ஏதாவது ஒரு இடத்தில் எனக்கென்று ஒரு வெளி கிடைக்கையில் நான் பகிர்ந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர் இவர்.என்னை தீவிர இலக்கியத்தின் பால் ஈர்த்தவரே இவர்தான்.இவரைப் பற்றியே இப்பதிவு.
சற்று வழுக்கையான முன்னந்தலை..பெரிய சோடா புட்டிக் கண்ணாடி வழுக்கைக்கு சம்பந்தமில்லாமல் முகமுழுவதும் தாடி...வேஷ்டி சட்டை....இவற்றோடு ஒரு அழகான மனிதர் இருக்கமுடியுமானால் அவர் நிச்சயம் திரு.சுந்தரராமசாமியாக மட்டுமே இருக்க இயலும். அவரை அழகாக மாற்றும் விஷயங்கள் இரண்டு மட்டுமே..ஒன்று அவருடைய புன்னகை..இன்னொன்று அவருடைய உரையாடல்...
என் வாசிப்பு என்பது முதன்முதலில் மூன்றாம் வகுப்பில் ராணீ காமிக்ஸ் படிப்பதில் துவங்கியது.உயிர் குடிக்கும் எரிமலைதான் நான் முதன்முதலில் படித்த புத்தகம்.குறைந்தது 10முறையாவது படித்திருப்பேன். அதிலுருந்து-தான் மாயாவி,கார்த்,இரும்புக்கை மாயாவி, பிளாஸ்கார்டன், மான்ட்ரேக் எல்லாம் என் உலகத்தை அளவுக்கு அதிகமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்-தார்கள்.ஒரு கட்டத்தில் இவை என் வாசிப்பிற்கு போதுமானவையாக இல்லை.எனவே என் முதல் புத்தகத் தேடல் ஆரம்பமாகியது..
அதன் பிறகு...லயன் காமிக்ஸ்,முத்து காமிக்ஸ்,பொன்னி காமிக்ஸ்,அம்புலி மாமா,பாலமித்ரா,க்ரைம் நாவல்,துப்பறியும் சாம்பு முதலான நூலகப்புத்த-கங்கள்,சரித்தர புத்தகங்கள்....என இவ்வாறு தேடித் தேடி படிக்க ஆரம்பித்-தேன்.
சாண்டில்யன், விக்கிரமன், அரு.ராமனாதன் எனவும், வைரமுத்து, மேத்தா, தமிழ்ழன்பன், கவிக்கோ, சிற்பி, தபூசங்கர், பா.விஜய், பழனிபாரதி, காப்மேயர், உதயமூர்த்தி, கனேசன்,லேனாதமிழ்வானன் என அத்தனையும் கடந்து
வந்து...பதினொன்றாம் வகுப்பிற்கு பிறகே...சீரீய இலக்கியங்கள் படிக்க ஆரம்பித்தேன்..
ஆனால் அப்போது அதுதான் சீரிய இலக்கியங்கள் என்று தெரியாது.ஏன் அப்படியொன்று இருக்கிறதே தெரியாது.அதன் பிறகு என் கல்லுரியின் முதலாமாண்டில் முதல் நாள் வகுப்பில் (தமிழ் பாடம்) தான் திரு.கா.சுப்ரமணியம் என்பவரின் மூலமாகத்தான் எனக்கு சீரிய இலக்கியங்கள் அறிமுகமாகத்தொடங்கியது.இதற்கிடையிலேயே நான் தலைகீழ் விகிதங்கள்(நாஞ்சில் நாடான்),ஒன்பது ருபாய் நோட்டு(தங்கர் பச்சான்),உயிர்த்திருத்தல்(யூமா வாசுகி)..படிந்திருந்தேன்...
நான் ஜே.ஜே.சில குறிப்புகள் புத்தகம் படித்து முடித்தது என் கல்லூரியின் முதலாமாண்டில்.எந்த நல்ல புத்தகமும் கிடைக்காமல் வேறு வழியின்றி ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகம் என நினைத்து அதை நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்தேன்.
ஆனால் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் பிரச்சனை ஆரம்பித்தது.என்னால் புத்தகத்தை பாதியில் கீழே வைக்கவும் முடிய-வில்லை.தொடர்ந்து படிக்கவும் முடியவில்லை..பாதியில் வைக்க முடியா-தற்கு காரணம்...அதனுடைய நடை.. உள்ளடக்கம்.. கதையமைப்பு.. உவமை-கள்....தொடர்ந்து படிக்க முடியாதற்கு காரணம்.....அதனுடைய கிண்டல் தன்மை மற்றும் கவித்துவ வர்ணனைகளை புரிந்து கொள்வதற்கான் நேரம்....
