இப்ப எல்லா பதிவர்களும் தங்களுக்குப் பிடித்தமான 10 பாடல்கள் பற்றி பதிவெழுதிக்கொண்டிருக்கிறார்கள்...அதைப் பார்த்ததும் நமக்கும் அது மாதிரி எழுதனும்னு தோனுச்சி..ஆனா நம்ம தமிழ் சினிமால 10 பாட்டு மட்டும் தேர்ந்தெடுத்து எழுதறது அவ்வளவு சுலபமில்ல..இருந்தாலும் 10பாட்டுன்னு சொன்னவுடனே..அந்த நிமிடத்தில் தோன்றின ஒரு 10பாட்டை மட்டும் இங்கே சொல்றேன்...
12 வருடங்களுக்கு முன்னாடியெல்லாம் இப்ப இருக்கற மாதிரி எம்.பி3,டி.வி.டி பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.....அப்பத்தான் இதைப் பற்றியெல்லாம் லேசா நண்பர்களின் மூலமா கேள்விப்படறேன்...
அதனால அப்பல்லாம் பாட்டுக்கேக்கனுமனா டேப் ரிக்காடர்தான் ஒரே வழி.. TV,Cable connection,SCV,SS Music,V,M இப்படி சாங்ஸ் சேனல்கள் இருந்தாலும் எப்பவுமே நமக்கு பிடிச்ச பாட்டெல்லாம் போடமாட்டங்க...
அதானால நம்மளுடைய டேஸ்டுக்கு டேப்ரிக்காடர்தான் தோது...இந்த டேப் ரிக்கார்டருக்கு ரெண்டு விதமான கேஸட் இருக்கும்..1.60’s 2.90's.
60's இதுல ரெண்டு பக்கமும்( A & B) சேர்த்து மொத்தம் 12 முழுப்பாடல்கள் பிடிக்கும். 90’s ல ரெண்டு பக்கமும்( A & B) சேர்த்து 18 முழுப்பாடகள் பிடிக்கும். இது பொதுவா அப்ப வர்ர பாடல்களுடைய அளவைப் பொறுத்தது. இது சில சமயங்களில் மாறுபடுவதற்கு வாய்ப்புண்டு.
இந்த மாதிரி ரொமப சின்ன எண்ணிக்கைனால மொத்தமுமே எனக்கு பிடித்த பாடல்களாத்தான் இருக்கணும் அப்படிங்கிறது என்னோட ஆசை.கடைகளில் நடிகர்களோட பெயரிலேயோ இல்ல இசையமைப்பாளர்கள்,பாடகர்களோட பெயரிலேயோ ஹிட்ஸ்னு சொல்லி விப்பாங்க..ஆனா அது நம்மோட ரசனைக்கு ஒத்து வராது..
நான் இப்ப இருக்கற எம்.பி3 வாங்கினாக்கூட அதுல வர்ர 130பாடல்களும் எனக்கு பிடிச்சதா இருக்கனும்னு நினைக்கிற கேரக்டர் நான்...
எனவே நான் அதிகமா 90’s கேஸட் வாங்கி அதுல எனக்கு பிடிச்ச பாட்டை ரெக்கார்டிங் செண்டர்ல எழுதிக்கொடுத்து ரெக்கார்டு பன்னி வாங்கிக்குவேன்...
பொதுவா கம்யூனிசத்தைப் பற்றியொரு பழமொழி உண்டு.
“ஒருத்தன் 20வயசுல கம்யூனிஸ்டா இல்லைனா அவனுக்கு இதயம் இருக்கானு பார்க்கனும்..அதுவே அவன் 40வயசுலயும் கம்யூனிஸ்டா இருந்தா அவனுக்கு மூளை இருக்கானு பார்க்கனும்”
அதுமாதிரி 16லிருந்து 18வயசுக்குள்ளே ஒருத்தன் மோகன் ஹிட்ஸ், முரளி ஹிட்ஸ் கேக்கலைன்னா அவனனெல்லாம் சத்தியமா இதயமே இல்லாதவன்.காதலிக்கிறது இல்ல காதலுக்கு தூதுவனா இருக்கிறது இல்லைன்னா அட்லீஸ்ட் ஒரு காதல் கவிதையாவது எழுதலைன்னா அவன்கூடயெல்லாம் நாங்க பிரண்ட்ஷிப் வெச்சுக்கிறது கிடையாது...
அப்ப எனக்கும் இந்த வயசுதான்..அதனால யென்னோட ரெக்கார்டிங் சாங்கஸ்யெல்லாம் ல்வ் சாங்ஸ்தான்..சோகப்பாடலுக்கு தனி கேஸட்,சந்தோஸ பாடலுக்கு தனி கேஸட்டு..இதுல எனக்கு குரல்கள் முக்கியம்..ஒரு கேஸட் முழுக்கவுமே ஆண்குரல் மட்டும்தான்...பெண்குரல்னா அது மட்டும்தான்..டூயட்னா அதுக்குத் தனி கேஸட்...
புத்தகங்கள் மற்றும் கவிதைகளில் ஆர்வம் அதிகம் அப்டிங்கிறதுனால எனக்கு இயல்பாவே பாடல்வரிகளை அதிகமா கவனிக்கிற பழக்கமுண்டு.
அதுல மட்டுமில்லாம எனக்கு பாடல் வரிகள் மேல அதிக கவனம் வருவதற்கு எங்க அப்பாவும் ஒரு காரணம்..நான் ரொமபச் சின்னப் பையனா இருந்தபோது ஒரு தடவை எங்கப்பா என்னத் திட்றதுக்காக ஒரு சினிமா பாட்டைத்தான் பயன்படுத்தினார்.....அன்னிக்கு அந்த பாட்டு வரி என்னோட மன்சில ரொம்ப ஆழமா பதிஞ்ருச்சு...அந்த பாட்டு “ ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்..உலகம் புரிஞ்சுகிட்டேன் அப்படீன்னு தொடங்குற பாட்டில் இடையில் ஒரு வரி வரும். அடங்காத காளை ஒன்னு அடிமாட போகுதடி கண்மனி ஏங் கண்மனி....” இந்த வரியை எங்கப்பா சொன்னதுக்கப்புறம்தான் நான் பாடல் வரிகளையும் அதனோட அர்த்தங்களையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்..
இன்றளவில் கூட பிரபலமாகத பாடலாகயிருந்தாலும் வரிகள் நன்றாக இருந்தால் மனதினில் அப்படியே பதிந்துவிடும்..சில சமயங்களில் இந்த வரிகள் மட்டுமே மனசில் நிற்கும்...
இப்ப என்னோட 10....
1. ஆனந்த ராகம் கேட்கும் நேரம்...கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே....
படம் : பன்னீர் புஷ்பங்கள், இசை : நம்ம மேஸ்ட்ரோ, பாடியவர் : அனேகமா உமா ரமணன்னு நினைக்கிறேன்...(யப்பா சான்ஸே இல்ல..இந்த பாட்டை படத்தோட மட்டுமே கேக்கனும்..படமே ரொமப அருமையா இருக்கும்..இதன் இயக்குனர் சந்தான பாரதினு எங்கோ கேள்விப்பட்டதா ஞாபகம்....அப்படியே ஒரு உயரமான இடத்திலிருந்து கீழ இறங்கற மாதிரி ஆரம்பிக்கும் சீன்ல பாட்டுடைய தொடக்கமும் அப்படியே கூட சேர அது ஒரு அற்புத அனுபவம்.)
2. தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ...
படம் : அவதாரம், இசை : நம்ம மேஸ்ட்ரோ பாடியவரும் கூட
( நம்ம இளையராஜாவோட மற்றுமொரு அற்புதமான பாடல்.ஒரு வித்தியாசமான கவித்துவமான காட்சியமைப்போட கூடிய பாடல்..
யதார்த்தமான கவித்துவம் நிரம்பிய பாடல் வரிகள்..)
3. பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா.....
படம் : இதயம் இசை : நம்ம மேஸ்ட்ரோ பாடியவர் : ஜேசுதாஸ்.
( இசை..ஒளிப்பதிவு..காட்சியமைப்பு..திரைப்படத்தில் பாடல் வரும் நேரம்...
மொத்தமுமே ஒரு அற்புதமான கவிதை...இந்த படத்த சுமார் 30 - 40 தடவை டீ.வி.ல போடறப்ப எல்லாம் பார்த்திருக்கேன்)
4. துள்ளித்திரிந்ததொரு காலம்..பள்ளிப்பயின்றதொரு காலம்...
படம் : என்றும் அன்புடன் இசை : நம்ம மேஸ்ட்ரோ பாடியவர் : S.P.B.
(பாட்டைப் பற்றி பெரிசா சொல்ல வேண்டியதில்லை...ஆனா பாட்டைக் கேக்கறப்போ எதையோ ஒன்ன தொலைச்ச மாதிரி நிச்சயம் நமக்குத்தோனும்.....)
5. வண்ணம் கொண்ட வெண்ணிலவே...வானம் விட்டு வாராயோ.....
படம் : சிகரம் முதன்முதலா S.P.B.யே இசையமைத்து பாடி அவரே நாயகனாகவும் நடித்த படம்.(இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே அற்புதமாகயிருக்கும். ”பஜாஜ் சப்த ஸ்வரங்கள்” அப்படீன்னு சன்.டீவில திரு.A.V.ரமணன் அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார்..எனக்கு தெரிஞ்சு இப்ப இசை சம்பந்தமா நடந்து கொண்டிருக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இதுதான் ஆரம்பமென்று நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் ஒருமுறை க்ண்பார்வையில்லாத ஒருவர் இந்த பாடலை பாடிக்கேட்ட போதுதான் இந்த பாடலின் கனம் புரிந்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் பாடின இன்னொரு பாட்டு...
சின்னஞ் சிறு பெண்போலே
சிற்றாடை யிடையுடுத்தி..
சிவகங்கை குளத்தருகே சீர்துர்க்கை வீற்றிருப்பாள்...
என்னவளின் கண்ணழகை பேசி முடியாது..பேரழகுக்கீடாக
வேரொன்றும் கிடையாது....இந்த வரியையும்....
மேல சொன்ன வண்ணம் கொண்ட பாட்டில் வரும்
பக்கத்தில் நீயுமில்லை பார்வையிலும் ஈரமில்லை.....
சொந்தத்தில் பாஷையில்லை...சுவாசிக்க ஆசையில்லை..
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை...
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை...
தள்ளி தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கையில்லை...
நங்கை யுந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறிப்பேன்...
நங்கை வந்து சேரவில்லை..நட்சத்திரம் வாடுதடி...
இந்த வரிகளையும் கேட்டு A.V.ரமணனுக்கு கண்ணீரே வந்துவிட்டது...)
6.காவியம் பாடவா தென்றலே...புதுமலர் பூத்திடும் வேளை....
படம் : இதயத்தை திருடாதே இசை : நம்ம மேஸ்ட்ரோ பாடியவர் : மனோ
( பாட்டை கேளுங்க நிச்சயம் பிடிக்கலாம்......)
7. செம்பூவே...பூவே...உன் மேகம் நான் வந்தால்....
படம் : சிறைச்சாலை இசை : நம்ம மேஸ்ட்ரோ பாடியவர்கள் : S.P.B & சித்ரா..
( இசை,பாடியவிதம்...மற்றும் சில அழகான வரிகளும் ஒலிப்பதிவும்...)
8. மலர்களே...மலர்களே...மலரவேண்டாம்....
படம் : பு.கோ.சரவணன். பாடியவர் : பாம்பே ஜெயஞீ....இசை : தெரிஞா சொல்லுங்க.....
( பாடியவிதம்,பாடல் வரிகள் மற்றும் இசை மூன்றின் அற்புதமான் கலவை..சிறந்த சில பொழுதுகள்,அசடுகள் வழிந்திட ஆண்களில்லையே....காலம்,நேரம் கடந்த ஒரு ஞான நிலை...போன்ற வரிகளும் அதற்கான அழுத்தமான குரலும்....ஆஹா...)
9. மழை மழை...என் உலகத்தில் பொழிகின்ற முதல் மழை...
படம் : உள்ளம் கேட்குமே..இசை : ஹாரீஸ் ஜெயராஜ்..பாடியவர் : உன்னிகிருஷ்ணன்,பெண்குரல் மறந்து போச்சு....(பாட்டுக்கு முன்னாடி வர்ர ஹம்மிங்...புல்லாங்குழலிசை....இடையில் வரும் வயலின் பீஸ்...அப்புறம் உன்னியின் ஏற்ற இறக்கம்...மற்றும்
பருவப்பெண்ணே நீயும் ஒரு பங்குச் சந்தை போல
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே... இப்படி சில வரிகள்....)
10. ஜகமே தந்திரம்...சிவனே மந்திரம்.....சிவ சம்போ....
படம் : நினைத்தாலே இனிக்கும்....இசை : மெல்லிசை மன்னர் பாடியவரும் அவரே.....the typical high pitch(always) voice with soul....கண்ணதாசனோட வரிகளா வாழ்க்கையா......
மனிதன் எந்திரம் சிவனே மந்திரம் ஜகமே தந்திரம்....சிவசம்போ....
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவன் நிதமும் நாடகமும் சிவ சம்போ...
மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்.
மறு நாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளம்
அப்பாவி யென்பார்கள் தப்பாக யென்னாதே...
பல்லாக்கை தூக்காதே..பல்லாக்கில் நீயேறு...
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே
அப்பாவும் தாத்தவும் வந்தார்கள் சென்றார்கள்...
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு...
உனனாயுள் தொண்ணூறு என்றும் பதினாறு....
எப்படி இந்த பாடல் பிடிக்காமல் போகும்
8 கருத்துகள்:
நல்ல பட்டியல் சிவக்குமார்.
உங்களது தளத்தை இணைய தமிழ் திரட்டிகளுடன் இணைக்கலாமே..
நன்றி திரு.திருநாவுக்கரசு அவர்களே..இப்போதைக்கு தளத்தின் தரம் பற்றி எனக்கு ஐயமுண்டு..எனவே தனிச்சுற்றே போதுமென்றிருக்கிறேன்..உங்களுடைய பின்னூட்டம் நல்ல விமர்ச்சனமாக தொடருமெனில்..கூடிய விரைவில் சாத்தியப்படலாம்....
நேசிக்கும் எழுத்தாளர்கள் பற்றி தொடரலாமே சிவா?
உங்களுக்கு நன்றிகள் போதாது வெயிலான். இப்போதைக்கு யார்,யார் எனக்கு பின்னூட்டம் இடுகிறார்களோ அவர்களெல்லோருமே நான் நேசிக்கும் எழுத்தாளர்கள்தான்.முதலில் முரளி,கட்டண்ம் மற்றும் நிபந்தனைகள்(!!!) ஏதுமின்றி சங்கத்தில் இணைத்துக் கொண்ட நீங்கள்,என் பதிவையும் பொருட்படுத்தி பின்னுட்டமிட்ட திரு.திரு அவர்கள்..உங்களையெல்லாம் பற்றி யெழுத உங்களுடன் இன்னும் கொஞ்சம் பழ்கவேண்டுமே!!!...சும்மா...நிச்சயம் எழுதுகிறேன் வெயிலான்...
நல்ல தேர்வு
திருமதி.பத்மா அவர்களுக்கு : அனேகமா “அன்பே சிவம்” வலைப்பதிவு மூலமாத்தான் என்னோட பதிவிற்கு வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்..இருந்தாலும் பதிவைப்படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.
அன்பின் சிவா
இணையத் திரட்டிகளீல் ஒன்றான தமிழ் மணத்தில் இணைக்கலாமே ! 26 இடுகைகள் ஆகி விட்டன - இன்னும் என்ன் எதிர்பார்ப்பு - சிந்தனை.
பழகுக - அனைவரிடமும் பழகுக - ஆனால் காத்திருக்க வேண்டியதில்லை. தனிச் சுற்றாக இருப்பதின் பலனைப் போல பன்மடங்கு பலன் கிடைக்கும் திரட்டிகளீல் இணைத்தால்.
சிந்திக்கவும்.
நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா
திரு.சீனாவிற்கு அண்மையில்,அன்பே சிவம்- முரளியின் உதவியோடு தமிழிஷ்ல் இணைத்து-விட்டேன்.பார்த்துவிட்டு சொல்லுங்களேன் நான் தெரிகிறேனா,இல்லையா என்று..நன்றி.
கருத்துரையிடுக