வெள்ளி, 1 அக்டோபர், 2010

வரிக்கு வரி
அழுத்தம் திருத்தமாக
இரண்டு முறைகள்
சப்தமாக தன் கவிதையை வாசிப்பது
அவர் வழக்கம்..

நாட்களின் நகர்வில்
அவருடைய சப்தங்களே  

கவிதைகளாயின...
                ****
விசேச தினங்கள்

1)
தர நினைத்து
தரத் தயங்கி
தரயேலாமல்
நினைவாய் வைத்துக்கொள்ளும்
வாழ்த்து அட்டைகள்
வாங்குவதற்கு...

2)
வாழ்த்துக்கள் நுரைத்துப்
பொங்கும் விசேச தினங்களில்
என் விசேங்கள் நுரைப்பதோ
உன் வாழ்த்துகளில்

2 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

முதல் கவிதையை மற்ற இரண்டைக் காட்டிலும் பிரமாதமாக இருக்கிறது.
பதிவர் ஒருவர் என்னிடம் இவ்வாறாகக் குறிப்பிட்டிருந்தார்..

“முதல்ல இருக்கிற கவிதையை வெச்சு பிரபலமாகுங்க, அப்பறம் நீங்க சும்மா கிறுக்கினா கூட அது நல்ல கவிதையா மாறிடும்”

ஒரு செயலுக்கு நிர்ணயிக்கப்படாத எல்லையுண்டு. அந்த எல்லையை அடைந்த பிறகு அச்செயல் நிர்ணயிப்பதே எல்லை!!

கவிதைகளுக்கு வாழ்த்துக்கள்!

சு.சிவக்குமார். சொன்னது…

முதற்கண் வந்து, வாசித்து, பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி!

ஆனால் ஆதவா உங்களை நான் திரு.மகுடேசுவரனுடனான சந்திப்பிற்கு பின்னிருந்து வாசித்து வருகிறேன்...

கவிதையானாலும் சரி,கட்டுரை, கதையானாலும் சரி.நுழைவதற்கு அத்தனை எளிமையானவை அல்ல.

ஒரு தேர்ந்த வாசிப்பும்,புரிதலுமின்றி அவை எளிதில் திறக்காது. குறிப்பாக கவிதை..எனக்கு புரிந்ததே கிடையாது...இருப்பினும் சொற்பிறயோகம் மற்றும் வடிவத்திற்காக தவறாமல் வாசிப்பதுண்டு.

எனவே உங்களின் பின்னூட்டத்தை நம் பரிச்சையத்திற்கான அடையாளமாக மட்டுமே கொள்ள முடியும்.