என்னை முதன்முதலில் தலைகீழாக புரட்டிப்போட்டப் புத்தகம். இத்தனைக்கும் இந்த புத்தகம் வெளிவந்தது 1981-82.நான் இந்த புத்தகத்தை வாசித்தது 2000. அப்படியிருந்தும் இந்த புத்தகத்தின் கதையோ..விவரிப்பு முறையோ...புத்தம் புதிதாகவேயிருந்தது.அந்த புத்தகத்தை படித்த அடுத்த நாள் நான் கல்லூரிக்குச்சென்றதும் முதலில் தேடிப்போனது..எனது தமிழாசிரியரையே...அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி..இந்த ஜே.ஜே? அவரைப் பற்றிய வேறு தகவல்கள் வேறேங்கு கிடைக்கும்? ..அவர் சொன்-னார் அது வாழ்க்கை வரலாற்று குறிப்பல்ல..அது ஒரு நாவல்.. ஜே.ஜே. என்பது கற்பனை கதாபாத்திரமென்று. என்னால் நம்பவே முடியவில்லை மேலும் ஆசிரியர் கூறியது...தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல்களில் முக்கியமான நாவல் இதுவென்றும்..மேலும் ஒரு நாவல் என்றால் அது இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்றும்....
பிறகென்ன அந்த புத்தகத்தை பற்றிய தகவல்களைத் தேடித்தேடிப் படித்-தேன்...நிறைய விமர்ச்சனங்கள் இந்த புத்தகத்தைப் பற்றி வந்திருந்தது. ஒரே ஒரு முக்கியமான சுவையான தகவலை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ளளாம் என்று நினைக்கிறேன்.
இந்த புத்தகத்தை படித்துவிட்டு சுமார் 30பக்கங்களுக்கதிகமாக ஒரு கடி-தத்தை ஒரு பிரபல எழுத்தாளர் திரு.சுரா அவர்களுக்கு எழுதி அனுப்பி-யுள்ளார்.அவரை நேரில் வந்து சந்திக்குமாறு திரு.சுரா கூறியுள்ளார். அவரும் நேரில் சென்று சந்தித்திருக்கிறார்.தனது விமர்ச்சனத்தையும் முன் வைத்திருக்கிறார்.அதன் பிறகு தொடர்ந்த உரையாடல்களில் இருவருக்-கிடையில் நட்பு மலர்ந்து அது பல ஆண்டுகள் நீடித்திருக்கிறது.
மேலும் இவருடய ஆளுமையென்பது மொழிபெயர்ப்பில் தொடங்கி கவிதை,சிறுகதை,நாவல்,விமர்ச்சனம்,சிறுபத்திக்கை மற்றும் பத்தியெழுத்து என எல்லாவற்றிலும் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார். மேலும் ‘காகங்கள்’ என்ற பெயரில் இவருடைய மாடியில் எழுத்தாளர் கூட்டங்கள் நடத்தியுள்ளார்.முக்கியமாக இவர் தவிர்க்கயியலாத கூர்ந்து கவனிக்கப் படவேண்டிய ஒரு சிந்தனை அமைப்பாக செயல்பட்டுள்ளார் என்றால் அது மிகையில்லை.
அதே போலவே மிகுந்த விமர்ச்சனத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.ஆனால் என்னைப் பொறுத்தவரை இவரைப் பற்றி சரியான,மிக முக்கியமான, நடு-நிலையான விமர்சனம் என்பது இதுவரை பதிவு செய்யப்படவில்லை-யென்றே நினைக்கிறேன்.திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் ஒரளவு பதிவு செய்திருக்கிறார்.ஆனால் எனக்குத்தெரிந்து திரு.எம்.எஸ் ஆல் மட்டுமே அதை சரியாக முழுமையாக செய்ய இயலும் என்பது என் எண்ணம்.
:
திரு.சுந்தரராமசாமி
பிறப்பு: 1931. நாகர்கோவில்.
இறப்பு: 14-10-2005, அமெரிக்கா.
நாவல்கள் :
1.ஒரு புளியமரத்தின் கதை(1966)
2.ஜே.ஜே.சில குறிப்புகள்(1981)
3.குழ்ந்தைகள் பெண்கள் ஆண்கள்(1998)
சிறுகதைகள்:
1.காகங்கள்(2000)
2.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்(2004)
கவிதை :
எல்லா கவிதைகளையும் சேர்த்து “சுந்தரராமசாமி கவிதைகள்” என்ற ஒரே தொகுப்பாக வந்திருக்கிறது.
விமர்சனம் :
1. நா.பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும்(1991)
2. காற்றில் கலந்த பேரோசை(1998)
3. விரிவும் ஆழ்மும் தேடி(1998)
மொழிபெயர்ப்பு :
1. செம்மீன் (1962)
தகழி சிவசங்கரப் பிள்ளை
2.தோட்டியின் மகன்.
தகழி சிவசங்கரப் பிள்ளை
3.தொலைவிலுருக்கும் கவிதைகள்.
நினைவுக் குறிப்புகள் :
1. ஜீவா (2003)
2. கிருஷ்ணன் நம்பி ( 2003 )
3. கா.நா.சு (2003)
4. சி.சு.செல்லப்பா.(2003)
பிற:
1. தமிழகத்தில் கல்வி
2. இவை என் உரைகள்
3. இதம் தந்த வரிகள் ( கு.அழகிரிசாமி-சு.ரா. கடிதங்கள்)
4. வாழ்க சந்தேகங்கள்
5. வானகமே..இளவெயிலே...மரச்செறிவே..
6. ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்.
விருதுகள் :
1.வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது- கனடா பல்கலை கழகம்.
2. வாழ்நாள் இலக்கியப் பணிக்காக ‘கதா சூடாமணி விருது’.
மேலும் சில சுவையான தகவல்கள் :
- 1988 ல் காலச்சுவடு என்ற சிற்றிலக்கிய இதழை ஆரம்பித்தார். இந்த மாதிரி ஒரு இதழை ஆரம்பிக்கவேண்டும் என்பது இவருடய கனவு என்று கூட சொல்லலாம்.
- தமிழின் மிக முக்கிய ஆளுமையான இவருடன் அன்றைக்கும் இன்றைக்கும் முக்கியமான எழுத்தாளர்கள் அனைவரும் இவருடன் தொடர்பிருந்தது.எனக்குத்தெரிந்தவர்கள் அழகிரிசாமி, .சு.செல்லப்பா, கா.நா.சு,வெங்கட் சாமிநாதன்,பிரமிள்,ராஜ நாரயணன்,நகுலன், நாஞ்சில் நாடன்,சுகுமாரன்,அரவிந்தன்,ஜி.நாகராஜன்,ஜானகி ராமன்,தொ.பரம சிவம்,அம்பை,யுவன் சந்திரசேகர், மௌனி, சி.மோகன், நீலபத்மநாபன், கிருஷ்ணன் நம்பி, கலாப்பிரியா, ஜெயகாந்தன், மனுஷ்யபுத்திரன், ராஜமார்த்தாண்டன், ஆற்றூர் ரவிவர்மா, ராஜ்சுந்தரராஜன், ராஜதுரை, பேராசிரியர் ஜேசுதாசன்,அ.முத்துலிங்கம்.
- இவருடைய பிரசாதம் என்ற சிறுகதையை திரு.பாலுமகேந்திரா அவர்கள் “கதை நேரத்தில்” நாடகமாக்கியுள்ளார்.அதை அவரைத் தவிர மிகச்சிறப்பாக வேறு யாராலும் கையாண்டிருக்க முடியாது.
- கோவை மத்திய சிறையில் இருந்த தடா கைதிக்கும் இவருக்குமிடையே சுமார் இரண்டாண்டுகளுக்கு மேலாக கடித போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது.
- இவர் கால்பந்தாட்ட ரசிகர்.
- மரபுகள் மீது பெரிய பற்றுகள் இல்லாதவர்.கடவுள் நம்பிக்கையில்லாதவர்.
- இவருடைய சவ அடக்கத்தின் போது கூட இவருடைய விருப்படி வழக்கமாக கடைபிடிக்கப்படும் எந்த மரபுகளும் கடைபிடிக்கப்பட-வில்லை.
இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.பதிவின் நீளம்(!!!) கருதி இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
இன்னும் சில இங்கு : http://azhiyasudargal.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக