வியாழன், 24 ஜூன், 2010

Simple but complicated...

ஒரு ஜென் துறவி தினமும் காலையில் எழுந்தவுடன் அழ ஆரம்பித்துவிடுகிறார்.அதுவும் நீண்ட நேரத்திற்கு.பல பேர் எல்லா விதமாகவும் கேட்டுப் பார்த்தும் அவரிடமிருந்து அழுகைக்கான காரணத்தை அறிய முடியவில்லை.

ஒரு நாள் மிக நீண்ட நேரம் அழுதுகொண்டிருக்கிறார்.இந்த முறை அங்கிருந்தவர்கள் அவரை விடுவதாயில்லை. மிகவும் வற்புறுத்தி கேட்டபின் ஒருவாறு அந்தத் துறவி வாய் திறக்கிறார்.இல்லை என் கனவில் நான் தினமும் ஒரு பட்டாம்பூச்சியாக சிறகடித்து எங்கெங்கோ பறக்கிறேன் என்கிறார்.

எல்லோருக்கும் ஆச்சரியம் இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது? கனவுதானே! அதிலும் அழகான கனவு.

அதற்குத் துறவி முதலில் எது கனவு, நான் மனிதனாக இருந்து பட்டாம் பூச்சியாக மாறுகிறேனே அதுவா? அல்லது பட்டாம் பூச்சியாக இருந்து மனிதனாக வாழ்வதாக உணர்கிறேனே இது கனவா?


ஜென் ஒரு அற்புதமான,எளிமையான ஆண்மீக வழி. இதற்கு இப்படித்தான்,இதுதான் என்று வழிமுறையோ கோட்பாடோ கிடையாது. நீங்கள் ஜென்னைத் தழுவ நினைத்தால் உங்களுக்கு ஒரு தேநீர் விருந்து நடக்கும்.

அந்த தேநீரை நீங்கள் எவ்வாறு சுவைக்கவேண்டுமென்பதை ஜென் குரு உங்களுக்கு காட்டுவார்.அந்த தேநீரைப் பருகுவது போல வாழ்கையைத் துளி துளியாக பருகுவதே ஜென்.

ஜென் கதைகள்,கவிதைகள்,தத்துவங்கள் மிகச் சிறியது.பனித்துளிப் போல.ஆனால் அது உள்ளே பொத்தி வைத்திருக்கும் அர்த்தமோ,பனித்துளி பிரதிபலிக்கும் சூரியனைப் போல,பிரபஞ்சத்தைப் போல எதார்த்தத்தில் பிரம்மாண்டம் கொள்ளும்.

ஜென் கருத்து ஒன்று :”ஒரு ஆற்றில் ஒரு முறைதான் கால் வைக்க முடியும்”.

மேலே உள்ளக்கருத்தில் நீங்கள் ஆற்றை ஆறாக வைத்துக்கொண்டாலும் சரி,இல்லை ஆற்றுக்குப் பதிலாக காலம்,வாழ்கை என உங்கள் விரிவிற்கேற்றவாறு மாற்றிக் கொண்டாலும் சரி இந்தக் கருத்து நன்றாகப் பொருந்தும்.



குரு சீடனிடம் : இலை விழுகிறது, இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் : இலை விழுந்தது, இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் : இலை விழும், இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் :போதும்.நீ ஞானம் அடைந்து விட்டாய்.இனி உன் பாதையில் செல்.

ஹைக்கூ என்ற ஒரு கவிதை வடிவம் ஜென்னிலிருந்து வந்ததுதான். முற்றிலும் இயற்கையை மட்டுமே பாடுபொருளாக கொண்டது.இதன் சிறிய வடிவமே இதன் தனி சிறப்பு.

ஒரு ஜென் துறவி தன் வாழ்நாளில குறைந்த பட்சம் ஒரு ஹக்கூ படைப்பதே சாதனையாக கொள்ளப் படுகிறது.

மூன்று,நான்கு என்பது உச்சபச்ச சாதனை.பாஷோ என்ற ஜென் துறவியே அதிக ஹக்கூக்களை எழுதியவர் ஆவார்.

ஒரு பருந்துப் பார்வையில் அவதானிப்பதெனில் சிறிய,எளிய என்பதே பொதுவாக ஜப்பானிற்கு வாழ்வாக இருந்து வந்திருக்கிறது.தொட்டியில் வீட்டினுள் வைத்து வளர்க்கப்படும் போன்சாய் கூட ஜப்பானிலிருந்து வந்ததென என கேள்வி.


ஒரு துறவி ஒரு ஹக்கூ படைத்து அது எவ்வாறு வந்திருக்கிறதென தன் குருவிடம் காட்டுகிறார்.

சில்வண்டின் இரு
சிறகுகளை நீக்கினால் அது
குங்கமச்சிமிழ்.

என்று பொருள்வரும்படி எழுதுகிறார்.ஆனால் குருவோ அந்த ஹைக்கூவை பின் வருமாறு மாற்றுகிறார்.

குங்கமச் சிமிழிற்கு இரு
சிறகுகளை வத்தால்
அது சில்வண்டு.

அதில் ஒரு பிரம்மாண்டமே புரட்டப்பட்டிருக்கிறது.

உண்மையில் நாம் இப்போது வாழும் உலகம் சில்வண்டின் சிறகுகளை நீக்கிக் கொண்டிடுக்கிறது.

4 கருத்துகள்:

பா.ராஜாராம் சொன்னது…

அருமையான பகிர்வு!

உங்கள் அழை எண் தெரியப் படுத்துவீர்களா சிவா.

rajaram.b.krishnan@gmail.com

கமலேஷ் சொன்னது…

அருமையான பகிர்வு நண்பரே...

இதை போன்ற தகவல்களை எங்கே திரட்டினீர்கள்
என்று தெரிந்து கொள்ளலாமா..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சிவகுமார்

சிறகுக்ளை நீக்காமல் சிமிழை சில் வண்டாக மாற்றுவோம் - ஆக்க பூர்வமான செய்லைல் ஈடுபடுவ்வொம். நல்ல சிந்தனையில் எழுதப்பட்ட நல்லதொரு இடுகை

நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.கமலேஷ் : பின்னூட்டத்திற்கு நன்றி.ஆனா நீங்க கேட்பதில் விவகாரம் ஏதுமில்லையே...

அந்த பட்டாம்பூச்சி கனவு நண்பன் சொன்னது..மற்ற விபரங்கள் “ஹைக்கூ அறிமுகம்” என்ற நூலகப் புத்தகத்தில் என்றோ படித்தது.


திரு.சீனாவிற்கு : உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி.