செவ்வாய், 22 ஜூன், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

மாவிலைத் தட்டி

திறந்த கதவிடுக்கில்

ஆருயிர் நண்பனாய்

ஆரத்தழுவி நுழைந்த காற்று

இருக்கை,தொலைக்காட்சி,மேசை,

உள் அறை,அடுப்படியென அலைந்து

நிலைத்தது

கவிதைக் குறிப்புகளின்

பக்கங்கள் புரட்டி...

நிமிடங்களில் ஆசுவாசிக்கலாமென

அமருந்தருணம்,அறையெங்கும் நிறைந்தது

புழுக்கம்..

நண்பர்களின் வழியறியுமோ காற்றும்...

*******************************************************

கேள்விக்குறியென

மூப்பில் வளைந்து

கையில் பற்றிய கழியில்

இடறும் ஆச்சரியக்குறி

நெடுக்கச் செல்லும் சாலையை

குறுக்காக கடந்ததை பார்த்தன்

சாட்சியாய் மூவர்...

நான்..அந்த தவிட்டு  நிறக்குருவி

நீங்கள்...

7 கருத்துகள்:

Raman Kutty சொன்னது…

மாவிலை அல்லது மாவிழை.. எது சரி...!!!

Raman Kutty சொன்னது…

கவிதை ... கவித... நல்லா இருக்குங்க.

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.ராமன் அவர்களுக்கு : நன்றி! வந்ததற்கு,வாசித்ததற்கு,பின்னூட்டமிட்டதற்கும்.

மா + இழை = மாவிழை. இப்படித்தான் வருமென்று நினைக்கிறேன்.

இதை நாம தனியா பேசிக்கலாம். செம்மொழி மாநாடு தொடங்க -யிருக்கறப்ப ஏதாச்சும் சிக்கலில் மாட்டிவிட்ராதிங்க அண்ணே!

அன்பேசிவம் சொன்னது…

இரண்டாவது ரசனையான் அனுபவிப்பு. :-)

வாழ்த்துக்கள் சிவா

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி முர்ளீ!

சு.சிவக்குமார். சொன்னது…

ராமன் சார் நீங்க சொன்னதுதான் சரி.

மாவிலை என்றுதான் இருக்கவேண்டும்.

மாவிழை என்பது தவறு. இன்னொரு பதிவில் இந்த இலை என்ற வார்த்தையை உபயோகிக்க நேர்கையில் தான் இந்த தவறை உணர முடிந்தது.தங்கள் சுட்டிக்காட்டலுக்கு நன்றி.

Raman Kutty சொன்னது…

ஹும் ... நன்றி ...