படிச்சி ரொம்ப நாள் ஆன இலக்கியத்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக சில பேர் மறுபடியும் ஒரு முறை வாசிப்பதுண்டு. இதை மீள் வாசிப்பு அப்படீன்னு சொல்வாங்க..இதுவே பதிவுலகில் பரவலாக மீள்பதிவு அப்படீன்னு போட்டுவிடுவார்கள். ஆனா பொதுவா என்னோட அபிப்ராயம் மீள் பதிவு போன்றதல்ல மீள் வாசிப்பும், பார்வையும்.
மீள் வாசிப்பும், பார்வையும் ஏற்கனவே படித்த,பார்த்த ஒரு படைப்பை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு புதிதாக ஏற்ப்பட்ட அனுபவங்கள், கிடைத்த தகவல்கள், படிப்பினைகள், புரிதல்கள், வரித்துக்கொண்ட புதிய் கருத்துகள் இவைகளைக் கொண்டு வாசிக்கும் நிலையில் அந்த படைப்பானது ஒன்று நம்மை ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச்செல்லலாம், முன்பிருந்தை விட சற்று பின் நகரலாம், புரிதலில் ஏதாவது நடக்கலாம் அல்லது இவையெதுவுமே இல்லாமல் இருக்கலாம்.
ஆக மீள் வாசிப்பு என்பது மருத்துவ துறையில் இப்போது பரவலாக கூறப்படும் முழு உடல் பரிசோதனை எனபது போல நம் நம்பிக்கைகள், தத்துவங்கள், புரிதல்கள் ஆகியவற்றை கொண்டு அந்தப் படைப்பை மறு பரிசோதனை செய்வது ஆகும்.
நிற்க...மேலே சொல்லவர்ரது வச்சிட்டு நான் ஏதோ படத்தை விமர்ச்சனம் செய்யப் போறிங்கன்னு நினைச்சா சோ சாரி...
எப்பவோ சரியாக கவனிக்காமல்,கவனத்திற்கு வராமல் போன சில பாடல்களை இப்போது கேட்கையில் ரொம்ப நாள் கழிச்சு வானவில்லை பார்த்த மாதிரி இருக்கிறது.
அதைப் பற்றிய பகிர்வே இது...
1. புத்தும் புது காலை...பொன்னிற வேளை....என் வாழ்விலே...
ஆபிஸ் வேலையா ஒரு சமயம் காரில் போனபோது கேட்ட பாடல்.இசை கண்டிப்பா மேஸ்ட்ரோவாகத்தானிருக்கும். ஒரு காலை நேரத்தில்தான் இந்த பாடல் கேட்டேன்.அன்றைய நாளே அற்புதமாக இருந்தது. unforgettable song...
2. சிறு சிறு மழைத்துளி மனதுக்குள் விழுகிறதே...
படம் : அரசாட்சி,அர்ஜீன் நடிச்சது.இந்தப படத்தில் ரெண்டு பாட்டு நல்லாருயிருந்தது. ஒன்னு மேல சொன்ன பாட்டும்.இன்னொன்னு “ நான் இருபது வயது ஆர்வக்கோளாறு..என்னை ஆசைப்படாதவன் பார்வைக்கோளாறு...
சிறு சிறு மழைத்துளி எனக்கு ஒரளவு பிடித்த பாடல்தான் எனினும் ரொம்ப நாள் இடைவெளிவிட்டு ,ஒரு தொலைதூர பேருந்து பயணத்தில் தூக்கத்-திலிருந்து கொஞ்சமா முளிப்பு வந்த போது, வெளியிலிருந்து ஜில்லுனு சாரல காத்து. எல்லோரும் நல்லா ஆழ்ந்து தூங்கிட்டு இருக்காங்க..பஸ் அப்படியே ஒரு ரிதத்தில் போய்ட்டு இருக்கு. அப்ப இந்த பாட்டை கேட்க நேர்ந்தது. யப்பா..எல்லாத்துக்குமே ஒரு குறிப்பட்ட தருணம்,மனநிலை இருந்தா ரசிக்கமுடியாததுன்னு எதுவேமேயில்லை.
