்றியிழுத்ததுபோல உணர்ந்திருக்- கிறேன்.


சில நாட்களுக்குப் பிறகு ஒரு காலை நேரத்தில் அந்த வழியாகக் கடந்து சென்றபோது குளக்கரை வேலிக்கருகில் ஒரு மூட்டை கிடந்தது. நடையை மட்டுப்படுத்திப் பார்த்தேன். மூட்டையல்ல. சடலம். 'ரெண்டு ச்க்கரம் கொடு' என்று இறைஞ்சி அலைந்து கொண்டிருந்த அந்த மூதாட்டியின் சடலம். அந்த நொடியில் யாரோ என் கையைப் பிடித்திழுப்பதுபோல உணர்ந்தேன். கூடவே அந்த மூதாட்டி தொட்டபோதெல்லாம் யாரோ தொட்டதாகத் தோன்றியதன் காரணமும் விளங்கியது. அது ஜெஜூரியில் வாசித்த கிழவியின் தொடுகை. கொலாட்கர் பார்த்த கிழவியை நான் பார்த்த்தில்லை. நான் பார்த்த கிழவியை அவரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.இருந்தும் கவிதையின் கை எல்லாரையும் தொடக்கூடியதுதானோ?’

இவருடைய வலைத்தளம் : http://vaalnilam.blogspot.com/

வெள்ளி, 14 மே, 2010

சில மின்னல்கள்...

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு பொதுவாக எல்லாத்துறையிலுமே ஒரு முக்கியமான பிரச்சனைவரும்.இனி அடுத்து என்ன?  இந்த கேள்விக்கு யார் தன்னை தயார்படுத்திக்கொள்கிறார்களோ அவர்களால் மட்டுமே அந்த துறையில் தொடர்ந்து நீடிக்க இயலும்.


இது படைப்பு துறைகளில் இருப்பவர்களுக்கு ரொம்பவே பொருந்தும்...அந்த அந்த கால கட்டங்களுக்கேற்ப ரசனை, கருத்து, உடை, உறவுமுறைகள், பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் முதலிய பலவும் மாறுதலுக்குள்ளாகும், விமர்ச்சனத்திற்குள்ளாகும், கேலிக்குள்ளாகும், மேன்மைக்குள்ளாகும்..இது தவிர்க்க இயலாது.


ஒரு காலகட்டத்தில் நம்மை ஆச்சரியத்திற்கும், அதிசயத்திற்கும் உள்ளாக்கிய விட்டலாச்சாரிய படங்கள் இன்றளவும் மனசிலேயே நிற்கிறது. ஆனால் இப்பொழுது வருகிற படங்கள் அந்த மாதிரியான எந்த உணர்வையுமே தருவதில்லை.ஒரு விலகலையே உண்டுபன்னுகிறது.


அதனால்தான் எல்லோராலும் ரொம்பவும் பாரட்டப்பட்ட அவதார் மற்றும் ருத்ரம் போன்ற படங்களை எனக்கு பார்க்கப்பிடிக்கவில்லை..


திரைப்படமென்பது ஒரு மிக முக்கியமான ஊடகம். ஒரு வெற்றுத்தாளில் இருக்கும் சாத்தியங்கள் அனேகம்.அது யாருடைய கையில் இருக்கிறது என்பதே.ஒரு சித்திரக்காரனின் கையிலும், ஒரு கவிஞனின் கையிலும், அதுவே ஒரு மளிகைக் கடைக்காரனின் கையிலும், ஒரு குழந்தையின் கையிலும்.பயண்னென்னவோ எல்லோருக்குமுண்டு. அதுபோலவே நவீன காலங்களில் எல்லா கலைகளுக்கும் நிகழ்கிறது.


தான் பார்த்து,கேட்டு,படித்த,ரசித்த விஷயங்களை உட்கிரகித்து தன்னுடைய சுய அனுபவம் சார்ந்து தனக்கென்று ஒரு தனி வழியை நேர்மையாக தேர்பவர்களைக் காலம் ஒரு போதும் மறப்பதில்லை.


எனக்கு அப்படித் தேர்ந்த ஒரு நவீன கால நல்ல திரைப்பட கலைஞனாக திரு.ஜீவா அவர்களை மிகவும் பிடிக்கும். நான் கல்லூரி முதலாமாண்டு படித்திக்கொண்டிருந்தேன்.அப்போதுதான் 12B படம் வந்திருந்தது.


(கலையென்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஆவணம்.இது திரப்படங்களுக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.நான் கல்லூரி முடித்து கிட்டத்தட்ட 7ஆண்டுகள் ஆகிறது.அதன்பிறகு எத்தனையோ சம்பவங்கள்.இத்துனைக்கும் பிறகு எப்பவாவது கல்லூரி நாட்களின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை நினைவுபடுத்த நினைக்கையில் அது எந்த ஆண்டு என்று நினைவு கூர்வதற்கு அப்போது பார்த்தத் திரைப்படங்கள் தான் துணை நிற்கிறது.)


படத்தைப் பார்த்தயெல்லோருமே புரியவில்லையென்ற பொன்மொழியைத்தான் உதிர்த்தார்களேயன்றி படத்தின் ஒரு புது முயற்சியை யாரும் புரிந்துகொணடதாகத் தெரியவில்லை.வரவில்லை, புரியாது என்று சொன்ன நண்பனை,நாம் ஒவ்வொரு காட்சியின்போதும் விவாதித்து தெரிந்துகொள்ளளாம் என்று கூறி அழைத்துச்சென்றேன்.

ஆனால் படத்தின் ஆரம்பித்திலேயே  தன்னிலை விளக்கமாக கதையோட்டத்தின் யுக்தியைப் பற்றி திரு.ஜீவா கூறியது படத்தை வெகு சுலபமாக்கியது.ஒரிரு சிறிய தவறுகளைத் தவிர அந்த புதிய கதைசொல்லும் பாணியை மிகச்சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். இதுனுடைய சற்று மேம்பட்ட வடிவத்தின் ஒரு சிறு கூறே விண்.வரு.யாவின்  இறுதிக்காட்சியென்பது என் கருத்து.

ஷியாமிற்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது.படத்தின் காட்சியமைப்பு,பாடல்கள்,தேவையான அளவு வசனங்கள் என்று மிகச்சிறப்பாகவே அமைந்திருந்தது.இன்னொன்று கதை சொல்லும் முறையில் ஒரு சாதரணமான அனுகுமுறை, நல்ல நண்பர்கள் இருவர் பிடித்தமான் உணவுப்பண்டங்களைக் கொறித்து கொண்டே சில விஷயங் களைப் பேசிக்கொண்டிருப்பது போலிருந்தது.

குறிப்பாக ஒரு கல்யாண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு வரும் ஒரு இசை அவ்வளவு அருமையாகவும் புதுமையாகவும் இருக்கும்.அது உள்ளூர் வாத்தியங்கள் மற்றும் மேனாட்டு வாத்தியங்களின் கலவையென  அற்புதமாகயிருக்கும்.

அதன்பிறகு அவருடைய படங்கள் வந்தால் தவறவிடுவதில்லை...

முதலில் எடுத்து சிறு பிரச்சனை காரணமாக 12Bக்கு அப்புறம் வந்த படம் உள்ளம் கேட்குமே.ஒரு கல்லூரி மாணவர்களின் நட்பு,காதல்,சில மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் கல்லுரிக்குப் பிறகு யெல்லோரும் ஒன்றுகூடும்போது அதை நினைத்துப்பார்க்கும் சில துளிகள்..

வகுப்பறையையே காட்டாமல் விளையாட்டு மைதானங்கள், கோவில், விடுதியறை மற்றும் வீடு என்று எடுக்கப் பட்ட படங்களில் இதுவுமொன்று.ஆனால் ஒரு சில அழகான விஷயங்களின் மூலம் இதை தனித்துவப்படுத்தி ஜீவாவின் படமென்று நினைக்க வைத்திருப்பதே அவரின் வெற்றி.

அடுத்து வந்த அவரின் படம்தான் என்னை பெரிதும் கவர்ந்த “உன்னாலே உன்னாலே” திரைப்படம். அவருடைய படங்களில் இது முக்கியமான படமென்பது என் அபிப்ராயம்.

இந்த படத்தின் காட்சியமைப்பு மற்றும் பாடல்கள் அற்புதமாக இருக்கும்.குறிப்பாக ஆஸ்திரேலியா.நிறைய படங்களில் ஆஸ்திரேலியாவை பார்ந்திருந்தாலும் இவர் காட்டிய ஆஸ்திரேலியாதான் என்னை பெரிதும் கவர்ந்தது.

 ஊட்டிக்கு : பாலுமேகேந்திரா,சம்பல்,லடாக் பகுதிக்கு : பி.சி. செம்மண் புழுதிக்காட்டுக்கு : ராம்ஜி மாதிரி ஆஸ்திரேலியாவுக்கு : ஜீவாவைச் சொல்லலாம்.

முதல் நாள் இன்று..பாடலில் வினய் புகைத்துக்கொண்டே சோம்பல் முறித்து பாடும்போதும்,பாட்டின் தொடக்கத்தில் பூங்காவின் ஒரு இருக்கையில் அமர்ந்திருப்பதும்,தீடீரென்று ஒரு புதிய மனிதருடன் அந்தப் பெண் கைகோர்த்துப் பாடுவதும்..தோழியின் திருமணத்திற்கு வெறுங்கையுடன் சென்று பரிசுப்பொருளுக்குப் பதிலாக பாட்டையே பரிசாக்கித்தருவதும்..சதாவை காத்திருக்க வைத்து அதைப் பார்த்து வினய் ரசித்துக்கொண்டிருப்பதும், சதாவின் முகவரியைக் கண்டுபிடிக்க வாகனத்தை விபத்துக்குள்ளாக்குவதும் என ஒவ்வொரு காட்சியிலும் ஜீவா தன் முத்திரையை பதித்திருப்பார்.

தாம்தூம் நிச்சயம் அவருடைய பாணியிலான படமில்லை என்பது என் வரையிலான கருத்து.எனவே அப்படத்தைப் பற்றி நான் கருத்தேதும் கூற விரும்பவில்லை.

இவரிடமிருந்து இன்னும் சில பல நல்ல படைப்புக்களை எதிர்நோக்கிக் கொண்டுக்கையில்தான் இடியென அந்த செய்தி வந்து சேர்ந்தது.ஜீவா திடீரென்று மாரடைப்பால் படப்பிடிப்புக்கிடையில்(???) காலமானாரென்று.

அனேகமாக அவருடைய வயது அப்போது 42இருக்குமெனவும்,அவருடைய தந்தையும் அதே வயதில் மாரடைப்பால்தான் காலமானார் என்பது ஒரு  நண்பரின் மூலம் கேட்டறிந்தது மேலதிக செய்தி.

மரணம் தவிக்கப் தவிக்கப் பற்றுபவர்களில் சில சமயங்களில், நமக்கு பித்தமானவர்களே பெரும்பாலும் இடம்பெறுகிறார்கள்.

உயிரிணங்களில் மனிதர்கள் மட்டுமே தனக்கான ஒரு தடயத்தை விட்டுச்செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்.அந்த தடயத்தின் அழுத்தம்  அவரவர்களின் வாழ்வைப் பொறுத்தது. ஜீவாவின் தனது படைப்புக்களின் மூலம் அழுத்தமான தடத்தையே விட்டுச்சென்றிருக்கிறார்.

ஜீவாவின் படங்களை நான் பொருட்படுத்துவதற்கான காரணங்கள் பின்வருமாறு :

*அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு நடையைக் கையாண்டது.

* வக்கிரக்காட்சிகளோ (அ) நீதி போதனைகள் போன்ற விசயங்களோ இவர் படத்தில் இருப்பதில்லை.

* கதைக்கென்று பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல் மனிதர்களின் ஒரு சில குணாதிசயங்களை மட்டுமே மைய கருத்தாகக் கொண்டு படமெடுப்பது.

* பாடல்கள்,காட்சியமைப்புகளில் தெரியும் அவருடைய ரசனை.12B படத்தில் “ஒரு புன்னகைப் பூவே” என்ற பாட்டில் அவருடைய உதவியாளர்கள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களை இவர் பங்கேற்கச் செய்தது இவருடைய இந்தக் குணம் என்னை வெகுவாக கவர்ந்தது.

* இவருடைய படங்களை “பெப்பி ஸ்டைல்” என்று கூறக் கேட்டதுண்டு. 

* அவருடைய படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள். குறிப்பாகச் சொல்வதானால் “உன்னாலே உன்னாலே” படத்தில் வரும் ஒரு பாடல் எனக்கு இவருடைய இயல்பை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.

ஜுன் போனால் என்று ஆரம்பிக்கும் பாடலில் வரும் ஒரு சில வரிகளைத் தவிர மிச்சம் உள்ள வரிகளெல்லாம் அவருகென்றே எனக்குத் தோன்று-கிறது. நினைவிலிருந்து சில வரிகள் :

“நேற்றுயென்பதும் கையில்யில்லை நாளையென்பதும் பையில்யில்லை

இன்று மட்டுமே மிச்சமுண்டு தோழா..ஆஹா மொத்த பூமியும்

கூத்துக்காகத்தான்...அறைக்குள்ளே மழை வருமா. வெளியே வா குதுகலமா

இந்த பூமிப்பந்து எங்கள் கூடைப் பந்து..அந்த வானம் வந்து குடை

தந்ததின்று..சிறையிருக்கும் மனங்களை பறவை செய்..கரையிருக்கும்

நிலவினை சலவை செய்..இந்த உலகத்தில் விழாமல் எவருமில்லை..

* அவர் மேல் எனக்கு விமர்ச்சனங்கள் உண்டு. குறிப்பாக அவருடைய பாத்திர படைப்புகளின் பின்னனியை பற்றிய ஒரு குறைந்த அளவுக்கூட விபரக்குறிப்புகள் இருக்காது மற்றும் படங்களின் உச்சகட்ட காட்சியில் (climax) எப்போதும் ஒரு குழப்பத்துடனே முடிப்பதாகத்தோன்றும்.

எனினும் எனக்குப் பிடித்த முக்கிய திரைப்படக் கலைஞர்களில் திரு.ஜீவாவும் ஒருவர்.

வியாழன், 13 மே, 2010

ஒரு ஞாயிற்றுக் கிழமையும்-சில நிகழ்வுகளும்....

வழக்கம் போலவே ஒரு விடுமுறை தினம். வழக்கத்திற்குமாரான சில நண்பர்களுடன் கோவையில் நடந்த கலாப்ரியாவுக்கான ஒரு பாராட்டு விழாவுக்கான பயணத்திட்டமிடல்...

விபரம் முன்னமே அறிந்திருந்தும் திரு.முரளியிடமிருந்து வந்த அழைப்பில் இணைந்து கொள்வதென முடிவு செய்துவிட்டேன்...

உடன்பணிபுரிந்தவர்களாக இருந்த நானும், திரு.ராமன்குட்டி அவர்களும் பதிவர்களாக(!!??) அறிமுகப்படுத்திக்கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி.....

நான்,முரளி,பிரதீப் மற்றும் ராமன் நால்வருமென இனிதே(???) துவங்கியது பயணம்.என்னதான் எக்கி எக்கி குதிச்சாலும் ஏரோப்பிளான தொட முடியாதுங்கிற மாதிரி..என்னோட ஒட்டவாயிலிருந்து ஒயாத வாதம் எனக்கே பிடிக்கவில்லை.

சத்தியமாகவே என்னையுமறியாமல்தான் நான் விவதாங்களை தொடங்கிவிடுகிறேன்.சமீப காலங்களில் முடிந்தளவு நான் இதை கட்டுப்படுத்தியே வருகிறேன்.

நாங்கள் சென்று சேரும்போது திரு.நாஞ்சில் அவர்கள் பேசி முடித்து திரு.மணிகண்டன் கலாப்பிரியா பற்றி தான் எழுதி வைத்திருந்த கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தார். விமர்ச்சனக் கட்டுரையென்பதா (அ) சில விமர்ச்சனங்களோடு கூடிய கட்டுரையென்பதா எனத்தெரியவில்லை.
ஆனாலும் கலாப்பிரியா பற்றிய அவருடைய சில விமர்ச்சனங்கள் பொருட்படுத்தத் தக்கவையாகவே எனக்குத்தோன்றியது.

