வியாழன், 19 ஆகஸ்ட், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....


இளைத்த எண்களில் 
விரல் படும்போதிலெல்லாம்
உதிர்ந்த இலையென
ஒட்ட இடம் தேடி அலையும் ப்ரியத்தில்
கனத்த நினைவுகள்..
*
முடிச்சவிழ்ந்த ரகசியகங்கள்
ஒவ்வொன்றும் பூமிக்கு
வருகிறது மழையென்று....
*
ஏற்ற இறக்கத்தில் 
உன் சிரிப்பைப் போலவேயிருக்கிறது
நான் அடிக்கடி கேட்கும் வயலின் இசை
பின்னான சந்திப்புகளில்
நீ சிரிக்கையில் வயலின்
இசைக்கிறதா! வயலின் இசைக்கையில்
 நீ சிரிக்கிறாயா! பூசணிக்காயைச்
சுற்றும் எறும்பென
குழப்பத்தில் வீழும் பிரக்ஞை!

6 கருத்துகள்:

பாற்கடல் சக்தி சொன்னது…

பின்னிரண்டும் மிக நன்று. முதல் ஒன்றுக்கு, விருத்தியுரை எதிர் பார்க்கிறேன். நான் உங்க அளவுக்கு இல்லீங்க. கொஞ்சம் விளக்குனா தேவலாம்.

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி சக்தி முதல் வருகைக்கும்!!, வாசிப்பிற்கும்.

/முதல் ஒன்றுக்கு, விருத்தியுரை எதிர் பார்க்கிறேன். நான் உங்க அளவுக்கு இல்லீங்க. கொஞ்சம் விளக்குனா தேவலாம்./

பப்ளிக்..பப்ளிக்...தனியா நேர்ல....

க.பாலாசி சொன்னது…

//முடிச்சவிழ்ந்த ரகசியகங்கள்
ஒவ்வொன்றும் பூமிக்கு
வருகிறது மழையென்று....//

அடடா அழகான வடிவம்..

முதலொன்றில் திளைத்திருக்கிறேன்...

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி பாலாசி! வந்ததற்கும்,உங்கள் இரசனையை பின்னூட்டமிட்டதற்கும்.

Vettipullai சொன்னது…

அன்பாகவும்,,, செல்லமாகவும் இருக்கிறது கவிதை...

சு.சிவக்குமார். சொன்னது…

Vetti(means surgery)pullai அவர்களுக்கு : வந்து, வாசித்து, பின்னூட்டியதற்கு மிக்க நன்றி...