வானம் அன்றாடமாய்
மாலை நிகழ்வுகளின் குவியம்..
பறவைகளென
சிறகு கிளைத்த எழுத்துக்கள்
கூடிப் பிரியும் வெளியில்...
சமயங்களில் வார்த்தைகளாகவும்
சமயாசமயங்களில் வரிகளாகவும்...
கவிதை மனதில் கருக்கொள்ளும்
தருணம் நினைவில் அலைமோதும்.
உயரப் பறக்கும் புள்ளினங்களெல்லாம்
கருப்பாய் தெரிவது மாயமோ
மயக்கமோ....
7 கருத்துகள்:
மயங்கும் மாலைப்பொழுது...
மயக்கும் கவிதை....
கலக்குங்க கவிஞரே....
திரு.வெண் புரவிக்கு நன்றி. வந்து, வாசித்து, பின்னூட்டியதற்கு.
ம்ம்ம்... கவிதை கலக்கல்.
நன்றி சிங்குட்டி வந்து, வாசித்து, பின்னூட்டியதற்கு.
தப்பா நினைச்சுக்காதிங்க..வெண்புரவி, சிங்ககுட்டி...ஒரே வன உயிரினங்களா இருக்கு...என்னோட பிளாக்கு அப்டியா..யா.. இருக்கு....
கவிதை மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!
நன்றி எஸ்.கே.
I COULD SEE SOME MATURITY IN YOUR POEMS ....ESPECIALLY LAST TWO LINES WHICH ENDS WITH A QUESTION OF INTERNAL SEARCH......
கருத்துரையிடுக