செவ்வாய், 8 ஜூன், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

கற்றுக்கொண்டிருக்கலாம்
குறிப்பெடுக்குமளவில்.
மின்சார கம்பிகள் மீது
இசைக்குறிப்புகளென அமர்ந்திருக்கும்
அந்த கருங்குருவிகளை ஓர்த்தாவது...

--------------------------------------------------------------

உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்..

-------------------------------------------------------------

பெருமழை பெய்யும் நாட்களிலும்
ஒயும் நாட்களிலும் முகிழ்க்கும்
சில நினைவுகள்..
ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்...

--------------------------------------------------------------------

my days got colors by your dresses...
my pages got fragrance by your pedals...

---------------------------------------------------------------------

12 கருத்துகள்:

பத்மா சொன்னது…

ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்...

ஹ்ம்ம் இரண்டும் இல்லாமல் வாழ்கை இல்லையே

அது pedala இல்லை petala ?

சு.சிவக்குமார். சொன்னது…

”ஹ்ம்ம் இரண்டும் இல்லாமல் வாழ்கை இல்லையே”

உண்மைதாங்க!

அது petala தாங்க.அவசரத்துல விரல் தவறி வந்துருச்சு. கவனப்படுத்தியதற்கு நன்றி.

அன்பேசிவம் சொன்னது…

எல்லாமே நல்லாயிருக்கு சிவா,

உச்சிவெயிலிலும்
ஓயாமல் பேசும்
ஒற்றை பனையின்
குரல்,
பொழுதுகளுக்கேற்ப
அமர்ந்து கேட்க்கும்
நிழல்..

:-), தப்பா எடுத்துகாதிங்க இந்தபதம் எனக்கு பிடித்திருக்கிறது.

இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டியதில்லை, உங்களுக்காக.

சு.சிவக்குமார். சொன்னது…

முதல் நன்றி - என் பதிவுப் பக்கமும் தலைகாட்டியதற்கு!!!!.

இரண்டாவது நன்றி - பின்னூட்டமிட்டதற்கு.

மூன்றாவது நன்றி - ஒரு சாதா-வை அ-சாதாவாக மாற்றியதற்கு.

நல்ல விசயம் நாலு பேர்(!!!) கண்ணில் பட்டால் தப்பில்லையென்பதால், உங்கள் பின்னூட்டத்தை பதிவிடுகிறேன்..

பா.ராஜாராம் சொன்னது…

மிரண்டு போறேன் சிவா.

ரொம்ப நாளுக்கு இருக்கும் தமிழில் உள்ள மூன்று கவிதைகளும்.

நன்றி நேசா! (இங்கிருந்து ஒரு க்ளிக் பண்ணி இங்கடைந்தேன்)

ஆனா, போகல.

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.பா.ரா. அவர்களுக்கு : இப்படி திடு திப்னு என்னோட பதிவுப்பக்கம் உங்க பார்வை படும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை.

சந்தோசத்தில் என்ன சொல்றதுன்னு தெரியலை. ஏதாவது நாடகத்தனமா போயிருமோன்னு கூச்சமா இருக்கு.

ஒரு மக்கு பையனை தேத்தறதுக்கு வாத்தியர் முதல்ல கையில் எடுக்கும் ஆயுதமாகவே உங்கள் பாராட்டைக் கருதுகிறேன்...

உங்கள் வருகை தொடர வேண்டு -மென்பதால் நன்றி என்று கூறி முடிக்க விருப்பமில்லை

நிகழ்காலத்தில்... சொன்னது…

தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகிறேன் நண்பரே

சு.சிவக்குமார். சொன்னது…

மிக்க நன்றி நிகழ்! வந்து,வாழ்த்தி,பின்னூட்டமிட்டதற்கு.

பாலா அறம்வளர்த்தான் சொன்னது…

பரிசல், பா ரா என்று வந்தேன்.

மூன்றுமே ரொம்பவும் பிடித்திருக்கிறது - தொடர்ந்து எழுதுங்கள்.

பா ரா வையே மிரட்டி இருக்கிறீர்களே - BTW, நானும் ஒரு பா ரா பைத்தியம் :-)

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி பாலா...எந்த பா ரா ???

அன்பேசிவம் சொன்னது…

//மிரண்டு போறேன் சிவா.//

ஆக இது நம்ம கருவேல நிழல், பா.ரா. இவரை நான் மகாப்பான்னு கூப்பிடுவேன் அதனால் எந்த குழப்பமும் இல்லை. :-))

சு.சிவக்குமார். சொன்னது…

முர்ளீ :

//நான் மகாப்பான்னு கூப்பிடுவேன்//

எதனால்?...கொஞ்சம் முதல்லேயே சொல்லிருக்கலாம்...

சரி விடுங்க..நாரதர் கலகம் நன்மையில்தான் முடிஞ்சிருக்கு..

பரிசல் பதிவின் பலம் இன்றைய மதிய சந்திப்பில்தான் உண்ர்ந்தேன்...பரிசலுக்கு மிக்க நன்றி..