சனி, 11 ஜூன், 2011

நினைவுகள்



சிறகொடுக்க
வெட்டவெளியில்
அலையும் பறவைகள்

புழக்கமிழந்த

கட்டிடத்தில்
நுழைந்தவன்
முகத்தில் முட்டிமோதும்
வௌவ்வாள்கள்

கலக்கிய நீரையும்
துப்பிய எச்சிலையும்
மொய்க்கும் குளத்துமீன்கள்

காற்றின் திசைக்கு
ஒப்புக்கொடுக்கும்
மேகங்கள்

சந்தியில் கூடடையும் குரல்கள்

காற்றுலுக்கும் இலைகள்

கரையொதுங்கும் வண்டல்

காலடியில் கரையும் மணல்

போத்தல்களிலிருந்து பொங்கும் நுரை

உலரும் கரையீரம்

கல்லெறிந்த தேன்கூடு



2 கருத்துகள்:

மிருணா சொன்னது…

நினைவுகள் குறித்த எத்தனை உருவகங்கள்! அவற்றில் சரி பாதியாக இனிமையானவைகளும், கடுமையானவைகளும் இருப்பது கவிதையை சமன் செய்கிறது. ஒரு ஆடும் தராசு போல இருக்கும் இது போன்ற கவிதையை இப்போதுதான் கவனிக்கிறேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

சு.சிவக்குமார். சொன்னது…

வந்து,வாசித்து,பின்..னூட்டியதற்கு மிக்க நன்றி....உங்கள் வருகை ஆச்சரியத்தையும்..பெரு மகிழ்வையும் கொடுத்தது....