சனி, 10 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து..
















கனவுகள் கலைந்து போகும்...

பளிச்சென மின்னலாய் வெட்டும்

மறுப்பின் நொடி..

இடிக்கத் தொடங்கும

இல்லாமல் போன இந்நிமிடங்கள்..

சட்டென தொடங்கும் ஞாபகமழை

நனையத்தொடங்கும்

மனம்..

ஈரத்தில் நனைந்த நிமிடங்கள்

வெடவெடக்கும் கடிகாரத்தில்..

நமுத்துப்போய்க் கிடக்கும்

ஆற்றாமைகள்..

தவறிய விரல் மீண்டு வாய்வருவதற்குள்

பிரளயத்தை புரட்டும் குழந்தையென

எல்லாமும் நிகழ்த்திவிட்டு்

மெல்ல திரை விலகும் நேரம்

கனுக்காலிலிருந்து

ஊமைக் கண் சிமிட்டும்...

உன்னை மட்டுமே ஞாபகமூட்டும்

பக்கத்துவீட்டுப் பெண்ணின்

கொலுசொலி..

4 கருத்துகள்:

santhanakrishnan சொன்னது…

முதல் காதலின் தடம்
மனசில் கல்வெட்டாய்
பதிந்து விடுகிறது.
கவிதை நன்று.

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.சந்தானகிருஷ்ணன் அவர்களுக்கு : வந்து,வாசித்து,பின்னூட்டமிட்டதற்கு நன்றி

பாலா சொன்னது…

அடடா அருமைங்க
"தவறிய விரல் மீண்டு வாய்வருவதற்குள்

பிரளயத்தை புரட்டும் குழந்தையென"

இங்கிருந்தே கவிதைக்குள் நுழைகிறேன் நண்பா

கொலுசொலிகள் மீட்டும் ஞாபகச்சித்திரங்கள் அருமைங்க

உயிர் தின்னும் கொலுசொலிகள் :((

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.பாலாவிற்கு : நான் புதுசா வேற என்னங்க சொல்லப் போறேன்..

keep reading..keep reading keep on reading (பெப்சி உமா குரலில் கற்பனை செய்துகொள்ளவும்).

பின்னூட்டத்திறகு மிக்க நன்றி பாலா..