எப்பவாவது ரொம்ப சலிப்பா உணர்ந்தால்...கொஞ்ச தூரம் காலாற நடப்பது..அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் ஏதாவதொன்றைப் படிப்பது..இசை கேட்பது....தேனீர் சாப்பிடுவது...வானம் பார்ப்பது...சும்மா வெறுமனே அமர்ந்து வேடிக்கை பார்ப்பது....தப்பித் தவறிகூட நண்பர்களை அழைக்காமலிருப்பது....எங்காயாவது பயணம் போவது....பெரிய கோவிலில் சென்று சிறிது நேரம் அமர்ந்து கொள்வது....இது எதுவுமே முடியாத போது..தாங்கவே முடியாமல் நானே கவிதை (அப்படீன்னு நினைச்சால் மட்டும் தான் என்னால் கிறுக்கவே முடியும்...அவ்வளவு சோம்பேறி நான்) எழுதிவிடுவேன்....
அந்த மாதிரி, நான் வானம்பாடிக்கவிதைகள் படித்துக்கொண்டிருந்தபோது வந்த ஆர்வத்தில் நானே என் ஏடுகளில் இட்டு நிரப்பியவைதான் கீழே வருவது....இவையெல்லாம் நான் 10ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரைக்கும் இடைப்பட்ட காலங்களில் கிறுக்கியது...
எப்போது என்னுடைய கல்லுரிக்காலங்களில் சீரிய இலக்கியங்கள் அறிமுகமானதோ அப்போதே இந்த (கவிதை???) மாதிரி எழுதுவதை நிறுத்திவிட்டேன்....
ச்சும்மா பொழுது போகமா புரட்டிய என் ஏட்டிலிருந்து சில...
அன்னியம் உன்
அண்மையில் என்
அண்மைகளெல்லாம்
அன்னியமாய்.....
**********
நீ விலகும் புள்ளியாய்..
நான் தொடரும் கோடாய்...
*************************
எங்கேனும் தவறி விழும்
இனிப்புத்துகள்
அரித்தெடுக்க கூடி விடும்
ஈக்கள்...
எப்போதேனும் வாய்க்கும்
தனிமை
மொய்த்துவிடும் உன் நினைவுகள்....
**************************************
தினம்தோறும் என் பார்வை
அலைகள்...
ஒதுக்க இயலாத
கரையாகிப் போனாய் நீ....
**********************************************************
2 கருத்துகள்:
அன்பின் சிவா - 15 - 17 வயதில் எழுதிய கவிதைகளா - சூப்பரா இருக்கு - ஆமா
அன்னியமாகும் அண்மைகள்
கோடு தொடரும் புள்ளிகள்
இனிமையான தனிமை - ஈக்களாகா நினைவுகள்.
நல்ல சிந்தனை -நல்ல சொற்கள்
நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா
நன்றி திரு.சீனா,சமீபமாய் எழுதிய பதிவுகளுக்கே பின்னூட்டங்கள் அதிகமாக வராத நிலையில் ஒரு பழைய பதிவிற்கு, எந்த எண்ணவோட்டத்தில் எழுதப்பட்டதோ அதையே குறிப்பிட்டு பின்னூட்டமிட்டதற்கு. நெகிழச் செய்கிறது உங்களுடைய இந்தப் பின்னூட்டம்.
கருத்துரையிடுக