இன்னிக்கு எதேச்சையா நர்சிம் அவர்களோட பதிவில் அவருடைய பழைய பதிவான சினிமா பாடல்கள் பற்றியும், பாடல் ஆசிரியர்களைப் பற்றியும் பற்றிப் படித்துக்கொண்டிருந்த போது திடீரென்று எனக்கு சில வரிகளும்,சம்பவங்களும் ஞாபகத்திற்கு வந்தது.
சில வருடங்களுக்கு முன்பாக, காங்கிரஸ் ஆட்சிதான் என்று நினைக்கிறேன். வெங்காய விலை திடீர்னு கட்டுக்கு அடங்காமல் அதிகமாகி ஆட்சியே கவிழுகிற சூழல் வந்தது.
அதே மாதிரி அந்த சமயத்துல வயாகரா’வைப் பற்றிய பேச்சும் அதிகமா அடிபட்டது.
இந்த ரெண்டு விசயத்தையும் இணைச்சு திரு.வாலி அவர்கள் ஒரு பாட்டாக எழுதினார்.
இப்போ நான் சொல்லப்போற படப்பெயரை வைத்து இது எந்த வருடம்னு நீங்களே ஊகிச்சிங்கோங்க...
படம் : என் சுவாசக் காற்றே...
இசை : ஏ.ஆர்.
பாடல் : வாலி.
தத்தியாடுதே...தாவியாடுதே...எனத்தொடங்கும் அப்பாடலில் வரும்
”ஜில் லல்லவா ஜில் லல்லவா...காதல் நயகரா...
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா....என்றும்
அந்த வெங்காய விலையை எங்கு வைத்தாரென்றால்...
”உன் மீது எனக்குண்டான அன்பு அந்த வெங்காய விலைபோலே இறங்காதது” என்று பாடலின் இடையில் வரும்.
இதைத்தான் "Presence of mind " அப்படீங்கிறாங்களோ.....
------------------------------------------------------------------------------------------------
அதே மாதிரி ஒரு இரண்டே இரண்டு வரிகள் சாதரணமா என்னோட மனசில் நுழைஞ்சு இன்னைக்கு ”சதா ரணமா” மாறிருச்சு.
அழகான கவிதை மாதிரியான கேட்டதும் மனசில ட்க்குனு பதிஞ்ச அந்த இரண்டு வரிகள் இன்னைக்கு கேக்கிறப்பல்லாம் இரண்டு பேருடைய அகால மரணத்தியே ஞாபகப்படுத்திட்டு இருக்கு.
படம் : பார்வை ஒன்றே போதுமே
இசை : பரணி
பாடல் : யார்னு ஞாபகமில்லை..
“ திரும்ப திரும்ப பார்த்து பார்த்து “ எனத்தொடங்கும் பாடலின்
ஒரிடத்தில்
”கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்
மேசை விளக்குப் போல நீ தலைகுனிந்து போகிறாய்”
இந்த வரிகளுக்கு அர்த்தம் தேவையில்லை. அப்படியும் மீறி கேட்டீங்கனா கிட்டத்தட்ட ஒவ்வொரு வரிக்கும் அரைப் பக்க அளவில் விளக்கம் சொல்லுவேன்.
இந்த பாடல் மற்றும் படத்தில் நடித்தவர்கள் குணால்,மோனல்.
------------------------------------------------------------------------------------------------
படம் வட்டாரம் என்று நினைக்கிறேன்.பாடலின் துவக்கம் ஞாபகத்தில் இல்லை.ஆனால் படத்தில் இப்பாடல் கோவா கடற்கைரையில் பாடுவது போல வரும்.
பெண் பாடும் பாடலின் ஒரு வரியில்
“ அட மழை வெள்ளம் வேண்டாம்;
சிறு தூறல் போடு என் உடம்பெங்கும் நனையட்டுமே”
இந்த வரியில் இருக்கும் காமம் சொல்லில் அடங்காது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக