வியாழன், 22 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து...

நாயொன்றின் மீது
பிரியம்...வீட்டினுள் என்பதால்
உயர்சாதியே தேர்வாகிறது..
முதலில் உணவு, பிறகு
உங்களின் மொழியென பழக்குகிறீர்கள்....
நாயும்  தவழ்கிறது நன்றாகத் தரையில்
கூட நாவில்.....
நாயும் பெரிசாச்சு..
வீட்டுக்கு காவலாச்சு ...
தெருவை மிரட்டலாச்சு...
கதவை நீக்கும் போதே குரைக்க,
நுழைந்த பின் முகர்ந்து பார்க்க,
வால் குழைத்து சினுங்க,
ஒலிக்குறிப்பிற்கேற்ப அமர,ஆர்பரிக்க
தோள்களில் முன்னங்கால்களை வைக்க
என நாயும் பழக்கிக்கொண்டது

தட்டுச்சோற்றுக்கும்,வயிற்றுப்பாட்டுக்கும்...

அவ்வப்போது கண்ணில் இடறியதால்
நீக்கியாகிவிட்டது வாலையும்...
இப்பொழுதும் இறக்கை கட்டுகிறது உங்கள்
பேச்சு நாய்கள் மேலான உங்கள் பிரியம் சுட்டி..

நின்று  முகர்ந்து,வெரித்து
”நாய்கள் ஜாக்கிரதையை”
ஈரமாக்கிவிட்டுப்போகும்
இன்னும் சுயம் திரியாத
நாயொன்று...

5 கருத்துகள்:

பத்மா சொன்னது…

சுயம் திரியாத நாய் .....

என்ன ஒரு பிரயோகம் ..

இது போல சுயம் திரியாத மனிதரும் உண்டோ?

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சார்

Raman Kutty சொன்னது…

//நின்று முகர்ந்து,வெரித்து
”நாய்கள் ஜாக்கிரதையை”
ஈரமாக்கிவிட்டுப்போகும்
இன்னும் சுயம் திரியாத
நாயொன்று.'///

சிவ, சிவா:-)))

சு.சிவக்குமார். சொன்னது…

பத்மா மேடம் : ரொம்ப நன்றி..
கூடுதலாக உங்களுக்கொரு செய்தி ”அவளை காதலித்ததற்கு
ஒரு கடவுச்சொல்லும்
சொற்ப நினவுகளும் தான் மிச்சம்” என்ற ரீதியில் ஒரு கவிதை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கடவுச்சொல்லை வைத்து நீங்களே கவிதை எழுதிவிட்டதால் (மிக அற்புதமாக எழுதியிருந்தீர்கள்) என் கவிதை பாதிலேயே தொக்கி நிற்கிறது.


ராமன் சார் : என்னுடைய கவிதையைக் காட்டிலும் உங்கள் பின்னூட்டத்தில் கூடுதல் அர்த்தமிருப்பதாகத் தெரிகிறது.(என்னை வச்சு..காமிடி..கீமிடி..பண்ணலையே...)

பத்மா சொன்னது…

பாதியிலேலாம் நிற்க கூடாது ..உடன் அதை முடித்து பதிவேற்றுங்கள்

சு.சிவக்குமார். சொன்னது…

முயற்சிக்கிறேன் மேடம்.