வியாழன், 20 ஜனவரி, 2011

ஒரு பகல் பொழுது..

ஆகாயம்:

காகிதத் துனுக்குகளில்
சவரக்கத்தியில் வளித்த
நுரை பொதி மேகங்கள்...

ஜன்னல் வழி:

குனிந்து குனிந்து
வளர்ந்து...வளர வளர
குனியும்
 ஊசியிலை நெடுமரம்.......


அறை :

வாசனைத்திரவியமாய்
வியாபித்திருக்கும் வெளிச்சம்


அறைக்கு பின்புறம்:

ஞாபக வெளியைத் துலாவும்
பறவையின் குரல்


தெரு:

விமோச்சனமில்லாத சாபம்
தந்தவன் நினைவில் படும்பொழுதெல்லாம்
குரைக்கும் நாய்....


மனம்:

எதாவது ஒன்றைத் தொட்டு 
அறுந்தும், தொட்டுத் தொடர்ந்தும்
இருக்கும்  யோசனைகள்

2 கருத்துகள்:

பத்மா சொன்னது…

கவித கவித

நல்லா இருக்கீங்களா நண்பர்?

அன்பேசிவம் சொன்னது…

welcome back!
எங்க சிவா இந்தப் பக்கம் ஆளையே காணோமே?