ஒரு ஒலி உயிர்பிக்கலாம்
ஒரு பிரியத்தை,காதலை,நட்பை...
ஒரு முழுப்பேச்சில் இழக்கவும்
நேரிடலாம்
அதே பிரியத்தை,காதலை,நட்பை..
*
நீ..நானென்று முறைவைத்த
அழைப்புகளில் தளும்பிய நாட்கள் போய்
இப்போது
நீயா? நானா? என்று நீள்கிறது வெறுமனே
சில்லறை விசயங்களில்
முரண்பட்டு
*
இறந்துவிட்டதோ என துணுக்குறும்
நிமிடங்களில்... உயிர்ப்பின் உரத்த
ஒலி சுமந்திருக்கும் உன் குறுச்செய்தியை..
*
6 கருத்துகள்:
தலையும் வாலும் அருமை... வாழ்த்துகள் சிவா
நன்றி முர்ளீ.
//இறந்துவிட்டதோ என துணுக்குறும்
நிமிடங்களில்... உயிர்ப்பின் உரத்த
ஒலி சுமந்திருக்கும் உன் குறுச்செய்தியை//
கவிதை நல்லாயிருக்கு சிவா
தலைப்பு..?
நன்றி திரு.தலைப்புக் கொடுத்து கவிதை எழுதினா +விட -மைன்ஸ் ஜாஸ்தி..அதுவே தலைப்பு கொடுக்காமன்னா -விட + ஜாஸ்தி...ஹி..ஹி..அப்பாலிக்கா நேர்ல சொல்றேன்...
//நீயா? நானா? என்று நீள்கிறது வெறுமனே
சில்லறை விசயங்களில்
முரண்பட்டு//
அது என்னமோ சரிதானுங்க.. உணர்ரப்பதான் தெரியுது...
//இறந்துவிட்டதோ என துணுக்குறும்
நிமிடங்களில்... உயிர்ப்பின் உரத்த
ஒலி சுமந்திருக்கும் உன் குறுச்செய்தியை..//
அருமையா இருக்குங்க...
நன்றி பாலாசி...
கருத்துரையிடுக