நாஞ்சில் பேச்சைத் தவறவிட்டதில் சற்று வருத்தமே.புதுப்புது அர்த்தங்கள் பெறும் சில நல்ல வார்த்தைகளையும்,சில புள்ளிவிபரங்களையும் கேட்க முடியாமல் போய்விட்டது...

அ.வெண்ணிலா-அவரைப்பாதித்த நிகழ்வொன்றையும் அதை நினைவுபடுத்தும் கலாப்பிரியாவின் கவிதைகளைப்பற்றியும் குறிப்பிட்டார்.

திரு.சுகுமாரனுடைய பேச்சில் தெரிந்த ஆற்றாமை நியாயமானதே. பொதுவாக படைப்புத்துறையில் தீவிரமாக இயங்கி,சில,பல நல்ல பங்களிப்புக்களை செய்த முக்கியமான படைப்பாளிகள் காணமலோ(அ) தொலைந்தோ போவதும் பிறகு புதிதாக வந்த அப்போதைய முக்கிய படைப்பாளிகள் அவரைக் கண்டெடுப்பதும் தமிழ் சூழலுக்கொன்றும் புதிதல்லவே. ஒன்று தகுதியில்லாத படைப்புக்களை உயர தூக்கிப்பிடிப்பது (அ) முக்கிய படைப்புகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது எங்களுடைய பரம்பரைப் பழக்கம்.

மரபின்மைந்தன் முத்தையா சங்கப்பாடல்களைத் தொட்டு கலாப்பிரியாவைப் பேசினார்.

ஜெ.மோ இதை விமர்ச்சன கூட்டமாக்கமல் கலாப்பிரியாவுக்கான பாராட்டு விழாவாகவே கருதுவதாக கூறினார்.கவிதை மற்றும் கவித்துவம் இதற்கான ஒரு நுன் வேறுபாட்டை சில தருணங்களைக் கூறி விளக்கினார்.சுகுமாரனுக்கு ஒரு பதிலையும் வைத்தார்.ஆனால் அதிலேயே தொக்கி நின்ற ஒரு கேள்வி மட்டும் என் மனதில் ஊசலாடுகிறது.
சிறந்த படைப்பாளிகளை மற்றவர்கள் சிறப்பிக்க வேண்டுமென்பதிலலை நாமாகவே அதைச் செய்யலாம் திரு.நாஞ்சிலுக்கு,அசோகமித்திரனுக்கு தானே அறுபதாம் விழா எடுத்ததை பகிர்ந்து கொண்டார். ஆனால் சுகுமாரனை இவர் சற்று முன்னமே கவனத்தில் கொண்டிருந்தாரெனில் அவருடைய ஆற்றாமையைத் தவிர்த்திருக்கலாமெனவேயெனக்குத் தோன்றுகிறது. நிச்சயம் விஷ்னுபுரத்தின் அடுத்த இலக்கிய கூட்டம் சுகுமாரனுக்காக இருக்குமென எதிர்பார்ப்போமாக.


இறுதியாகப் பேசிய கலாப்பிரியா, அவர் கவிதையைப் போலவே அழகாய்ப்பேசினார். ஞாபக ஏடுகளைப் புரட்டி கவிதைக்கான கணங்களைப்பகிர்ந்துகொண்டார். ஒரு அனுபவத்தை,காட்சியைக் கவிதையில் படம்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல.அதுகாரணமாகவே கவிதை படைப்புக்கலையின் உச்சம் என சொல்லப்படுகிறது.

நிகழ்ச்சி முடிந்த பின் முண்டியடித்தில் எல்லா படைப்பாளிகளுடனும் (அ.வெண்ணிலாவைத்தவிர : வாய்ப்புக்கிடைக்கவில்லை) பேச முடிந்தது.முதல் முயற்சி சுகுமாரனிடம் பாதி தோல்வியில் முடிய அடுத்த வாய்ப்பு ணிகண்டனுடனும், ஜெ.மோவிடம், நாஞ்சிலுடனும், கலாப்பிரியா-வுடனும் மற்றும் மறுபடியும் சுகுமாரனுடனும் .

மணிகண்டனுடன் ஒரு அறிமுகமும், அவர் எதேச்சையாக இதே மேடையில் இதற்குமுன்பு நடந்த ஜெ.மோ. பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் கேட்ட கேள்விகள் ஒரு முடிவுறா விவாதமாக வலைப்பதிவில் தொடர்ந்ததை அவருக்கு நினைவூட்டினேன்.

கலாப்பிரியாவின் ஏற்பாட்டில் நடந்த பதிவுகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பளித்தற்காகவும்,அருமையான மதிய உணவு வழ்ங்கியதற்குமான நன்றியை இந்த நிகழ்ச்சியின் மூலமாக தெரிவிக்க முடிந்தது மிகுந்த உவகையையளித்தது.


ஜெ.மோ வுடன்,அங்காடித் தெரு வசனத்திற்க்கான பாராட்டையும்,ஊமைச்செந்நாய் பற்றியும்,பதிவுகள் கூட்டத்தைத் தொடர்ந்து அவரைச்சந்திக்கும் மூன்றாவது நிகழ்வு இதுவெனவும்,நான் தொடர்ந்து மூன்று முறை சந்திக்கும் எழுத்தாளர் அவர்தானெனவும்,அவருடைய அசோகவனம் நூலைப்பற்றியும்,அதன் முதல்பாகத்தை வெளியிட்டாலாவது அடுத்தபாகம் வெளிவரும்வரையில் அதைப் படித்துக்கொண்டிருப்போம் என நான் கூற அதன் முதல் பாகமே மூன்று புத்தகங்களாகும் என்று வியப்பில் ஆழ்த்தினார்.உங்களுடைய முழுவாழ்க்கையனுபவமும் அதில் மொத்தமாக இடம்பெறுமா? என்றதற்கு ஒரு அர்த்தம் விளங்கிக்கொள்ள முடியாத புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தார். அப்போது திடீரென்று வந்த வாசகர் ஒருவர் ஜெ.மோவின் காலில் விழ,அவர் பாதியில் தடுக்க இனி நமக்கென்ன வேலையென்றொதுங்கி நாஞ்சிலையடைந்தேன்.

அவருடைய வீட்டிற்கு ஏற்கனவே வந்ததைக் கூறி பேச்சைத்துவக்கினேன்.புதிய புத்தகங்கள் பற்றி கேட்டபோது நாலைந்து புத்தகங்கள் இந்த மாதக்கடைசியில் வருவதாகக் கூறினார்.அதிலொரு கவிதைப்புத்தகமும் அடக்கம்.14வருடங்களுக்குப்பிறகு இரண்டாவதாக வரும் கவிதைப்புத்தகமெனக்கூறினார்.நாஞ்சில் கம்பராமயணத்தில் ஆழ்ந்து,தோய்ந்திருக்கிறார்.சில சமயங்களில் ஒரு முழுப்பாடலையோ (அ) முக்கியவரியையோ ஜெ.மோ.அவர்களுக்கு குறுந்தகவலாக அனுப்புவதுண்டாம்.( இது அவரை வீட்டில் சந்தித்தபோது அவர் கூறியது).

இதுதான் சந்தர்ப்பமென நானும் இன்னொரு வாசகரும் நீங்கள் ஏன் கம்பராமயணத்தையும் உங்களுடைய அனுபவத்தையும்,ரசனையையும் இணைத்து ஜெ.மோ.வின் சங்கச்சித்திரங்கள் போல் எழுதக்கூடாது எனக்கேட்டோம். மிகுந்த மன மகிழ்ச்சியுடன் உங்களைப்போல இதுவரை எந்த வாசகரும் கேட்கவில்லை.இப்பத்தான நீங்க கேக்கறீங்க? பார்போம் எனச்சொன்னார்.

அடுத்ததாக மறுபடியும் நான் சுகுமாரனைத்தேடிப் போய் அவருடைய சில கவிதைகளையும், இரண்டு கட்டுரைத்தொகுப்புகளைப் பற்றி என் பேச்சைத்துவக்கினேன். ஒரு முழுத்தொகுப்பாக வாங்கியதில் என்னை ஏமாற்றாத இரண்டு கவிதைப் புத்தகங்களில் ஒன்று சு.ரா.வுடயதும் இன்னொன்று அவருடையததும்தான் எனச் சொன்னதற்கு சிரித்தார்.அவருடய சில கவிதைகளை சிலாகித்தை கவனுமுடன் கேட்டவர் என்னைப்பற்றி விசாரித்தார். அவர் திருவனந்தபுரத்தில் பனியாற்றிக்கொண்டிருந்த ஊடகம் பற்றியும் அவருடய குடும்பத்தையும் பற்றிக்கேட்டேன்.எனக்கு இன்று வரையில் அவருடய எழுத்து மிகுந்த நெருக்கமாகயிருக்கிறது என்றதற்கு புன்னகைத்தார்.மெல்ல மலையாளிகளைப்பற்றி பேச்சுத்துவங்கியதுபோது கல்யாண்ஜீ அங்கு வந்தார்.அவரும் சுகுமாரனும் கவிதைப்பற்றிய உரையாடலைத் துவக்கியபோது ஒரிரு வாங்க்கியங்களுடன், நானும்பங்கேற்றுக் கொண்டிருக்கையில் முத்தையா கிளம்பளாமா என இருவரையுமே அழைத்துச்சென்றார்.


இவ்வளவு நிகழ்வுக்கிடையில் திரு.அரங்கசாமி (நிகழ்ச்சியேற்ப்- பாட்டாளர்களில் ஒருவர்).தானாகவே என்னிடம் முன்வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு(திருப்பூர்காரென) கூடிய விரைவில் இங்கும் ஒரு நிகழ்ச்சி நடத்தயிருப்பதாகவும் ஆகவே தொடர்பிலேயே-யிருக்குமாறும் கேட்டுக்கொண்டது மிகுந்த மனநெகிழ்வைத் தந்தது....

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சங்கத்தலைவர் (வெயிலான்) உரிமையோடு அழைத்துப் பேசியதும் பிறகு அவர்,திரு.வடகரைவேலன் மற்றும் நாங்கள் நால்வரும் ஒன்றாக உணவருந்தியதும் அந்த நாளை மேலும் அழகாகவும்,அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது.

இறுதியாக என் சொந்த கருத்து ஒன்று : எழுத்தாளர்கள் வயசுபொன்னங்க மாதிரி.அவ்வளவு சீக்கிரம் அவங்க நெருங்கவும் மாட்டாங்க..நம்மளையும் நெருங்க விடமாட்டாங்க...மனசுக்கு புடிச்ச பொன்னுனா எப்படி பசங்க துணிஞ்சு முன்னேருவாங்களோ அது மாதிரி நாமதான் எழுத்தாளர்களை அணுகனும்..நல்லதா இருந்தா ஆலிங்கனம்..இல்லைனா அனுபவம்..அவ்வளவுதான்.

செவ்வாய், 11 மே, 2010

என்னோட பத்து

இப்ப எல்லா பதிவர்களும் தங்களுக்குப் பிடித்தமான 10 பாடல்கள் பற்றி  பதிவெழுதிக்கொண்டிருக்கிறார்கள்...அதைப் பார்த்ததும் நமக்கும் அது மாதிரி எழுதனும்னு தோனுச்சி..ஆனா நம்ம தமிழ் சினிமால 10 பாட்டு மட்டும் தேர்ந்தெடுத்து எழுதறது அவ்வளவு சுலபமில்ல..இருந்தாலும் 10பாட்டுன்னு சொன்னவுடனே..அந்த நிமிடத்தில் தோன்றின ஒரு 10பாட்டை மட்டும் இங்கே சொல்றேன்...

12 வருடங்களுக்கு முன்னாடியெல்லாம் இப்ப இருக்கற மாதிரி எம்.பி3,டி.வி.டி பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.....அப்பத்தான் இதைப் பற்றியெல்லாம் லேசா நண்பர்களின் மூலமா கேள்விப்படறேன்...

அதனால அப்பல்லாம் பாட்டுக்கேக்கனுமனா டேப் ரிக்காடர்தான் ஒரே வழி.. TV,Cable connection,SCV,SS Music,V,M இப்படி சாங்ஸ் சேனல்கள் இருந்தாலும் எப்பவுமே நமக்கு பிடிச்ச பாட்டெல்லாம் போடமாட்டங்க...

அதானால நம்மளுடைய டேஸ்டுக்கு டேப்ரிக்காடர்தான் தோது...இந்த டேப் ரிக்கார்டருக்கு ரெண்டு விதமான கேஸட் இருக்கும்..1.60’s 2.90's.

60's இதுல ரெண்டு பக்கமும்( A & B) சேர்த்து மொத்தம் 12 முழுப்பாடல்கள் பிடிக்கும். 90’s ல ரெண்டு பக்கமும்( A & B) சேர்த்து 18 முழுப்பாடகள் பிடிக்கும். இது பொதுவா அப்ப வர்ர பாடல்களுடைய அளவைப் பொறுத்தது. இது சில சமயங்களில் மாறுபடுவதற்கு வாய்ப்புண்டு.

இந்த மாதிரி ரொமப சின்ன எண்ணிக்கைனால மொத்தமுமே எனக்கு பிடித்த பாடல்களாத்தான் இருக்கணும் அப்படிங்கிறது என்னோட ஆசை.கடைகளில் நடிகர்களோட பெயரிலேயோ இல்ல இசையமைப்பாளர்கள்,பாடகர்களோட பெயரிலேயோ ஹிட்ஸ்னு சொல்லி விப்பாங்க..ஆனா அது நம்மோட ரசனைக்கு ஒத்து வராது..

நான் இப்ப இருக்கற எம்.பி3 வாங்கினாக்கூட அதுல வர்ர 130பாடல்களும் எனக்கு பிடிச்சதா இருக்கனும்னு நினைக்கிற கேரக்டர் நான்...

எனவே நான் அதிகமா 90’s கேஸட் வாங்கி அதுல எனக்கு பிடிச்ச பாட்டை ரெக்கார்டிங் செண்டர்ல எழுதிக்கொடுத்து ரெக்கார்டு பன்னி வாங்கிக்குவேன்...

பொதுவா கம்யூனிசத்தைப் பற்றியொரு பழமொழி உண்டு.
“ஒருத்தன் 20வயசுல கம்யூனிஸ்டா இல்லைனா அவனுக்கு இதயம் இருக்கானு பார்க்கனும்..அதுவே அவன் 40வயசுலயும் கம்யூனிஸ்டா இருந்தா அவனுக்கு மூளை இருக்கானு பார்க்கனும்”

அதுமாதிரி 16லிருந்து 18வயசுக்குள்ளே ஒருத்தன்  மோகன் ஹிட்ஸ், முரளி ஹிட்ஸ் கேக்கலைன்னா அவனனெல்லாம் சத்தியமா இதயமே இல்லாதவன்.காதலிக்கிறது இல்ல காதலுக்கு தூதுவனா இருக்கிறது இல்லைன்னா  அட்லீஸ்ட் ஒரு காதல் கவிதையாவது எழுதலைன்னா அவன்கூடயெல்லாம் நாங்க பிரண்ட்ஷிப் வெச்சுக்கிறது கிடையாது...

அப்ப எனக்கும் இந்த வயசுதான்..அதனால யென்னோட ரெக்கார்டிங் சாங்கஸ்யெல்லாம் ல்வ் சாங்ஸ்தான்..சோகப்பாடலுக்கு தனி கேஸட்,சந்தோஸ பாடலுக்கு தனி கேஸட்டு..இதுல எனக்கு குரல்கள் முக்கியம்..ஒரு கேஸட் முழுக்கவுமே ஆண்குரல் மட்டும்தான்...பெண்குரல்னா அது மட்டும்தான்..டூயட்னா அதுக்குத் தனி கேஸட்...

புத்தகங்கள் மற்றும் கவிதைகளில் ஆர்வம் அதிகம் அப்டிங்கிறதுனால எனக்கு இயல்பாவே பாடல்வரிகளை அதிகமா கவனிக்கிற பழக்கமுண்டு.

அதுல மட்டுமில்லாம எனக்கு பாடல் வரிகள் மேல அதிக கவனம் வருவதற்கு எங்க அப்பாவும் ஒரு காரணம்..நான் ரொமபச் சின்னப் பையனா இருந்தபோது ஒரு தடவை எங்கப்பா என்னத் திட்றதுக்காக ஒரு சினிமா பாட்டைத்தான் பயன்படுத்தினார்.....அன்னிக்கு அந்த பாட்டு வரி என்னோட மன்சில ரொம்ப ஆழமா பதிஞ்ருச்சு...அந்த பாட்டு “ ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்..உலகம் புரிஞ்சுகிட்டேன் அப்படீன்னு தொடங்குற பாட்டில் இடையில் ஒரு வரி வரும். அடங்காத காளை ஒன்னு அடிமாட போகுதடி கண்மனி ஏங் கண்மனி....” இந்த வரியை எங்கப்பா சொன்னதுக்கப்புறம்தான் நான் பாடல் வரிகளையும் அதனோட அர்த்தங்களையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்..

இன்றளவில் கூட பிரபலமாகத பாடலாகயிருந்தாலும் வரிகள் நன்றாக இருந்தால் மனதினில் அப்படியே பதிந்துவிடும்..சில சமயங்களில் இந்த வரிகள் மட்டுமே மனசில் நிற்கும்...

இப்ப என்னோட 10....

1. ஆனந்த ராகம் கேட்கும் நேரம்...கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே....

 படம் : பன்னீர் புஷ்பங்கள், இசை : நம்ம மேஸ்ட்ரோ, பாடியவர் : அனேகமா உமா ரமணன்னு நினைக்கிறேன்...(யப்பா சான்ஸே இல்ல..இந்த பாட்டை படத்தோட மட்டுமே கேக்கனும்..படமே ரொமப அருமையா இருக்கும்..இதன் இயக்குனர் சந்தான பாரதினு எங்கோ கேள்விப்பட்டதா ஞாபகம்....அப்படியே ஒரு உயரமான இடத்திலிருந்து கீழ இறங்கற மாதிரி ஆரம்பிக்கும் சீன்ல பாட்டுடைய தொடக்கமும் அப்படியே கூட சேர அது ஒரு அற்புத அனுபவம்.)

2. தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ...

படம் : அவதாரம், இசை :  நம்ம மேஸ்ட்ரோ பாடியவரும் கூட

( நம்ம இளையராஜாவோட மற்றுமொரு அற்புதமான பாடல்.ஒரு வித்தியாசமான கவித்துவமான காட்சியமைப்போட கூடிய பாடல்..
யதார்த்தமான கவித்துவம் நிரம்பிய பாடல் வரிகள்..)

3. பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா.....

படம் : இதயம் இசை : நம்ம மேஸ்ட்ரோ பாடியவர் : ஜேசுதாஸ்.

( இசை..ஒளிப்பதிவு..காட்சியமைப்பு..திரைப்படத்தில் பாடல் வரும் நேரம்...
மொத்தமுமே ஒரு அற்புதமான கவிதை...இந்த படத்த சுமார் 30 - 40 தடவை டீ.வி.ல போடறப்ப எல்லாம் பார்த்திருக்கேன்)

4. துள்ளித்திரிந்ததொரு காலம்..பள்ளிப்பயின்றதொரு காலம்...

 படம் : என்றும் அன்புடன் இசை : நம்ம மேஸ்ட்ரோ பாடியவர் : S.P.B.

(பாட்டைப் பற்றி பெரிசா சொல்ல வேண்டியதில்லை...ஆனா பாட்டைக் கேக்கறப்போ எதையோ ஒன்ன தொலைச்ச மாதிரி நிச்சயம் நமக்குத்தோனும்.....)

5. வண்ணம் கொண்ட வெண்ணிலவே...வானம் விட்டு வாராயோ.....

 படம் : சிகரம் முதன்முதலா S.P.B.யே இசையமைத்து பாடி அவரே நாயகனாகவும் நடித்த படம்.(இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே அற்புதமாகயிருக்கும்.  ”பஜாஜ் சப்த ஸ்வரங்கள்” அப்படீன்னு சன்.டீவில திரு.A.V.ரமணன் அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார்..எனக்கு தெரிஞ்சு இப்ப இசை சம்பந்தமா நடந்து கொண்டிருக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இதுதான் ஆரம்பமென்று நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் ஒருமுறை க்ண்பார்வையில்லாத ஒருவர் இந்த பாடலை பாடிக்கேட்ட போதுதான் இந்த பாடலின் கனம் புரிந்தது.  இந்த நிகழ்ச்சியில் இவர் பாடின இன்னொரு பாட்டு...

சின்னஞ் சிறு பெண்போலே
சிற்றாடை யிடையுடுத்தி..
சிவகங்கை குளத்தருகே சீர்துர்க்கை வீற்றிருப்பாள்...


என்னவளின் கண்ணழகை பேசி முடியாது..பேரழகுக்கீடாக
வேரொன்றும் கிடையாது....இந்த வரியையும்....
 
மேல சொன்ன வண்ணம் கொண்ட பாட்டில் வரும்
 
பக்கத்தில் நீயுமில்லை பார்வையிலும் ஈரமில்லை.....
சொந்தத்தில் பாஷையில்லை...சுவாசிக்க ஆசையில்லை..
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை...
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை...
தள்ளி தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கையில்லை...
 
நங்கை யுந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறிப்பேன்...
நங்கை  வந்து சேரவில்லை..நட்சத்திரம் வாடுதடி...
 
இந்த வரிகளையும் கேட்டு A.V.ரமணனுக்கு கண்ணீரே வந்துவிட்டது...)
 
 
6.காவியம் பாடவா தென்றலே...புதுமலர் பூத்திடும் வேளை....
 
படம் : இதயத்தை திருடாதே இசை :  நம்ம மேஸ்ட்ரோ பாடியவர் : மனோ
 
( பாட்டை கேளுங்க நிச்சயம் பிடிக்கலாம்......)
 
7. செம்பூவே...பூவே...உன் மேகம் நான் வந்தால்....
 
படம் : சிறைச்சாலை இசை : நம்ம மேஸ்ட்ரோ பாடியவர்கள் : S.P.B & சித்ரா..
 
( இசை,பாடியவிதம்...மற்றும் சில அழகான வரிகளும் ஒலிப்பதிவும்...)
 
8. மலர்களே...மலர்களே...மலரவேண்டாம்....
 
படம் : பு.கோ.சரவணன். பாடியவர் : பாம்பே ஜெயஞீ....இசை : தெரிஞா சொல்லுங்க.....
 
( பாடியவிதம்,பாடல் வரிகள் மற்றும் இசை மூன்றின் அற்புதமான் கலவை..சிறந்த சில பொழுதுகள்,அசடுகள் வழிந்திட ஆண்களில்லையே....காலம்,நேரம் கடந்த ஒரு ஞான நிலை...போன்ற வரிகளும் அதற்கான அழுத்தமான குரலும்....ஆஹா...)
 
9. மழை மழை...என் உலகத்தில் பொழிகின்ற முதல் மழை...
 
படம் : உள்ளம் கேட்குமே..இசை : ஹாரீஸ் ஜெயராஜ்..பாடியவர் : உன்னிகிருஷ்ணன்,பெண்குரல் மறந்து போச்சு....(பாட்டுக்கு முன்னாடி வர்ர ஹம்மிங்...புல்லாங்குழலிசை....இடையில் வரும் வயலின் பீஸ்...அப்புறம் உன்னியின் ஏற்ற இறக்கம்...மற்றும்
 
பருவப்பெண்ணே நீயும் ஒரு பங்குச் சந்தை போல
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே... இப்படி சில வரிகள்....)
 
10. ஜகமே தந்திரம்...சிவனே மந்திரம்.....சிவ சம்போ....
 
படம் : நினைத்தாலே இனிக்கும்....இசை : மெல்லிசை மன்னர் பாடியவரும் அவரே.....the typical high pitch(always) voice with soul....கண்ணதாசனோட வரிகளா வாழ்க்கையா......
 
மனிதன் எந்திரம் சிவனே மந்திரம் ஜகமே தந்திரம்....சிவசம்போ....
 
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவன் நிதமும் நாடகமும் சிவ சம்போ...
 
மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்.
 
மறு நாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளம்
 
அப்பாவி யென்பார்கள் தப்பாக யென்னாதே...
 
பல்லாக்கை தூக்காதே..பல்லாக்கில் நீயேறு...
 
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே
 
அப்பாவும் தாத்தவும் வந்தார்கள் சென்றார்கள்...
 
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு...
 
உனனாயுள் தொண்ணூறு என்றும் பதினாறு....
 
எப்படி இந்த பாடல் பிடிக்காமல் போகும்

செவ்வாய், 4 மே, 2010

தமிழ் கற்றுத் தெளிந்தவர்களும்..முட்களையும் காய்களையும் மேய்பவர்களும் (அதாங்க விமர்ச்சகர்கள்) அப்புறம் கர்ப்பினிப்பெண்கள் மற்றும் இதயக் கோளாறு உள்ளவர்களும் வரக்கூடாத பகுதி...

எப்பவாவது ரொம்ப சலிப்பா உணர்ந்தால்...கொஞ்ச தூரம் காலாற நடப்பது..அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் ஏதாவதொன்றைப் படிப்பது..இசை கேட்பது....தேனீர் சாப்பிடுவது...வானம் பார்ப்பது...சும்மா வெறுமனே அமர்ந்து வேடிக்கை பார்ப்பது....தப்பித் தவறிகூட நண்பர்களை அழைக்காமலிருப்பது....எங்காயாவது பயணம் போவது....பெரிய கோவிலில் சென்று சிறிது நேரம் அமர்ந்து கொள்வது....இது எதுவுமே முடியாத போது..தாங்கவே முடியாமல் நானே கவிதை (அப்படீன்னு நினைச்சால் மட்டும் தான் என்னால் கிறுக்கவே முடியும்...அவ்வளவு சோம்பேறி நான்) எழுதிவிடுவேன்....

அந்த மாதிரி, நான் வானம்பாடிக்கவிதைகள் படித்துக்கொண்டிருந்தபோது வந்த ஆர்வத்தில் நானே என் ஏடுகளில் இட்டு  நிரப்பியவைதான் கீழே வருவது....இவையெல்லாம் நான் 10ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரைக்கும் இடைப்பட்ட காலங்களில்  கிறுக்கியது...

எப்போது என்னுடைய கல்லுரிக்காலங்களில் சீரிய இலக்கியங்கள் அறிமுகமானதோ அப்போதே இந்த (கவிதை???) மாதிரி எழுதுவதை நிறுத்திவிட்டேன்....

ச்சும்மா பொழுது போகமா புரட்டிய என் ஏட்டிலிருந்து சில...



அன்னியம் உன்
அண்மையில் என்
அண்மைகளெல்லாம்
அன்னியமாய்.....

 **********

நீ விலகும் புள்ளியாய்..

நான் தொடரும் கோடாய்...   

*************************

எங்கேனும் தவறி விழும்
இனிப்புத்துகள்
அரித்தெடுக்க கூடி விடும்
ஈக்கள்...
எப்போதேனும் வாய்க்கும்
தனிமை
மொய்த்துவிடும் உன் நினைவுகள்....

**************************************

தினம்தோறும் என் பார்வை
அலைகள்...
ஒதுக்க இயலாத
கரையாகிப் போனாய் நீ....

**********************************************************