வழக்கமான உற்சாகங்கள் ஏதுமின்றி ஒரு விடுமுறை தினமாக மட்டுமே கழிந்தது தீபாவளி. பண்டிகைகள்,பிறந்த நாள்கள் மற்றும் ஏதாவது முக்கிய நிகழ்வுகள், நன்றாக சாலையில் ஒடிக்கொண்டிருக்கும் வாகனம் திடீரென்று நம் கட்டுப்பாட்டை மீறித் இடவலமாக திமிறும், நிறுத்தி பின் சக்கரத்தை உற்று நோக்கும் செயலைப் போல் வாழ்கையின் கடந்த நாள்களை நிதானித்து நோக்குவதற்கு வாய்பளிக்கிறது....
இந்த வருடப் பண்டிகை போனவருட பண்டிகையையோ அல்லது அதற்கு முந்திய எதாவது ஒரு பண்டிகையையோ நினைவுபடுத்துகிறது.
அதிலும் தீபாவளிப் பண்டிகைகள் மிக விசேசமானைவையாகும்.. .புத்தாடை,பலகாரங்கள் இரண்டுமோ (அ) எதாவது ஒன்றோ என ஏனைய பண்டிகைகளிலிருந்து விடுபட்டு தனித்து நிற்கும் தீபாவளியின் சிறப்பு பட்டாசுகளினால்.....
கையில் பத்துவிரல்களிருப்பதே ஆரம்பள்ளிகளின் கணக்குகள் தாண்டி பண்டிகைத் தேதியை வாரங்களாக,நாட்களாக எண்ணி மகிழத்தான்....
மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிடும் பால்ய கால தீபாவளி...ஒருமாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது விடலைத் தீபாவளி..வரப்போகும் மனைவியைப்போலவோ,வந்து நிற்கும் காதலியைப் போலவோ,அழைப்பிதழ் தந்து செல்லும் தோழியைப்போலவோ இருக்கிறது விடலை பதுங்கி, முதிர்வின் நிழல் தெரிபடத் துவங்கும் இந்த வயதுகளின் தீபாவளி...
வாழ்க்கையின்,பண்டிகைகளின் சலிப்புகள் பற்றி படராதவர்கள் பாக்கியாவான்கள்...ஆனால் எனக்கோ புத்தகம் தொடங்கி,படம்,இசையென பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது சலிப்புகளின் மேலேறி வர..
எதிலும் பங்கேற்காமல் ஒரு வேடிக்கையாளானாய் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து ரசித்து தாண்டிப் போக பழகிக்கொண்டிருக்கிறேன்.. எதிலும் பட்டுக்கொள்ளாமலும், பங்கேற்காமலும் இருப்பதென்பது அவ்வளவு சுலபமானதாகவில்லை...
ஒரு புள்ளியைச் சுற்றியுள்ள சாத்தியப்பாடுகள் அதிக ஆர்வத்தையும் தரும் அதற்கீடான சலிப்பையும் தரும்..அவரவர் மனோநிலையை பொறுத்தது இது.
அணிந்திருக்கும் கண்ணாடிகளுக்கேற்ப மாற்றங்கள் பெறும் பிம்பங்கள் மட்டுமே எல்லா நாட்களும்...
4 கருத்துகள்:
//எதிலும் பங்கேற்காமல் ஒரு வேடிக்கையாளானாய் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து ரசித்து தாண்டிப் போக பழகிக்கொண்டிருக்கிறேன்.//
yov sivaa... ennaiyaa aachchu... etho 60 vayasu aalu mathiri pesuringa? its too bad sivaaa....
முர்ளீ....இது வேற....அறுபது வயசில நாம எங்க போயிருக்கனுமோ..அங்க இப்ப போறது..இது வாழ்க்கையை விட்டு ஒடிர மாதிரி இல்லை...வாழ்க்கையை இன்னும் அழகா...முழுமையா எந்த உடன்பாடும்,மறுதலிப்பும் இல்லாமல் அனுகுவது...
எப்போதோ வரவேண்டிய எனக்கு இப்போதுதான் வரவாய்க்கிறது சிவக்குமார்.உங்களைப் போன்ற தமிழார்வமும் இசைஞானமும் மிக்க இளையவர்களிடமும் கவிஞர்களிடமும் நெருங்கும்போது என் இளமையை மீட்டெடுக்கிறேன்.
பண்டிகைகள் குறித்த உங்கள் பதிவோடு வாசிக்கத் தொடங்குகிறேன்.
//வரப்போகும் மனைவியைப்போலவோ,வந்து நிற்கும் காதலியைப் போலவோ,அழைப்பிதழ் தந்து செல்லும் தோழியைப்போலவோ இருக்கிறது விடலை பதுங்கி, முதிர்வின் நிழல் தெரிபடத் துவங்கும் இந்த வயதுகளின் தீபாவளி//
அருமையான உவமை.
தொடர்ந்து போகும் வார்த்தைகள் நீங்கள் எங்கு தொடங்கி எங்கு வந்தடைந்திருக்கிறீர்கள் என்றும் காட்டுகிறது சிவக்குமார்.
உங்கள் மனம் அமைதியில் நிரம்பி பிறரையும் மகிழ்வூட்டும் ரகம்.இது தொடரட்டும்.இனி அடிக்கடி வருவேன்.
திரு.சுந்தர்ஜி அவர்களுக்கு, மிக்க நன்றி உங்களின் திடீர் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.
உங்களை ரொம்ப காலமாகவே தொடர்ந்தோ,அவ்வப்போது இடைவெளி விட்டோ தொடர்ந்து வாசித்து வருகிறேன்..
உங்களின் கவிதைகளோடு உங்களுடைய இசை ரசனை,உங்கள் மர நிழல்,உங்கள் தள அமைப்பு,உங்கள் கவிதைக்கான படம் என்று எல்லாவற்றின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. நண்பர்களுடனான அளவுளாவும்போது அவர்களிடம் அடிக்கடி பரிந்துரைக்கும் தளங்களில் உங்க தளமும் ஒன்று....
மேலும் உங்களின் மூலமாக நான் சில நல்ல கவிஞர்களின் தளங்களுக்கும் செல்வதுண்டு...கமலேஷ், தஞ்சாவூர்கவிராயர்,சைக்கிள்,உப்புமடச் சந்தி இன்னும் சிலர் உடனே ஞாபகத்திற்கு வரவில்லை...
எனவே நீங்கள் கவிதை எழுதுபவர்களுடன் தொடர்ந்த வாசிப்பின் மூலமும்,ஊக்கமான பின்னுட்டத்தின் மூலமும் ஒரு நிரந்தர தொடர்பில் இருப்பவர்...
ஒவ்வொரு நாளும் புதிதாய் ஒரே செடியில் பூக்கும் பூவைப்போல் உங்களுடைய தளத்தையும் அவ்வப்போது மாற்றி ஒரு புதுமெருகை தக்க வைத்தேக்கொண்டே வருகிறீர்கள்...
அடிக்கடி பூக்கும் குறிஞ்சி உங்கள் கவிதை...
எனவே மேற்க்கண்ட உங்களுடைய பின்னூட்டம் ஒரு அதீத அன்பின், நல்ல நட்பிற்கான அறிமுக வார்த்தைகளாக மட்டுமே எடுத்துக்கொள்கிறேன்...உங்கள் தொடர்வருகைக்காகவாவது மறுபடியும் அதிக இடைவெளியின்றி எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.....
கருத்துரையிடுக