செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நோக்கம்

சிறு வயது முதலே என்னையுமறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட வாசிப்பு பழக்கம், மெல்ல மெல்ல வளர்ந்து, எங்கு சென்று சேர வேண்டுமோ அங்கு கொண்டு வந்து என்னைச் சேர்த்திருப்பதாக நினைக்கிறேன். இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வாசிப்பு பழக்கம் என் பார்வையும் மூளையும் நன்றாக இயங்கும்வரையில் தொடர வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவணை வேண்டிக்கொள்கிறேன்.


வாசிப்பு நமக்கு ஒரு புதிய வாசலைத் திறந்து வைக்கிறது.வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது.
இந்த வாசிப்பு பழக்கம் என்னை வெறும் புத்தகப் புழுவாக மட்டும் மாற்றாமல் அதனோடு சார்ந்த அதற்க்கிணையான இசை,திரைப்படம் மற்றும் பயணம் ஆகியவற்றையும் நோக்கி என்னைத்  தள்ளியது, தள்ளிக்கொண்டிருக்கிறது.

இதைப் பற்றியெல்லாம் பகிர்வதற்கு,இதனோடு என்னுடன் பயணிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை என்னுடன் ஓரு தோழமையிருந்தது. ஆனால் வாழ்வின் நெருக்கடி எவரையும் விட்டு வைப்பதில்லை.எல்லோரயும் பின்னங்கால் பிடரியில் அடிக்கத்துரத்துகிறது.பரஸ்பர நல விசாரிப்புகளே அதிகமெனும்போது பகிர்தல் எங்கிருந்து சாத்தியமாகப்போகிறது. ஆனால் கடந்த நான்கைந்தாண்டுகளில் அதிகப் பிரபலமாயிருக்கும் இந்த வலைப்பதிவுலகம் பகிர்தலுக்கான இடமாக மட்டுமின்றி, ஒரே (அ) வெவ்வேறு அலைவரிசியிலிருக்கும் பலரையும் ஒன்றினைக்குமிடமாகவும் இருக்கிறது.

எனவே என்னுடைய பகிர்தலையும் அவற்றோடு இணைக்க விழைந்ததே இந்த வலைத்தளமுயற்சி.

2 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சிவா

நல்ல சிந்தனை - பக்ரவும் - பல்வேறு வரிசையில் இருப்பவர்களை ஒன்றிணைக்கவும் துவங்கப் பட்ட பதிவு. நன்று நன்று - நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா

அன்பரசன் சொன்னது…

Welcome to the blog.