புதன், 28 ஏப்ரல், 2010

சில மின்னல்கள்...

கல்யாண வயசில் இருக்கும் ஒரு நவீன கால இளைஞன் தனக்கு வரப்போகும் மனைவி எப்படியெல்லாம் இருக்கனும் அப்படீன்னு கற்பனை செஞ்சு பாடற பாட்டு.....அப்படீன்னு டைரக்டர் சொன்னவுடனே..எழுதின பாடல்தான் இது...அனேகமா இதுதான் அவருடைய முதல் பாடல்னு நினைக்கிறேன்.....

பொதுவா சில எழுத்துக்கள்,வார்த்தைகள் ஒரு டியூனுக்குள்ள உக்காராது..அந்த மாதிரி சமயத்துல பாடலாசிரியரும்,இசையமைப்பாளரும் சேர்ந்து அந்த பாடல்ல அந்த யெழுத்தையோ, வார்த்தையையோ    திருத்தி- யமைப்பார்கள்..அப்படித்தான் ஒரு புதுக்கவிதையோட வடிவத்துல இருந்த இந்த பாட்டை கொஞ்சம் டியூனுக்கு ஏத்தமாதிரி மாற்றியிருப்பதாக பாடல் ஆசிரியர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்..

ரொம்ப கவித்துவம் இல்லைனாலும் முதல்த் தடவ கேட்டதிலிருந்து இன்னைக்கு வரைக்கும் என் மனசில இந்த பாட்டு ஒட்டிட்டுருக்கறதுக்கு ஒரே காரணம் இந்த பாட்டினுடைய எளிமையான வரிகளும் அதே சமயம் ரொம்ப அருமையான நடைமுறை அர்த்தங்களும்தான்..

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தாலும்..இன்னைக்கும் இந்த பாட்டு புதுசாவே இருக்கு அப்படிங்கிறது என்னுடைய எண்ணம்.

 காஞ்சிப் பட்டு சேலைகட்டி
கால்கொலுசில் தாளம் தட்டும்
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா

என்மனைவி வந்தபின்னால் என்னவெல்லாம்
செய்வேனென்று சேர்த்து வைத்த ஆசை சொல்லவா...

சேலைதான் போயாச்சு..சுரிதாரும் போராச்சு....
நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு முட்டி தொடும் மிடியைப்போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸிடிக் போட்டு அவளை நான் ரசிப்பேன்..
மாசத்துல ரெண்டுதரம் பியூட்டி பார்லர் கூட்டி போயி
ராத்திரியில் நைட்டியைப் போல்தான் நானிருப்பேன்..

ஸ்கூட்டர் ஓட்டச் சொல்லுவேன் இடுப்பில் கையைப் போடுவேன்...
முன்னால் பார்த்து ஓட்டுனு பின்னால் மெல்ல கிள்ளுவேன்..
தூங்கிப்போனால் சம்மதம் தோசை நானே ஊத்துவேன்.
ஊருக்கேதும் போயிட்ட உள்ளுக்குள்ளே ஏங்குவேன்....

அவள் பெயர்தனை இனிஷியலாய் இடும்படி நான் செய்திடுவேன்..
அவள் முகம்தனை மனதுக்குள் வரும்படி வரம் கேட்ப்பேன்..

அவள் தாவனிபருவத்து ல்வ் லெட்டர் அனைத்தையும் இருவரும் படித்திடுவோம்....
எங்கள் முதுமை பருவத்து முத்தங்களைக் கூட இனித்திடும்படி செய்திடுவோம்....

வெங்காயத்தை வெட்டும்போதும் கண்ணீர் வரக் கூடாதம்மா...வெங்காயமே வேண்டாம் கண்ணே நான் அதை வெறுத்திடுவேன்...

அடடா உந்தன் மம்மிக்கும் ஹைடெக் நடயை பழக்கனும்...
தோழி போல பழகனும்...சுரிதார் போட்டும் பார்க்கனும்...
அழகா பொன்னு போகையில் அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்லத் திருகனும் ஆனால் என்னை ரசிக்கனும்..

.........................................................................................................................
.........................................................................................................................

ஒரு நாளைக்கு மூனென அவள் முறைவத்து தரும் சிகரெட்டினை குடுத்திடுவேன்..
என் சில்மிஷ கரங்களில் சிதறிடும் ஜாக்கெட் ஊக்கினைத் தைத்திடுவேன்...

கோபப்பட்டு திட்டிவிட்டு கொல்லப் பக்கம் பொயி நின்னு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மெல்ல நானேதானழுவேன்...

இந்த பாட்டு இன்னும் புதுசாவே இருக்குனு மேல சொல்லியிருந்தேன்...

ஒரு வேளை பசங்க மனசும் அப்படிதான..சீக்கிரத்தில் எந்த ஒரு புது விஷயத்தையும் ஏத்துக்கமாட்டாங்க...கொஞ்ச கொஞ்சமாகத்தான்.. ஏத்துக்குவாங்க....அப்பறம் அவர்களுடைய எதிர்பார்ப்பும் அப்படித்தான்...ரொம்ப பெரிசா எதிர்பார்க்க மாட்டாங்க...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி விஜய் டிவில ஒரு நிகழ்ச்சி நடத்தினாங்க

அப்ப பொன்னுங்ககிட்ட கேட்கப்பட்ட கேள்வி : உங்க பாய்பிரண்டுகிட்ட..நீங்க எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னனென்ன?

1.பிளாட் - இரண்டு படுக்கையறைகள் கொண்டது.
2. நான்குச் சக்கர வாகனம்.
3.இருச்சக்கர வாகனம்
4. மொபைல் போன்...

அதே கேள்வி ஆண்களிடம் :

1. டீ சர்ட்
2. கிரீடிங் கார்டு
3. வாழ்த்து

விசயத்துக்கு வருவோம்....மேலேயிருக்கற அந்த பாட்டையெழுதியது கவிஞர் வாசன்....படம் : ரெட்டை ஜடை வயசு (அப்படீன்னு நினைக்கிறேன்). ஆனா பாடல் காட்சியில் நடித்தவர் நம்ம அஜீத்.
இசையமைப்பாளர் : தேவா...

இதே பாடலாசிரியரோட இன்னொரு பாடல்...

முதன் முதலில் பார்த்தேன்..காதல் வந்தது...
எனை மறந்து எந்தன் நிழல் போகுது.
என்னில் இங்கு நானேயில்லை...காதல் போல ஏதுமில்லை....
எங்கே யெந்தன் இதயம் வந்து சேர்ந்ததா.....

இதுவும் மிகச்சிறப்பான இசையமப்பைக் கொண்டது.படம் : ஆஹா..

சில  வரிகள் :

நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்.

அந்த நொடி அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்...

நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய்...அடிக்கடி யென்னுடல் சிலிர்க்க வைத்தாய்....

ஹைரிஹரனுடைய ஹிட்ஸ் வாங்கினீங்கனா நிச்சயம் அதில் இந்த பாட்டு இருக்கும்

இன்னொரு பாட்டு : வானத்து தாரகையோ..யாரிவள் தேவதையோ....

படம் : பூந்தோட்டம்.

இதே மாதிரி நிறைய பாடல்களை இவரிடம் எதிர்பார்த்தேன்...ஆனால் துரதிஷ்டவசமாக இவர் மிக இளைய வயதிலேயே அதுவும் வளர்ந்து வரும் நிலையிலேயே மரணமடைந்துவிட்டார்...

3 கருத்துகள்:

அன்பேசிவம் சொன்னது…

ரெண்டு பாடலுமே என்க்கு மிகவும் பிடித்த பாடலகள்தான், அதிலும் முதன்முதலில் பார்த்தேன்.. அஹா..அருமை.

:-( அந்த பாடலாசிரியர், இறந்துவிட்டாரா?

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.முரளிக்கு : முதலில் என்னோட வலைப்பதிவிற்கு வருகை புரிந்ததற்கு நன்றி.அதனோடு கூடி பின்னோட்டமிட்டதற்கு மிக்க நன்றி.

ஆமாம்.இவர் சிறிய வயதிலேயே நன்றாக வளர்ந்து வந்த கொண்டிருந்த நிலையில் இறந்து விட்டார்.புத்தகத்தில் படித்ததா (அ) தொலைக்காட்சியில் தெரிந்துகொண்டதா என்று தெரியவில்லை.மேலும் இவருடைய மரணம் இயற்கை மரணமா (அ) விபத்தா யென்று கூட நினைவில்லை.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சிவா

அருமை அருமை பாடல் அருமை - முதுமைப் பருவத்து முத்தம் -- இவ்வரியில் பாடலாசிரியரின் சிந்தனைத் தெளிவு பாராட்டுக்குரியது சிவா.

பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா