வாழ்வின் ஏதாவது ஒரு அற்புத கனத்தையோ அல்லது அர்த்தத்தையோ படம்பிடித்து காட்டுவதே என்னைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல கலைப்படைப்பாகும்.வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையை ஏதாவது ஒரு வகையில் மாற்றி அமைக்கவேண்டும்.நம்மை நிலை குலைய வைக்கவேண்டும்.
எவரொருவரையும் மோசமானவராக சித்தரிக்காமல் அந்த சுழ்நிலை சார்ந்து அவருடைய செயல்பாடு அவ்வாறு அமைந்துவிட்டதாக நம்மை என்னச்செய்வதே ஒரு நல்ல கலை வெளிப்பாடாகயிருக்கும்.
இதுவரையில் எவற்றையெல்லாம் மிகச்சிறந்த இலக்கியமென்று நாம் சுட்டிக் காட்டுகிறோமோ அவற்றிலெல்லாம் இதுவே திரும்பத் திரும்ப பெறப்படுகிறது.இதை கலைப்படைப்பில் மட்டுமில்லாமல் ஆன்மீகத்திலும் உணரலாம். சூழ்நிலைகளுக்கேற்ப நம்மை வடிவமைத்து கொள்ள வேண்டுமேயன்றி சூழ்நிலையை நமக்கேற்றார்போல் வடிவமைத்துக் கொள்ள இயலாது.
மேற் கூறிய இந்த கருத்துகளின் அடிப்படையிலேயே நான் ஒரு கலைப் கலைப்படைப்பை அணுகுகிறேன்,மதிப்பிடுகிறேன்.
1 கருத்து:
அன்பின் சிவா
கலைப்படைப்பை அணுகும் முறை நன்று
நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா
கருத்துரையிடுக