வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஊரைப் பற்றி

ஊருக்கு ஆறு அழகு....ஊர்வலத்தில் தேரழகு.....

எங்க ஊர்ல இந்த ரெண்டுமேயிருக்குது.....ஆனா ஆறு போனத் தடம் மட்டுமே இப்பயிருக்குது.....எப்பவாவது பெருமழை பொழிஞ்சுதுனா மட்டும்....தற்காலிகமா ஒரு சிற்றாறு ஓடும்.......

ஆனால் வருடம் தவறாமல் சித்திரை மாதத்தில் நிச்சயம் தேரோடும்...

தமிழ்நாட்டுல திருவாரூர் தேருக்கப்பறம் எங்க ஊர் தேருதாங்கறது செவி வழி வழக்கு....

எங்க ஊர் பற்றி ஒரு சிறு குறிப்பு...

ஊர் பேர் : அவினாசி...காசில வாசி (அப்படீன்னா பாதி) அவினாசிங்கறது எங்க ஊர் பெரிசுங்களோட சொலவடை...

இங்கு கோவில் கொண்டிருக்கும் லிங்கேஸ்வரர் ஆசியினால் வளமான ஊர் அப்படிங்கிறதுனால அவினாசி : அவன்(னுடைய)+ஆசி.ஏதோ நமக்குத் தெரிஞ்சது.. (...தமிழய்யா உங்க பேர காப்பத்திடேன்னு நினைக்கிறேன்...)

இங்கிருந்து கோவைக்கு 47கி.மீ....ஈரோட்டுக்கு 60கி.மீ...திருப்பூருக்கு 12கி.மீ....சக்திக்கு 35கி.மீ...கோபிக்கு 45கி.மீ.... ஊட்டிக்கு..90கி.மீ..(மேட்டுப்பாளையம் வழியாகத்தான் போகனும்)

நியூ திருப்பூர் மற்றும் எல்& டீ (L&T) சாலை: சென்னை-கொச்சின் வரும் வரையில் அதிக நெருக்கடிகளும்,சந்தடிகளும் இல்லாமல் இருந்த ஊர்.

ரொம்ப சின்ன ஊர்..ஆனா சுற்றுப்புறத்தில் அழகான கிராமங்களைக் கொண்ட ஊர்...பொதுவா திருப்பூர் மாதிரி முக்கியமான தொழில் நகரம் பக்கதிலிருக்கும்போது இந்த மாதிரியான சின்ன ஊர அதிகமா கண்டுக்க மாட்டங்க....அதனால எல்லா வசதிகளுக்கும் அந்த ஊரைச் சாந்திருக்க வேண்டியிருக்கும்.....

ஆனா அவினாசி அப்படியில்லை...தனி அரசு மருத்துவமனை,தபால் நிலையம்,தொலைபேசி நிலையம்,வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO office...சரியா!!!...) 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளி...பொறியியல் கல்லூரி(தனியார்)... காய்கறி சந்தை...பேருந்து நிலையம்...கோவை,சேலம் போன்ற ஊர்களுக்கு 24மணிநேர பேருந்து சேவை....ஒரிரு பெரிய தொழில் நிறுவ-னங்கள்  ...தாசில்தார் அலுவலகம்..சார்பு நீதி  மன்றம்... நூலகம்.. பூங்கா.. 3 திரையரங்கங்கள்.....(கொஞ்சம் அதிகமோ..ச்ச..ச்சே..ஊர் பெருமைன்னா..சும்மாவா...)

கொங்கு நாட்டில் இருக்கும் பழம்பெரும் பெரிய கோவில்கள் இரண்டு. 

1. கோவைப் பேருர் பட்டீஸ்வரர் கோவில்

2. அவினாசி லிங்கேஸ்வரர் கோவில்....(எங்க ஊருதாங்க.)

இரண்டுமே சிவன் கோவில்கள்...முக்தி பற்றிய பேச்சு வருகையில் ( திருவண்ணாமலைப் பற்றி மனதால் நினைத்தாலே முக்தி) அவினாசி பற்றி கேள்விப்பட்டாலே முக்தி கிடைக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தாக நினைவு.(கொசுறா கெடைச்சாலும் இனிப்பா கெடைச்சா சும்மாவா!)

சுந்தரரால்( ஆழ்வாரா!!) பாடல் பெற்ற தலம். (முதலையிடமிருந்து சிறுவனை மீட்ட கதை...தெரியாதவங்களுக்கு இன்னொரு(பெரிய்..ய

பதிவில் சொல்றேன்...)

எங்க ஊர்ல மொத்தம் ரெண்டு தேர். சின்னதொன்னு,பெரிசொன்னு..

இந்த தேருக்கு பின்னாடி ஒரு பெரிய கதையிருக்கு அத இன்னொரு பதிவில் சொல்றேன்....அனேகமா சூத்ரதாரி(கோபாலகிருஷ்ணன்)  இதைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறார்னு நினைக்கிறேன்..

வர்ற ஞாயிற்றுக் கிழமை (25/4/10) இந்த தேர் திருவிழா தொடங்குது...

பொதுவா முதல் நாள் வடம் பிடிக்கிற நிகழ்ச்சி..இது வழக்கமா இரவில் தான் தொடங்கும்(சுமார் 12 மணியிருந்து 1 மணிக்குள்ள தொடங்கும்) ஒரு குறிப்பிட்ட தூரம்வரையோ...இல்ல 2 மணிவரைக்குமோ இழுத்திட்டு நிறுத்திருவாங்க....இந்த ஒரு நாள் மட்டும்தான் மனித சக்திய அதிகமா பயன்படுத்துவாங்க...அடுத்த நாள் இயந்திரங்களை அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சிருவாங்க...

தேரடி வீதியில் தேவதைகளுக்கும் நிச்சயம் பஞ்சமிருக்காது.. SO....எல்லோரும் கண்டிப்பா வாங்க...

1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

சொந்த ஊரப்பத்தின அருமையான இடுகை - அத்த்னையையும் சிந்தித்து எழுதிய விதம் நன்று சிவா - தேரின் பெருமை சொல்லவும் வேண்டுமோ - நல்வாழ்த்துகள் சிவா
நட்புடன் சீனா