3. அதிகாலை நிலவே... அலங்காரச் சிலையே....புதுப்பாடல் நீ பாடவா...
இது அனுபவிக்க வேண்டிய பாட்டு...ஆராயக்கூடாது..பாட்டுல ஒரு வரி வரும் ”இசை தேவன் இசையில் ” அப்படீன்னு...நிச்சயமா பாடல் அவருடையதாகத்தானிருக்கும்.
4. மல்லிகையே..மல்லிகையே தூதாகப் போ..கொஞ்சிவரும் தென்றலையே நீ சேர்த்துப் போ....
படம் : கும்பக்கரை தங்கைய்யா என்று நினைக்கிறேன்...அப்படியே வார்த்தைகளை வருடித்தருவது போன்ற இசை....
5. சிரிப்பினில் உன் சிரிப்பினில்..மனதின் பாதியும் போக...
படம் : ப.கி.மு.சரம். இசை : ஹேரிஷ் ஜெயராஜ். இந்த படம் வந்ததிலிருந்து இந்தப் படத்தில் இந்த பாட்டுதான் என்னோட பேவரிட். கேக்கும்போதெல்லாம் மனம் அப்படியே பஞ்சுமாதிரி லேசாயிரும். அதுவும் ஆண்குரலில் பாடல் துவங்கும்போது காதுக்குள்ள பாடறமாதிரி அவ்வளவு மெனமையாக இருக்கும். “முதல் நாளில் பார்த்த வனப்பு இன்னும் குறையவில்லை உனக்கு.” போன்ற வரிகள் பாடலில் நம்மை லயிக்கச்செய்துவிடும்..
6. மான் கண்டேன்..மான் கண்டேன் மானே தான் நான் கண்டே...
பாடியவர் ஜேசுதாஸ் என்பதைத் தவிர வேறொன்றும் அறியேன். ஆனால் அடிக்கடி என்னையுமறியாமல், இந்த பாடலை திடீரென்று வாய் முனுமுனுக்க ஆரம்பித்துவிடுகிறது.
7. ஓம் முருகா ஓம் முருகா உனக்கு நன்றி சொல்வேன்...
ஸ்ரீகாந்தின் இந்தப்பாட்டின் படமும்,இசையும் ஞாபகத்தில் இல்லை.பாஸ்ட் பீட்.சரணத்தில் சாதரணமா இருக்கற, பாட்டு பல்லவி தொடங்கியவுடன் புளுங்கற வீட்டுல ஜன்னலை திறந்து விட்ட மாதிரியிருக்கும்.
8. வான் நிலா..இமைத்தது....
காதல் வைரஸ் படத்தில் இடம்பெற்றப் பாடல்.கதிரை இதயம் காரணமாக மிகுந்த அளவில் நேசிக்க ஆரம்பித்திருந்தேன்.ஆனால் ஒவ்வொரு படமும் வெளி வர வர என்னை விட்டு விலகிக் கொண்டேயிருந்தார். இதயத்திற்கு பிறகு உழவன் மட்டுமே நெஞ்சில் நிறைந்தது. எனினும் அவர் படத்தின் பாடல்கள் ஏமாற்றியதில்லை. இந்தப் பாடல் முதலில் கேட்டைதை விட இப்போது கேட்கும்போது நன்றாக இருக்கிறது.சற்று சிரமமான பாடலும் கூட.பாடிய தொனி என்னை மிகவும் கவர்கிறது. பாடல் வரிகளும் அருமை.
இந்தப் படத்தில் இன்னொரு நல்ல பாடல் “ என்ன ஆச்சு உனக்கு..புதுசா இந்த பார்வை எதற்கு.” ஆனா என்னா இப்ப இருக்கற டிரெண்டுக்கு பசங்க இந்தப் பாட்டை பாடினாத்தான் பொருத்தமா இருக்கும்.
நேரமின்மை காரணமாக என்னால் இன்று இவ்வளவே பகிர முடிந்தது.மீதி அடுத்த பதிவுகளில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக